மகளிர் சிறப்பு சேவை
| தொடங்கப்பட்ட ஆண்டு | 1978 |
|---|---|
| நாடு | இந்தியா |
| மொழி | ஆங்கிலம் |
| வலைத்தளம் | web |
மகளிர் சிறப்பு சேவை (Women's Feature Service) என்பது இந்தியாவின் புது தில்லியைத் தளமாகக் கொண்டு செயல்படும், பெண்களை மையமாகக் கொண்ட ஒரு செய்தி முகமையும் இதழும் ஆகும். 1978 ஆம் ஆண்டு யுனெசுகோ எனப்படும் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு இச்சிறப்பு சேவையை நிறுவியது.[1] பரந்த அளவிலான பெண்ணியப் பிரச்சினைகள், திரைப்படம் மற்றும் கலைகள் போன்ற பிரபலமான கலாச்சாரத்தில் பெண்கள் மற்றும் பெண்களைச் சுற்றியுள்ள சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளைக் இந்த அமைப்பு கையாள்கிறது. மகளிர் பத்திரிக்கை அமைப்புகள் 1881-1999 எனும் நூல், மகளிர் சிறப்பு சேவை அமைப்பை பெண்களால் நிர்வகிக்கப்படும் ஒரு உலகளாவிய செய்தி முகமை என்றும், குறிப்பாக தென் அரைக்கோள நாடுகளில், பெண்கள் மற்றும் மேம்பாடு தொடர்பான சிறப்புச் செய்தித் தொகுப்புகளை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றது என்றும் விவரிக்கிறது."[2] தில்லியை தளமாகக் கொண்ட இந்த மகளிர் சிறப்பு சேவை பாலினக் கண்ணோட்டத்தில் செய்திகள் அம்சங்கள் கருத்துக்களை வழங்குகிறது. இதில் பெண்களின் இனப்பெருக்கம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பொருட்கள் அடங்கும். ஒவ்வொரு வாரமும் உலகம் முழுவதிலிருந்து புதிய புதுப்பிப்புகள் பெண்கள் சிறப்பு சேவை கட்டுரைகளை வெளியீடுகள் மற்றும் வலைத்தளங்களை அச்சிட்டு சந்தைப் படுத்தப்படுகிறது.[3]
மகளிர் சிறப்பு சேவையானது இந்தியாவின் 'இந்துசுத்தான் டைம்சு', ஆங்காங்கின் 'ஃபார் ஈசுடர்ன் எகனாமிக் ரிவ்யூ', பிலிப்பைன்சின் 'தி மென்சு சோன் ' மற்றும் அமெரிக்காவின் 'சிகாகோ டிரிப்யூன்' உள்ளிட்ட உலகம் முழுவதிலும் உள்ள முக்கிய வெளியீடுகளுக்காக, ஆண்டுதோறும் சுமார் 250 முதல் 300 வரையிலான சிறப்புச் செய்திக் கட்டுரைகளையும் தயாரிக்கிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dissertation abstracts international: The humanities and social sciences. University Microfilms International. 1991. Retrieved 18 June 2012.
- 1 2 Byerly, Carolyn M. (2000). "Women's Feature Service, 1978–Present". In Burt, Elizabeth V. (ed.). Women's Press Organizations, 1881-1999. Greenwood Publishing Group. pp. 265–272. ISBN 978-0-313-30661-7.
- ↑ "Women's Feature Service". People & Planet. Archived from the original on 27 February 2024. Retrieved 18 June 2012.