உள்ளடக்கத்துக்குச் செல்

மகானந்தா ஆறு

ஆள்கூறுகள்: 24°29′24″N 88°18′14″E / 24.49000°N 88.30389°E / 24.49000; 88.30389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகானந்தா ஆறு
Mahananda River
Môhānôndā Nôdi (Bengali)
வங்காளதேசத்தின் பஞ்சகர் மாவட்டம், தெட்டுலியாவில் உள்ள மகானந்தா ஆற்றில் கல் சேகரிக்கும் மக்கள், பின்னணியில் கஞ்சன்சங்கா
அமைவு
நாடுகள்இந்தியா, வங்காளதேசம்
மாநிலம்மேற்கு வங்காளம் (இந்தியா)
பீகார் (இந்தியா)
கோட்டங்கள்இரங்பூர் (வங்காளதேசம்)
இராச்சாகி (வங்காளதேசம்)
மாவட்டங்கள்டார்ச்சிலிங்கு (இந்தியா), இயல்பைகுரி (இந்தியா)
உத்தர தினஜ்பூர் மாவட்டம் (இந்தியா)
கிசன்கஞ்சு (இந்தியா)
பூர்ணியா (இந்தியா)
கட்டிகார் (இந்தியா)
மால்டா (இந்தியா)
பஞ்சகர் (வங்காளதேசம்)
நவாப்கஞ்சு (வங்காளதேசம்)
நகரங்கள்குர்சியாங்கு (இந்தியா)
சிலிகுரி (இந்தியா)
மால்டா, மேற்கு வங்காளம்(இந்தியா)
கோதகிரி (வங்காளதேசம்)
சிறப்புக்கூறுகள்
மூலம்பாக்லச்சோரா அருவி , டார்ச்சிலிங் மலை, இமயமலை
முகத்துவாரம்கங்கை ஆறு
 ⁃ அமைவு
கோதகிரி, ராஜசாகி மாவட்டம், வங்காளதேசம்
 ⁃ ஆள்கூறுகள்
24°29′24″N 88°18′14″E / 24.49000°N 88.30389°E / 24.49000; 88.30389
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 ⁃ இடதுதாங்கோன் ஆறு, நகர் ஆறு (இரங்பூர்)
 ⁃ வலதுமெச்சி ஆறு, கன்காய் ஆறு, பாலாசோன் ஆறு, காளிந்தி ஆறு

மகானந்தா (Mahananda River) என்பது ஓர் எல்லை தாண்டிய ஆறு ஆகும். இந்திய மாநிலங்களான பீகார் மற்றும் மேற்கு வங்கம் வழியாகப் பாய்ந்து வங்காளதேசத்திற்குள் செல்கிறது. மகாமந்தா ஆறு கங்கையின் ஒரு முக்கியமான துணை ஆறாகும்.

ஆற்றின் போக்கு

[தொகு]
மகானந்தா ஆறு, நவாப்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கேப்டன் மோகியுடிங்கு சகாங்கீர் பாலத்திலிருந்து காட்சி

மகானந்தா ஆற்றின் அமைப்பு இரண்டு நீரோடைகளைக் கொண்டுள்ளது. ஒன்று உள்ளூர் ஆறாக புலாகர் ஆறு என்றும் மற்றொன்று மகானந்தா ஆறு என்றும் அழைக்கப்படுகின்றன.[1] புலாகர் ஆறு நேபாளத்தில் உள்ள இமயமலையில் உருவாகி, இந்திய மாநிலமான பீகார் வழியாகப் பாய்ந்து, இராச்மகாலுக்கு எதிரே இடதுபுறத்தில் கங்கையுடன் இணைகிறது.[2] மகானந்தா ஆறும் இமயமலையில் உருவாகிறது. டார்ச்சிலிங்கு மாவட்டத்தில் குர்சியோங்கிற்கு கிழக்கே சிம்லிக்கு அருகிலுள்ள மகால்திராம் மலையில் 2,100 மீட்டர் (6,900 அடி) உயரத்தில் பக்லசோரா அருவியாக விழுகிறது.[3][4][5] பின்னர் மகானந்தா வனவிலங்கு சரணாலயம் வழியாகப் பாய்ந்து சிலிகுரிக்கு அருகிலுள்ள சமவெளிகளில் இறங்குகிறது. இது இயல்பைகுரி மாவட்டத்தைத் தொடுகிறது.

