மகளிர் ஆசிரியர் பயிற்சி கல்லூரி, மைமன்சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகளிர் ஆசிரியர் பயிற்சி கல்லூரி (Women Teachers' Training College) ஆசிரியர் பயிற்சி கல்லூரி (மகளிர்) என்றும் அழைக்கப்படுகிறது, இது வங்காளதேசத்தின் மைமன்சிங்கில் உள்ள ஒரு கல்வி நிறுவனமாகும். இது வங்காளதேசத்தில் இந்த வகையான ஒரே ஒரு பள்ளியாகும். [1] 1978 ஆம் ஆண்டு நிலவரப்படி, இது கல்வியில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை வழங்கியது. [2]

சஷி தங்கும் விடுதி[தொகு]

முக்தகா ஜமீன்தார் வம்சத்தின் வாரிசான சூர்யகாந்தா ஆச்சார்யா சவுத்ரி, தனது வளர்ப்பு மகன் ஷோஷிகாந்தாவின் பெயருக்குப் பிறகு மைமென்சிங் நகரில் ஷாஷி தங்கும் விடுதி என்ற ஆடம்பரமான இரண்டு மாடி அரண்மனையைக் கட்டினார். இந்த அற்புதமான கட்டிடம் பாரிஸ் மற்றும் ஐரோப்பாவின் வெவ்வேறு இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட பல்வேறு வகையான ஆடம்பரமான பொருட்களால் அலங்கரிக்கப்பட்டது. கி.பி 1897 இல் ஏற்பட்ட பூகம்பத்தால் இந்த அசலான இடம் அழிக்கப்பட்டது. இந்த அரண்மனை 1905 மற்றும் 1911 க்கு இடையில் ஷோஷிகாந்தாவால் மீண்டும் கட்டப்பட்டது. இது மிகவும் பெரிய பகுதியாகும். சுமார், ஒன்பது ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, அரை வட்ட வடிவிலான வளைந்த நுழைவாயில் வழியாக இதற்குச் செல்லும் பகுதியானது அமைந்துள்ளது. அரண்மனைக்கும் நுழைவாயிலுக்கும் இடையில் அலங்காரமான, சலவைக்கல்லாலான, நீரூற்றுடன் கூடிய ஒரு அழகிய மரபார்ந்த சிலையும், பெரிய புல்வெளியும் உள்ளது. மத்தியில் உள்ள கட்டிடத்தின் மேற்கு பக்கத்தில் ஒரு பழைய குளம் உள்ளது. வடக்கு மூலையிலிருந்து குளத்தின் நடுவில் அமைந்துள்ள பளிங்கு கல்லால் செய்யப்பட்ட இரண்டு மாடி குளியல் காட்சி மாடம் உள்ளது. மத்திய தாழ்வாரம் வழியாக அரண்மனைக்குள் நுழையும் போது, மரத்தாலான தளங்களைக் கொண்ட பெரிய மண்டபத்திற்குள் செல்லும் ஒரு முன்னறை உள்ளது. இது முதலில் குளியல் அறையாகவே பயன்படுத்தப்பட்டது. வெளிச்சத்திற்காக மிக நீள அகலமான கண்ணாடி சரவிளக்குகள் தொங்கவிடப்பட்டிருந்தன. கதவுகளும் ஜன்னல்களும் வண்ணமயமான கண்ணாடியால் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. அதன் சிறந்த தொல்பொருள் முக்கியத்துவத்திற்காக தொல்பொருள் துறை (DOA) இந்த நினைவுச்சின்னத்தை கி.பி 1989 இல் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக அறிவித்தது.

வளாகம்[தொகு]

சஷி தங்கும் விடுதியில் வீனஸின் சிற்பம்

1952 ஆம் ஆண்டு முதல், 9 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் ஒரு முக்கிய கட்டிடமான சஷி தங்கும் விடுதியில் அமைந்துள்ளது. [1] [3] தற்போதைய சஷி தங்கும் விடுதியானது இந்தப் பெயரிலான இரண்டாவது கட்டிடம் ஆகும். உண்மையான பண்டைய கட்டிடமானது மகாராஜா சுர்ஜோகாந்தோ ஆச்சார்ய சவுத்ரி என்பவரால் கட்டப்பட்டது மற்றும் அவரது மகன் சஷிகாந்தோ ஆச்சார்யா சவுத்ரிக்காக பெயரிடப்பட்டது. 1897 ஆம் ஆண்டு அசாம் பூகம்பத்தால் முந்தைய, அசலான தங்கும் விடுதி தீவிபத்தில் அழிந்த பின்னர், பாரிஸிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் கருவிகளைப் பயன்படுத்தி ஷாகிகாண்டோ அதை 3 இலட்சம் செலவில் மீண்டும் கட்டியெழுப்பினார். 24 அறைகள் கொண்ட கட்டிடத்தின் அசாதாரண அம்சம் ஒரு இசைக்கும் படிக்கட்டு ஆகும். தங்கும் விடுதிக்கு முன்னால் உள்ள மைதானத்தில் ஒரு நீரூற்று உள்ளது, அதன் மையப்பகுதியாக வீனஸ் குளிக்கும் கல் சிலை உள்ளது. [4] திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்களுக்கான படப்பிடிப்பு இடமாக ஷாஷி தங்கும் விடுதி பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Shashi Lodge: In need of a face-lift, The Daily Star, 17 July 2008
  2. Bangladesh Bureau of Educational Information and Statistics (BANBEIS), Higher Education in Bangladesh பரணிடப்பட்டது 2011-07-06 at the வந்தவழி இயந்திரம், BANBEIS Publication No. 2, December 1978. Page 19.
  3. Mymensingh Museum in a derelict state, The Daily Star, 15 September 2010
  4. Pitiful state of ‘lodge’ turned college பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம், The Daily Star Heritage, 20 September 2004