மகான் தளம்
மகான் தளம் | |
---|---|
தலைவர் | கேசவ் தேவ் மவுரியா |
நிறுவனர் | கேசவ் தேவ் மவுரியா |
தலைமையகம் | பிரிவு-30, பரிதாபாது, அரியானா |
கூட்டணி | சமாஜ்வாதி கட்சி (2020-முதல்) |
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்., (உத்தரப் பிரதேச சட்டமன்றம்) | 0 / 403 |
இணையதளம் | |
www.mahandal.com | |
இந்தியா அரசியல் |
மகான் தளம் (Mahan Dal)(மொழிபெயர்ப்பு : பெரிய கட்சி) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் கேசவ் தேவ் மவுரியாவால் நிறுவப்பட்ட இந்திய அரசியல் கட்சியாகும்.
அரசியல்
[தொகு]11 மார்ச் 2014 அன்று ராஷ்ட்ரிய பரிவர்தன் தளத்தின் தலைவர் டி. பி. யாதவ் உடனான செய்தியாளர் கூட்டுக் கூட்டத்தில் மௌரியா, "எங்கள் கட்சிக்கு எந்த சித்தாந்தமும் இல்லை. . . நமது சமூகத்தின் நலனுக்காக அதிகாரத்தை கைப்பற்றுவதே எங்களது முக்கிய நோக்கம். . . எல்லோரும் அப்படிச் செய்கிறார்கள் ஆனால் நான் அதை வெளிப்படையாகச் சொல்கிறேன்”.[1] என்றும் "மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நிலை இவரது கட்சிக்கு இல்லை" என்றும், "ஆர். பி. டி. உடனான கூட்டணி எதிர்காலத்திலும் தொடரும்" என்றும் மௌரியா கூறினார்.
தேர்தல்கள்
[தொகு]2014 மக்களவை தேர்தல்
[தொகு]மகான் தளம் இந்தியத் தேசிய காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைந்தது. மேற்கு உத்தரப் பிரதேசம் மகான் தளம் மூன்று மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டது. இவை, பாதாவுன், நாகினா மற்றும் ஏட்டா.[2] இராஷ்டிரிய லோக் தளம் காங்கிரசுடன் ஏற்பட்ட உடன்பாட்டின்படி எட்டு தொகுதிகளில் போட்டியிட்டது.[3]
மகான் தளம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான குறிப்பாக மேற்கு உ. பி. பகுதிகளில் வாழும் சாயக்குகள், மவுரியாக்கள், மற்றும் குசவாகக்கள் ஆதரவினைப் பெற்றதாகக் கூறப்பட்டது.[4] ஆனால் மகான் தளம் வேட்பாளர்கள் போட்டியிட்ட மூன்று இடங்களையும் இழந்தது.
2019 பொதுத் தேர்தல்
[தொகு]இத்தேர்தலில் அனைவரையும் சமமாகப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியலைக் கட்சி பின்பற்றும் என்று காங்கிரஸ் தலைவர் கூறினார். பிரியங்கா காந்தி மகான் தளத்துடன் கூட்டணிக் கட்சியாக 'முழு வலிமையுடன்' போராடும் என்று தெரிவித்தார்.[5]
2022 தேர்தல்
[தொகு]தற்பொழுது நடைபெறும் உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தலில் மகான் தளம், சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்து போட்டியிடுகின்றது.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Our main aim is to grab power for welfare of society:Mahan Dal". Business Standard. 2014-03-12. பார்க்கப்பட்ட நாள் 2014-04-25.
- ↑ "Western UP: Cong gives eight seats to RLD, 3 to Mahan Dal". The Indian Express. 2014-03-09. பார்க்கப்பட்ட நாள் 2014-04-25.
- ↑ Seth, Maulshree (2014-03-09). "Cong to leave 8 seats for RLD, 3 for Mahan Dal in western UP". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2014-04-25.
- ↑ "Mahan Dal enters fray with Congress – The Times of India". Timesofindia.indiatimes.com. 2014-03-13. பார்க்கப்பட்ட நாள் 2014-04-25.
- ↑ "UP: Priyanka Gandhi says Congress will fight with 'full might' as party allies with Mahan Dal". Scroll.in. 2019-02-13. பார்க்கப்பட்ட நாள் 2021-04-18. UP: Priyanka Gandhi says Congress will fight with ‘full might’ as party allies with Mahan Dal
- ↑ "बीजेपी को हराने के लिए समाजवादी पार्टी के अखिलेश यादव ने किन दलों से मिलाया है हाथ, यहां जानिए". www.abplive.com (in இந்தி). 2021-12-17. பார்க்கப்பட்ட நாள் 2021-12-17.
{{cite web}}
: CS1 maint: url-status (link)