உள்ளடக்கத்துக்குச் செல்

மகமூத் அலி யூசுப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகமூத் அலி யூசுப்
Macamuud Qali Yuusuf
Maxamuud Cali Yuusuf
2013 ஆம் ஆண்டில் யூசுப்
5ஆவது ஆப்பிரிக்க ஒன்றிய ஆணையத்தின் தலைவர்
பதவியில்
மார்ச்சு 2025
Succeedingமௌசா ஃபக்கி
வெளியுறவுத் துறை அமைச்சர் (சீபூத்தீ)
பதவியில் உள்ளார்
பதவியில்
22 மே 2005
குடியரசுத் தலைவர்இசுமாயில் ஓமர் குயல்லே
முன்னையவர்அலி அப்தி ஃபாரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 செப்டம்பர் 1965 (1965-09-02) (அகவை 60)
சீபூத்தீ (நகரம்), பிரெஞ்சு சோமாலிலாந்து (தற்போதைய சீபூத்தி)
அரசியல் கட்சிமுன்னேற்றத்திற்கான மக்கள் பேரணி (People's Rally for Progress)
முன்னாள் மாணவர்லூமியெர் பல்கலைக்கழகம் லியான் 2
இணையத்தளம்www.may-ua2025.dj

மகமூத் அலி யூசுப் (Mahamoud Ali Youssouf) (பிறப்பு: செப்டம்பர் 2,1965) என்பவர் ஒரு சீபூத்தீய தூதர் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றிய ஆணையத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.[1] இவர் 2005 ஆம் ஆண்டு முதல் தொடங்கி மிக நீண்ட காலம் பணியாற்றிய சீபூத்தீய வெளியுறவு அமைச்சர் ஆவார்.[2]

ஏப்ரல் 2024 இல், அவர் ஆப்பிரிக்க ஒன்றிய ஆணையத்தின் தலைவர் பதவிக்கு சீபூத்தீய அரசால் பரிந்துரைக்கப்பட்டார். பிப்ரவரி 15,2025 அன்று, எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் நடந்த தேர்தலில் ஏழு சுற்று வாக்களிப்புக்குப் பிறகு இவர் வெற்றி பெற்றார்.[1][3]

தொடக்ககால வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

மகமூத் அலி யூசுப் 1965 செப்டம்பர் 2 அன்று சீபூத்தீ நகரில் பிறந்தார். இவர் தனது அடிப்படைக் கல்வியை சீபூத்தீயில் பெற்றார்.

அதற்குப் பிந்தைய யூசுபின் கல்விப் பயணம் அவரை ஐக்கிய இராச்சியம், பிரான்சு மற்றும் கனடாவுக்கு அழைத்துச் சென்றது.[4] இவர் லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை பயின்றார். 1990 ஆம் ஆண்டில் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[5] 1990 களில் பிரஸ்ஸல்ஸ் ஃப்ரீ பல்கலைக்கழகத்தில் தனது ஆய்வறிக்கையை எழுதினார்.[6]

அரசதந்திர வாழ்க்கை

[தொகு]
2015 இல் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரியுடன் யூசுப் சந்திப்பு

யூசூஃப் 1990களில் ஜிபூட்டியின் வெளிவிவகார அமைச்சகத்தில் பணியாற்றி, அதன் அரபு விவகாரத் துறையின் தலைவராக இருந்தார். 1997 முதல் 2001 வரை எகிப்துக்கான தூதராகப் பணியாற்றினார்.[7]

2001 சூலை 4 அன்று பன்னாட்டு ஒத்துழைப்புக்கான அமைச்சர்-பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.[8][9] தொடர்ந்து 2005 மே 22 அன்று வெளிவிவகார மற்றும் பன்னாட்டு ஒத்துழைப்புக்கான அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[10] 2006ல் அவர் ஜப்பானுக்கு வந்தார்.[11]

2008ல், அரபு லீக்கின் வெளிவிவகார அமைச்சர்களின் 129வது சாதாரண அமர்வின் தலைவராக யூசூஃப் பணியாற்றினார்.[12]