பஞ்சகர் மாவட்டத்தில் உள்ள தெண்டுலியா அருகே வங்காளதேசத்தில் நுழைந்து, தெண்டுலியாவுக்குப் பிறகு 3 கிலோமீட்டர் (1.9 மைல்) தூரம் பாய்ந்து இந்தியாவுக்குத் திரும்புகிறது.[6] மேற்கு வங்காளத்தின் உத்தர் தினாச்பூர் மாவட்டம் மற்றும் பீகாரில் உள்ள கிசன்கஞ்சு, பூர்னியா மற்றும் கதிகார் மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்த பிறகு, மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் நுழைகிறது.[7][8] மகானந்தா ஆறு இம்மாவட்டத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது. ஒன்று கிழக்குப் பகுதி. இப்பகுதி முக்கியமாக பழைய வண்டல் மண் மற்றும் ஒப்பீட்டளவில் வளமற்ற மண்ணைக் கொண்டது, பொதுவாக பாரிந்து (பாரேந்திரபூமி) என்று அழைக்கப்படுகிறது. இரண்டாவது மேற்குப் பகுதி. இப்பகுதி மேலும் காலிந்திரி ஆற்றால் மேலும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. இதில் வடக்குப் பகுதி "தால்" என்று அழைக்கப்படுகிறது. இது தாழ்வான பகுதி மற்றும் மழைக்காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது. தெற்குப் பகுதி மிகவும் வளமான நிலத்தையும் அடர்த்தியான மக்கள்தொகையையும் கொண்டது. இப்பகுதி பொதுவாக "தயரா" என்று அழைக்கப்படுகிறது.[9]

இது வங்காளதேசத்தில் உள்ள இராச்சாகி மாவட்டத்தில் உள்ள கோதகரியில் கங்கையுடன் இணைகிறது.[3]

படுகை தரவு

[தொகு]

மகானந்தா ஆற்றின் மொத்த நீளம் 360 கிலோமீட்டர்கள் (220 மைல்கள்) ஆகும். [10] இதில் 324 கிலோமீட்டர்கள் (201 மைல்கள்) இந்தியாவிலும், 36 கிலோமீட்டர்கள் (22 மைல்கள்) வங்காளதேசத்திலும் உள்ளன.

மகானந்தா ஆற்றின் மொத்த வடிகால் பரப்பளவு 20,600 சதுர கிலோமீட்டர் (8,000 சதுர மைல்) ஆகும், இதில் 11,530 சதுர கிலோமீட்டர் (4,450 சதுர மைல்) இந்தியாவில் உள்ளது.[3]

துணை ஆறுகள்

[தொகு]

மகானந்தா ஆற்றின் முக்கிய துணை ஆறுகள் பாலசோன், மெச்சி, கன்காய் மற்றும் கலிந்திரி ஆறுகளாகும்.[3] கலிந்திரி மற்றும் மகானந்தா ஆறுகள் சங்கமிக்கும் கிழக்கே பழைய மால்டா நகரம் உள்ளது. சிலிகுரி பகுதியில் இது திரினாய், இரனோச்சோண்டி என அழைக்கப்படும் மூன்று துணை ஆறுகளையும் , சோகோர் மற்றும் தௌக்கு ஆகிய இரண்டும் ஒரே துணை ஆற்றைக் கொண்டுள்ளன.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Momin, Hassan; Biswas, Rubia; Tamang, Chandrakala (2022-02-01). "Morphological analysis and channel shifting of the Fulahar river in Malda district, West Bengal, India using remote sensing and GIS techniques" (in en). GeoJournal 87 (1): 197–213. doi:10.1007/s10708-020-10248-7. பன்னாட்டுத் தர தொடர் எண்:1572-9893. https://doi.org/10.1007/s10708-020-10248-7. 
  2. "Mahananda Basin". Archived from the original on 14 August 2021.
  3. 3.0 3.1 3.2 3.3 Sharad K. Jain; Pushpendra K. Agarwal; Vijay P. Singh (2007). Hydrology and Water Resources of India. Springer Science & Business Media. p. 360. ISBN 978-1-4020-5180-7.
  4. 4.0 4.1 "Rivers in Siliguri". Mahananda River. Siliguri on line. Archived from the original on 4 January 2013. Retrieved 14 May 2010.
  5. "Rivers". Darjeeling News.Net. Retrieved 14 May 2010.
  6. "News from Bangladesh". Retrieved 14 May 2010.
  7. "Uttar Dinajpur district". Uttar Dinajpur district administration. Retrieved 14 May 2010.
  8. "Kishanganj district". Kishanganj district administration. Archived from the original on 8 April 2010. Retrieved 14 May 2010.
  9. "Malda district". Malda district administration. Retrieved 14 May 2010.
  10. "Mahananda River". Encyclopædia Britannica. 

வெளி இணைப்புகள்

[தொகு]
  • Sultana Nasrin Baby (2012), "Mahananda River", in Sirajul Islam; Ahmed A. Jamal (eds.), Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.), Asiatic Society of Bangladesh
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகானந்தா_ஆறு&oldid=4415641" இலிருந்து மீள்விக்கப்பட்டது