மகாபாரதம் (2013 தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாபாரதம்
மகாபாரதம் தொடரின் சுவரொட்டி
வேறு பெயர்மகாபாரதம்
வகைதொன்மவியல்
உருவாக்கம்சித்தார்த் குமார் திவாரி
மூலம்மகாபாரதம்
எழுத்துஷர்மின் ஜோசப்
ராதிகா ஆனந்த்
ஆனந்த் வர்தன்
மிகிர் புத்தா
சித்தார்த் குமார் திவாரி
இயக்கம்சித்தார்த் ஆனந்த்
அமர்பிரீத் ஜி
எஸ் சவ்டா
கமல் மோகா
லோக்நாத் பான்டே
நடிப்புசெளரப் ராஜ் ஜெயின் ஷஹீர் ஷேக்
பூஜா ஷர்மா
அகம் ஷர்மா
முகப்பு இசைஇஸ்மாயில் தர்பார்
முகப்பிசை"அகிலம் போற்றும் பாரதம்"
பிண்ணனி இசைஅஜய்-அட்டுள்
இஸ்மாயில் தர்பார்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
மொழிமாற்றம்
தமிழ்
மலையாளம்
பெங்காலி
தெலுங்கு
அத்தியாயங்கள்267
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்சித்தார்த் குமார் திவாரி
காயத்ரி கில் திவாரி
ராகுல் குமார் திவாரி
ஓட்டம்30 நிமிடங்கள் (விளம்பர இடைவேளையுடன்)
தயாரிப்பு நிறுவனங்கள்ஸ்வஸ்திக் பிக்சர்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைஸ்டார் பிளஸ் (இந்தி)
விஜய் தொலைக்காட்சி
(தமிழ்)
படவடிவம்576i (SDTV) 1080i (HDTV)
ஒளிபரப்பான காலம்22 செப்டம்பர் 2013 (2013-09-22) –
16 ஆகத்து 2014 (2014-08-16)
வெளியிணைப்புகள்
Official Website
தயாரிப்பு இணையதளம்

மகாபாரதம் என்பது விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 7, 2013 முதல் ஒளிபரப்பான ஒரு புராண தொன்மவியல் காவியத்தொடர் ஆகும். இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பானது. இக்காவியம் 100 கோடி பொருள் செலவில் எடுக்கப்பட முதல் இந்திய தொடர் ஆகும்.[1] இந்த தொடருக்கு வி. பாலகிருஷ்ணன் வசனம் எழுத, பாடலாசிரியர் ருக்மணி ரமணி பாடல் எழுதியுள்ளார்.

இந்த தொடர் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மகாபாரத்' என்ற தொடரின் தமிழாக்கம் ஆகும். இந்த தொடர் செப்டம்பர் 22, 2013 முதல் ஆகத்து 16, 2014 வரை ஒளிபரப்பாகி 267 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.

மொழிமாற்றம்[தொகு]

தொடரை செவன்த் சேனல் சமஸ்கிருதம் கலந்த தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளது. இந்த தொடர் இந்திய மொழிகள் ஆனா தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், மராத்தி, மற்றும் வங்காள மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொடர் இந்தோனேசிய மொழியிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விமர்சனங்கள்[தொகு]

தொடரின் வசனங்கள் முழுக்க முழுக்க தமிழ்மொழியில் மொழிபெயர்க்கப்படவில்லை என்றும், தமிழ் மொழிபெயர்ப்பில் சமஸ்கிருத வார்த்தைகளே நிறைந்துள்ளன என்று விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.[மேற்கோள் தேவை]

ஒளிபரப்பாகும் நேரம்[தொகு]

  • இந்தி மொழியில் மஹாபாரத் என்ற பெயரில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8:30 மணிக்கு ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
  • தெலுங்கு மொழியில் மகாபாரதம் என்ற பெயரில் மொழிமாற்றான் செய்யப்பட்டு திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 4:30 மணிக்கு மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
  • மலையாளம் மொழியில் மகாபாரதம் என்ற பெயரில் மொழிமாற்றான் செய்யப்பட்டு திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஏஷ்யாநெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
  • வங்காள மொழியில் மஹாபாரத் என்ற பெயரில் மொழிமாற்றான் செய்யப்பட்டு திங்கள் முதல் சனி வரை மாலை 5 மணிக்கு ஸ்டார் ஜல்சா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

நடிகர்கள்[தொகு]

  • சவ்ரப் ராஜ் ஜெயின் - வாசுதேவ கிருஷ்ணன்
  • சாகிர் சேக் - அர்ஜுனன்
  • பூஜா ஷர்மா - திரௌபதி
  • அகம் ஷர்மா - கர்ணன்
  • ஆரவ் சௌத்ரி - பீஷ்மர்
  • பிரனித் பட் - சகுனி
  • ரோகித் பரத்வாஜ் - யுதிஷ்ட்டிரன்
  • சவ்ரவ் குஜார் - பீமன்
  • ஆர்பிட் ரன்கா - துரியோதனன்
  • வின் ராணா - நகுலன்
  • லாவண்யா பரத்வாஜ் - சகாதேவன்
  • நிசார் கான் - த்ரோணாச்சாரியார்
  • பல்லவி சுபாஷ் - ருக்மணி
  • அட்டுல் மிஷ்ரா - வேதவியாசர்
  • புனித் இச்சர் - பரசுராமர்
  • சச்சின் வர்மா - தேவேந்திரன்
  • சயன்தனி கோஷ் - சத்யவதி
  • சமிர் தர்மாதிகாரி - சாந்தனு
  • நிர்பை வத்வா - துச்சாதனன்
  • விபா ஆனந் - சுபத்திரை
  • பராஸ் ஆரோரா - அபிமன்யு
  • ரிச்சா முகர்ஜி - உத்தரை
  • ஷிகா சிங் - சிகண்டி / சிகண்டினி
  • அனுப் சிங் தாகூர் - திருதராஷ்டிரன்
  • ரியா தீப்சி - காந்தாரி
  • சஃபாக் நாஸ் - குந்தி
  • நவீன் ஜிங்கர் - விதுரன்
  • கரிமா ஜெயின் - துச்சலை
  • சுதேஷ் பெர்ரி - மாகாராஜா துருபதன்
  • கரன் சுஷக் - திருஷ்டதுய்மணன்
  • நஜியா காசன் சையத் - விருஷாலி
  • அலி காசன் - தக்ஷகன்/ஜெயத்ரதன்
  • அன்கிட் மோஹன் - அசுவத்தாமன்

இவற்றை பார்க்க[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]