மகபூப் சகீதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகபூப் சகீதி (2 பிப்ரவரி 1929 - 8 ஏப்ரல் 2006) ஓர் இந்திய அரசியல்வாதி. மேற்கு வங்கத்தின் கத்வா நாடாளுமன்ற தொகுதிக்கு 1996 முதல் தனது இறப்பு வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

வாழ்கை வரலாறு[தொகு]

மகபூப் 1929 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 அன்று மேற்கு வங்கம் சுரியில் பிறந்தார். இந்திய தேசிய இராணுவத்தில் இராணுவ வீரராக சேவையாற்றியவர். இவர் ஷாநவாஸ்கான் தலைமையில் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக சண்டையிட்டார். இவர் மேற்கு வங்கத்தில் விவசாயிகளை ஒருங்கிணைக்கும் தலைவர்களில் மிக முக்கியமானவர். மேலும் இவர் இடதுசாரிகளின் கலாச்சார அமைப்பிலும், இந்திய மக்களின் நாடக அமைப்பிலும் தொடர்புடையவர்.[1]

அரசியல் வாழ்க்கை[தொகு]

மகபூப் மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். மேற்கு வங்கத்தின் பாடர் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக 1991 முதல் 1996 வரை இருந்தார். இந்த காலகட்டத்தில் மகபூப் விலங்குகள் வள மேம்பாட்டு, சிறுபான்மையினர் விவகாரம், ஹஜ் மற்றும் வக்பு ஆகிய துறையின் அமைச்சராக இருந்தார். பிறகு 1996 முதல் கத்வா தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது நாடாளுமன்றத்தின் பல்வேறு குழுவில் அங்கம் வகித்தார்.[2]

  1. "Archive News". The Hindu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-07.
  2. "Current Lok Sabha Members Biographical Sketch". web.archive.org. 2006-06-15. Archived from the original on 2006-06-15. பார்க்கப்பட்ட நாள் 2020-09-07.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகபூப்_சகீதி&oldid=3484324" இலிருந்து மீள்விக்கப்பட்டது