உள்ளடக்கத்துக்குச் செல்

மகபூப் அலி பெய்க் சாகிப் பகதூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகபூப் அலி பெய்க் சாகிப் பகதூர் (Mahboob Ali Baig Sahib Bahadur), மஹ்பூப் அலி பெய்க் என்றும் அழைக்கப்படுபவர், ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். அவர் 1947 சூலை 14 முதல் 1950 சனவரி 24 வரை சென்னையிலிருந்து இந்திய அரசியலமைப்புச் சபையின் உறுப்பினராக இருந்தார். முஸ்லிம் தனிநபர் சட்டம் 1937 இயற்றுவதில் அவர் முக்கியப் பங்காற்றினார்.[1], [2], [3]

தேசப் பிரிவினைக்குப் பின் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனியாக உருவாக்கப்பட்ட பொழுது சென்னையில் கூட்டப்பட்ட முதற் கூட்டத்தில் (1948 மார்ச் 10) காயிதே மில்லத் முகம்மது இசுமாயில் சாகிப் தலைவராகவும், சென்னையைச் சேர்ந்த மஹ்பூப் அலி பெய்க் பொதுச் செயலாளராகவும், மும்பையைச் சேர்ந்த ஹாஜி உசைனலி பி. இப்ராகீம் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[4].


மேற்கோள்கள்

[தொகு]
  1. Pioneer, The. "Sharia courts: Seeds sown 70 years ago". The Pioneer (in ஆங்கிலம்). Retrieved 2023-01-31.
  2. Anand, Arun (2021-11-26). "How Ambedkar, Munshi & Krishnaswamy Ayyar argued for Uniform Civil Code at Constituent Assembly". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-01-31.
  3. "Time for a fresh start with Uniform Civil Code". The New Indian Express. 22 April 2022. Retrieved 2023-01-31.
  4. https://www.amarx.in/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/