உள்ளடக்கத்துக்குச் செல்

மகப்பேற்று மீயொலிவரைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகப்பேற்று மீயொலி வரைவு
Obstetric ultrasonography
16 வார சிசுவின் மகப்பேற்று மீயொலி படம். நடு-வலதுபுறத்தில் உள்ள பிரகாசமான வெள்ளை வட்டம் தலையாகும், அது இடதுபுறம் நோக்கியுள்ளது. 10 மணி நிலையில் நெற்றி, 7 மணி நிலையில் மையத்தை நோக்கிய இடது காது மற்றும் 9 மணி நிலையில் கண்களை மூடியிருக்கும் வலது கை ஆகியவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும்.
வேறு பெயர்கள்பேறுகாலத்திற்கு முந்தைய மீயொலி
ICD-9-CM88.78
MeSHD016216
OPS-301 code3-032, 3-05d

மகப்பேற்று மீயொலிவரைவு (obstetric ultrasonography, அல்லது prenatal ultrasound), என்பது கருத்தரிப்புக் காலத்தில் மருத்துவ மீயொலியைப் பயன்படுத்துவதாகும். இதில், கருப்பையில் வளரும் முளையம் அல்லது முதிர்கருவின் நிகழ்நேரக் காட்சிப் படங்களை உருவாக்க ஒலி அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. தாயின் உடல்நலம், கர்ப்பத்தின் காலம், அதன் முன்னேற்றம், கரு அல்லது சிசுவின் உடல்நலம், வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு தகவல்களை இது வழங்க முடியும் என்பதால், பல நாடுகளில் பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பின் ஒரு நிலையான பகுதியாக இந்த செயல்முறை உள்ளது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு 18 வாரங்கள் முதல் 24 வாரங்கள் வரையிலான கருக்காலத்தில் வழக்கமான மகப்பேற்று மீயொலிப் பரிசோதனைகளை வழங்குமாறு மகப்பேறியல், மகளிர் மருத்துவத்தில் மீயொலி பன்னாட்டுச் சங்கம் (ISUOG) பரிந்துரைக்கிறது. இதன் நோக்கம், கர்ப்பத்தின் காலத்தை உறுதிப்படுத்துவது, கருவின் அளவை அளவிடுவது, அதன் மூலம் கர்ப்பத்தின் பிற்பகுதியில் வளர்ச்சிக் குறைபாடுகளை விரைவாகக் கண்டறிவது, பிறவிக் குறைபாடுகள் மற்றும் பல கருச்சூல்களை (இரட்டைக் குழந்தைகள் போன்றவை) மதிப்பிடுவது ஆகும்.[1] கூடுதலாக, மரபணுப் பரிசோதனை செய்ய விரும்பும் கர்ப்பிணிப் பெண்கள், அவற்றைச் செய்வதற்கான வசதிகள் உள்ள நாடுகளில், 11 வாரங்கள் முதல் 13 வாரங்கள் 6 நாட்கள் வரையிலான கர்ப்பகாலத்தில் மகப்பேற்று மீயொலிப் பரிசோதனைகளை (nuchal scan) செய்துகொள்ள வேண்டும் என்று ISUOG பரிந்துரைக்கிறது. கர்ப்பத்தின் இந்தத் தொடக்கக் கட்டத்தில் மீயொலிப் பரிசோதனை செய்வதன் மூலம், கர்ப்பத்தின் காலத்தை மிகவும் துல்லியமாக உறுதிப்படுத்த முடியும், மேலும் பல கருக்கள் மற்றும் முக்கிய பிறவிக் குறைபாடுகளை தொடக்க நிலையிலேயே மதிப்பிடவும் முடியும்.[2] 24 வார கர்ப்பக் காலத்திற்கு முன் செய்யப்படும் வழக்கமான மகப்பேற்று மீயொலி சோதனைகள், பல கர்ப்பங்களைக் கண்டறியத் தவறும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்றும், தாமதமான கர்ப்பத்திற்கு பிரசவத்தைத் தூண்டும் அபாயத்தைக் குறைக்க கர்ப்பத்தின் தேதியைக் கணிப்பதை மேம்படுத்தும் என்றும் ஆய்வுகள் காட்டுகிறது.[3]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Salomon, LJ; Alfirevic, Z; Berghella, V; Bilardo, CM; Chalouhi, GE; Da Silva Costa, F; Hernandez-Andrade, E; Malinger, G et al. (June 2022). "ISUOG Practice Guidelines (updated): performance of the routine mid-trimester fetal ultrasound scan.". Ultrasound in Obstetrics & Gynecology 59 (6): 840-856. doi:10.1002/uog.24888. பப்மெட்:35592929. https://www.isuog.org/resource/isuog-practice-guidelines-updated-performance-of-the-routine-mid-trimester-fetal-ultrasound-scan.html.
  2. ↑ Salomon, LJ; Alfirevic, Z; Bilardo, CM; Chalouhi, GE; Ghi, T; Kagan, KO; Lau, TK; Papageorghiou, AT et al. (2013). "ISUOG Practice Guidelines: performance of first-trimester fetal ultrasound scan". Ultrasound Obstet Gynecol 41 (1): 102–113. doi:10.1002/uog.12342. பப்மெட்:23280739.
  3. ↑ Whitworth, M; Bricker, L; Mullan, C (2015). "Ultrasound for fetal assessment in early pregnancy". Cochrane Database of Systematic Reviews 2015 (7). doi:10.1002/14651858.CD007058.pub3. பப்மெட்:26171896.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகப்பேற்று_மீயொலிவரைவு&oldid=4561565" இலிருந்து மீள்விக்கப்பட்டது