மகாதேவ் பி. செட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாதேவ் பி. செட்டி
பிறப்பு1 சூலை 1957 (1957-07-01) (அகவை 66).[1]
ருக்மாபூர், யாதகிரி, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிதுணைவேந்தர்
அறியப்படுவதுகல்வியாளர்-வேளாண்மை
வலைத்தளம்
www.uasd.edu/index.php/university/2015-12-02-02-10-03

மகாதேவ் பி. செட்டி (M. B. Chetti)(பிறப்பு: சனவரி 1, 1957), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம் தார்வாடில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளார்.[2] இவர் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் கல்விப் பிரிவின் முன்னாள் உதவி இயக்குநராக இருந்துள்ளார்.[3]

கல்வி[தொகு]

மா. பி. செட்டி தார்வாடில் உள்ள வேளாண் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை வேளாண் படிப்பினை முடித்துவிட்டு, புது தில்லியில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் முனைவர் பட்டம் முடித்துள்ளார். முனைவர் பட்டத்திற்கு பிந்தைய ஆராய்ச்சியினை கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல் மற்றும் கனடாவில் முடித்துள்ளார்.

பணி[தொகு]

இவர், உதவி இயக்குநர், இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம், புது தில்லி (2015); விரிவாக்க இயக்குநர், பல்கலைக்கழக வேளாண் கல்லூரி, தார்வாடு (2013-2015); கல்வி இயக்குநர் (2013); முதல்வர் (வேளாண்மை), வேளாண்மைக் கல்லூரி, வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், தார்வாடு (2008-2013); மாணவர் நலன் இயக்குநர் (2008-2009); பல்கலைக்கழக நூலகர் (கூடுதல். பொறுப்பு) (2006-2007); பதிவாளர் (2006-2007); பல்கலைக்கழகத் தலைவர் (பயிர் உடலியல்) (1996-2008); பேராசிரியர் (1991-1996); இணைப் பேராசிரியர் (1989-1991); மேம்பாட்டு அதிகாரி (1985-1989) போன்ற பணிகளை வகித்துள்ளார்.[4]

விருதுகள்[5][தொகு]

  • அ. ப. ஜெ. அப்துல் கலாம் விருது, நட்பு மன்றம், புது தில்லி (2018)
  • இந்தியாவின் முன்னணி கல்வியாளர் விருது, நட்பு மன்றம், புது தில்லி (2018)
  • விரிவாக்கக் கல்வி சமூகம், கற்பித்தல் ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மேலாண்மைத் துறையில் சிறந்த பங்களிப்பிற்கான விருது (2017)
  • தேசிய உயிரியல் அறிவியல் கழக, உறுப்பினர் விருது, சென்னை (2014)
  • கே. கே. நந்தா நினைவு இந்தியத் தாவர உடற்செயலியல் சங்கத்தின் விரிவுரை விருது, புது தில்லி (2011)
  • ராஜீவ்காந்தி சிறப்பு விருது, பன்னாட்டு ஒருமைப்பாடு, அமைதி மற்றும் நட்பு சங்கம், பெங்களூர் (2007)
  • சர். சி. வி. ராமன் இளம் விஞ்ஞானிகளுக்கான விருது, கர்நாடக அரசு (2001)
  • ஜே. சினாய் நினைவு தங்கப் பதக்கம், இந்தியத் தாவர உடற்செயலியல் சமூகம், புது தில்லி (2001)
  • சிறந்த ஆசிரியர்களுக்கான பாரத ரத்னா சி. சுப்பிரமணியம் விருது, இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம், புது தில்லி (2000-2001)
  • வேளாண் அறிவியல் முன்னேற்றத்திற்கான கழக விருது, இந்தியன் தாவர உடற்செயலியல் சமூகம், புது தில்லி (1998)

மேற்கோள்கள்[தொகு]

  1. "N B S india".
  2. "Vice Chancellor".
  3. "N B S india".
  4. "Profile of Dr. M.B. Chetti". nabsindia.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-15.
  5. "Dr. MAHADEV B. CHETTI" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாதேவ்_பி._செட்டி&oldid=3602641" இலிருந்து மீள்விக்கப்பட்டது