மகாகவி பாரதி நகர்

ஆள்கூறுகள்: 13°07′33″N 80°15′44″E / 13.125800°N 80.262100°E / 13.125800; 80.262100
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாகவி பாரதி நகர்
எம். கே. பி. நகர்
புறநகர்ப் பகுதி
மகாகவி பாரதி நகர் is located in சென்னை
மகாகவி பாரதி நகர்
மகாகவி பாரதி நகர்
மகாகவி பாரதி நகர் (சென்னை)
மகாகவி பாரதி நகர் is located in தமிழ் நாடு
மகாகவி பாரதி நகர்
மகாகவி பாரதி நகர்
மகாகவி பாரதி நகர் (தமிழ் நாடு)
ஆள்கூறுகள்: 13°07′33″N 80°15′44″E / 13.125800°N 80.262100°E / 13.125800; 80.262100
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்சென்னை மாவட்டம்
ஏற்றம்28 m (92 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்600039
தொலைபேசி குறியீடு+9144xxxxxxxx
அருகிலுள்ள ஊர்கள்வியாசர்பாடி, கொடுங்கையூர், பெரம்பூர், எருக்கஞ்சேரி, சத்தியமூர்த்தி நகர், கவியரசு கண்ணதாசன் நகர், முல்லை நகர்
மாநகராட்சிபெருநகர சென்னை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிவட சென்னை மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிபெரம்பூர் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி உறுப்பினர்கலாநிதி வீராசாமி
சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்ஆர். டி. சேகர்
இணையதளம்http://chennaicorporation.gov.in

மகாகவி பாரதி நகர் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை மாவட்டத்தில்,[1][2] 13.125800°N, 80.262100°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 28 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். சுருக்கமாக, எம். கே. பி. நகர் என்றும் அழைக்கப்படும் இப்பகுதிக்கு, வியாசர்பாடி, கொடுங்கையூர், பெரம்பூர், எருக்கஞ்சேரி, சத்தியமூர்த்தி நகர், கவியரசு கண்ணதாசன் நகர் மற்றும் முல்லை நகர் ஆகியவை அருகிலுள்ள முக்கியமான ஊர்களாகும்.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலம், மகாகவி பாரதி நகர் பகுதிக்கு பேருந்து சேவைகள் அளிக்கப்படுகின்றன. இங்கு பேருந்து நிலையம் அமையப் பெற்றுள்ளதால், இங்கிருந்தும் சென்னை மாநகரின் பல பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் இலவசமாகப் பயணிக்கும் பொருட்டு, அதற்குரிய டோக்கன் 2022 ஆம் ஆண்டு திசம்பர் 21 ஆம் நாள் முதல் வழங்கப்படுகிற சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அலுவலகங்களில், மகாகவி பாரதி நகர் பேருந்து நிலையமும் ஒன்று.[3] இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்திலேயே வியாசர்பாடி ஜீவா தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. சுமார் 5.5 கி.மீ. தூரத்திலுள்ள பேசின் பாலம் சந்திப்பு தொடருந்து நிலையம் மூலமும் இங்குள்ள மக்கள் பலனடைகின்றனர். இந்தியா முழுவதும் பயணம் செய்து கொள்ளும் வகையில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம். ஜி. இராமச்சந்திரன் மத்திய இரயில் நிலையம், மகாகவி பாரதி நகர் பகுதியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலுள்ளது. இங்கிருந்து 32 கி.மீ. தொலைவில் சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது.

சென்னையிலுள்ள 135 காவல் நிலையங்களில் மகாகவி பாரதி நகர் காவல் நிலையமும் ஒன்று.[4]

மகாகவி பாரதி நகர் பகுதியானது, பெரம்பூர் (சட்டமன்றத் தொகுதி)க்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் ஆர். டி. சேகர். மேலும் இப்பகுதி, வட சென்னை மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக கலாநிதி வீராசாமி, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Muttuppiḷḷai, Kō (1983) (in ta). Aṇṇai mol̲iyum āṭcit tur̲aiyum. Muttamil̲ Nilaiyam. https://books.google.co.in/books?id=1Fs4AAAAMAAJ&q=%25E0%25AE%25AE%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AE%25B5%25E0%25AE%25BF+%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AE%25A4%25E0%25AE%25BF+%25E0%25AE%25A8%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AF%258D&dq=%25E0%25AE%25AE%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AE%25B5%25E0%25AE%25BF+%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AE%25A4%25E0%25AE%25BF+%25E0%25AE%25A8%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AF%258D&hl=ta&sa=X&ved=2ahUKEwiTvfaWm4v8AhUbT2wGHdd2BLsQ6AF6BAgIEAM. 
  2. (in ta) Elangai Thuppakkigal Mounamana Varalaru. Bharathi Puthakalayam. https://books.google.co.in/books?id=R4D6eHdVicsC&pg=PA2&dq=%25E0%25AE%25AE%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AE%25B5%25E0%25AE%25BF+%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AE%25A4%25E0%25AE%25BF+%25E0%25AE%25A8%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AF%258D&hl=ta&sa=X&ved=2ahUKEwiTvfaWm4v8AhUbT2wGHdd2BLsQ6AF6BAgEEAM#v=onepage&q=%25E0%25AE%25AE%25E0%25AE%2595%25E0%25AE%25BE%25E0%25AE%2595%25E0%25AE%25B5%25E0%25AE%25BF%2520%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%2520%25E0%25AE%25A8%25E0%25AE%2595%25E0%25AE%25B0%25E0%25AF%258D&f=false. 
  3. Maalaimalar (2022-12-21). "சென்னை மாநகர பஸ்களில் கட்டணமில்லாமல் பயணிக்க மூத்த குடிமக்களுக்கு டோக்கன் வழங்கும் பணி இன்று தொடங்கியது". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-26.
  4. "எம்.கே.பி. நகர், கொடுங்கையூர், வியாசர்பாடி காவல் நிலையங்களுக்கு சென்று காவல் ஆணையர் ஆய்வு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-12-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாகவி_பாரதி_நகர்&oldid=3626231" இலிருந்து மீள்விக்கப்பட்டது