மகாத்மா காந்தி அரசுக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாத்மா காந்தி அரசுக் கல்லூரி
வகைஇளநிலை கலை, அறிவியல்
உருவாக்கம்1990
அமைவிடம், ,
வளாகம்கிராமப்புறம்
இணையதளம்http://www.and.nic.in/archives/mggc/about.html

மகாத்மா காந்தி அரசு கல்லூரி (Mahatma Gandhi Government College) இந்தியாவின், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள ஒரே ஒரு கல்லூரியாகும். இக்கல்லூரி 1990ஆம் ஆண்டில் கார் நிக்கோபாரில் அரசு கல்லூரியாக நிறுவப்பட்டது. இது 1994-ல் மாயா பந்தருக்கு மாற்றப்பட்டு 1994 திசம்பர் 5 அன்று மகாத்மா காந்தி அரசு கல்லூரி என மறுபெயரிடப்பட்டது.[1] இங்கு ஆறு பிரிவுகளில் இளநிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இக்கல்லூரி புதுச்சேரியில் உள்ள புதுவைப் பல்கலைக்கழக இணைப்பினைப்பெற்றுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://mggcm.and.nic.in/about.html
  2. "Affiliated College of Pondicherry University".