மகல்வாரி முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மகல்வாரி(Mahalwari system) என்பது ஆங்கிலேயர்களால் அறிமுகப் படுத்தப் பட்ட ஒரு நிலவருவாய் திட்டமாகும். இது ஆங்கிலேயர்களால் உருவாக்கப் பட்ட மூன்று முக்கியமான நிலவருவாய் திட்டங்களில் ஒன்று.மகல் என்ற இந்தி வார்த்தையின் பொருள் கிராமம் அல்லது சிறுமாவட்டம் ஆகும்.இத்திட்டம் 1833ம் ஆண்டு வில்லியம் பெண்டிங் ஆட்சி காலத்தில், ஹோல்ட் மெக்கன்சி என்பவரால் பஞ்சாப், மத்திய மாகாணங்கள், வடமேற்கு மாகாணங்களில் முதன் முதலில் அறிமுகம் செய்யப் பட்டது. இந்த திட்டத்தின்படி, நிலங்களின் தன்மைக்கேற்றவாறு வரி நிர்ணயம் செய்யப் பட்டது. நிலங்கள் முறையாக அளக்கப் பட்டன. பொதுவாக 66% வரி வசூல் செய்யப் பட்டது.இந்த திட்டத்தின்படி, கிராம சமுதாயத்திற்கும், அரசிற்கும் இடையே தரகர்கள் இல்லை. அரசுக்கு வரி செலுத்த வேண்டிய பொறுப்பு கிராமத்தையே சார்ந்தது.

சில இடங்களில் நீர்ப்பாசன வசதியை அரசு செய்து தந்தது என்றாலும் அவற்றின் பலன்கள் அனைத்தும் அரசிற்கே கிடைத்தது எனலாம். இந்த திட்டத்தினால் இந்திய விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகல்வாரி_முறை&oldid=2314699" இருந்து மீள்விக்கப்பட்டது