யூசூஃப் சர்வதேச தூதுவத்துறையில், குறிப்பாக ஆப்பிரிக்கா கொம்பு பகுதியில் முக்கியப் பங்களிப்புகளை ஆற்றியுள்ளார்.[13] 2008ஆம் ஆண்டில் நியூயார்க் டைம்ஸிடம் பேசுகையில், சிபூத்தீ ஒரு சிறிய நாடாக இருந்தபோதிலும், அது பெரிய துறைமுகத்தைக் கொண்டுள்ளதாகவும், துபாயைப் போன்றே தனது பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ள விரும்புவதாகவும் யூசூஃப் கூறினார். நாட்டின் மூலோபாய அமைவிடத்தை அவர் எடுத்துக்காட்டி, துபாயை விட சிறந்த நிலையில் இருப்பதாக வலியுறுத்தினார்.[14]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

யூசுப் அஃபார் சோமாலியா, அரபு, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் சரளமாகப் பேசுவார்.

இவர் சிபூத்தீ அரசுத்தலைவர் இஸ்மாயில் ஓமர் குயல்லேவுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.[15]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Djibouti's Foreign Minister Mahmoud Youssouf beats Raila to win AUC chair race".
  2. "Mahmoud Ali Youssouf: outsider elected to head African Union commission". France 24. 15 February 2025. Retrieved 16 February 2025.
  3. "African leaders elect Djibouti's foreign minister as new leader of the African Union Commission". Associated Press. 15 February 2025. Retrieved 16 February 2025.
  4. "Profile of Djibouti's Mahamoud Ali Youssouf facing off with Raila for AUC Chairperson | Pulselive Kenya". www.pulselive.co.ke (in ஆங்கிலம்). Retrieved 16 February 2025.
  5. "Who is new AUC Chair Mahamoud Ali Youssouf?". https://www.the-star.co.ke/news/realtime/2025-02-15-who-is-new-auc-chair-mahamoud-ali-youssouf-1. 
  6. "Mahamoud Ali Youssouf: Profile of Djibouti Candidate Who Beat Raila in AUC Race". MSN. https://www.msn.com/en-us/news/world/mahamoud-ali-youssouf-profile-of-djibouti-candidate-who-beat-raila-in-auc-race/ar-AA1tFGww. 
  7. "Mahamoud Ali Youssouf", Indian Ocean Newsletter, number 1,136, Africa Intelligence, 28 May 2005.
  8. "Le gouvernement de Djibouti formé le 4 juillet 2001" பரணிடப்பட்டது 3 மே 2009 at the வந்தவழி இயந்திரம், Afrique Express, number 232, 16 July 2001 (in பிரான்சியம்).
  9. List of members of the government of 4 July 2001, presse-francophone.org (2002 archive page) (in பிரான்சியம்).
  10. "Décret n°2005-0069/PRE portant nomination des membres du Gouvernement"[தொடர்பிழந்த இணைப்பு], Journal Officiel de la République de Djibouti, 22 May 2005 (in பிரான்சியம்).
  11. "MOFA: Press Conference by The Press Secretary of MOFA". Ministry of Foreign Affairs of Japan. 6 June 2006.
  12. "Djibouti assure la présidence du Conseil de la Ligue des Etats Arabes", ADI, 9 March 2008 (in பிரான்சியம்).
  13. Marita, Bosco (15 February 2025). "Who is new AUC Chair Mahamoud Ali Youssouf?". The Star. https://www.the-star.co.ke/news/realtime/2025-02-15-who-is-new-auc-chair-mahamoud-ali-youssouf-1. 
  14. Jeffrey Gettleman, "Location Gives Tiny State Prime Access to Big Riches", The New York Times, 30 May 2008.
  15. "Mahamoud Ali Youssouf élu président de la Commission de l'Union africaine" (in fr). 15 February 2025. https://www.lemonde.fr/afrique/article/2025/02/15/mahamoud-ali-youssouf-elu-president-de-la-commission-de-l-union-africaine_6548283_3212.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகமூத்_அலி_யூசுப்&oldid=4392078" இலிருந்து மீள்விக்கப்பட்டது