மகன் சிங் அசரவாலா
மகன் சிங் அசரவாலா Mahan Singh Hazarawala | |
---|---|
அசாராவின் ஆளுநர் | |
பதவியில் 1837–1838 | |
முன்னையவர் | அரி சிங் நல்வா |
பின்னவர் | தேச் சிங் |
தனிப்பட்ட விவரங்கள் | |
இறப்பு | 1844 அசாரா, சீக்கியப் பேரரசு |
பெற்றோர் | தாடா ராம் பாலி (தந்தை) |
கையெழுத்து | ![]() |
மகன் சிங் அசரவாலா (Mahan Singh Hazarawala) சீக்கியப் பேரரசின் கல்சா இராணுவத்தில் கமாண்டர் இன் சீப் எனப்படும் தலைமைத் தளபதியான அரி சிங் நல்வாவின் கீழ் பணியாற்றிய ஓர் இராணுவ அதிகாரி ஆவார்.[1] மன்செக்ரா நகரம் இவரது பெயரால் அழைக்கப்படுவதாக நம்பப்படுகிறது.[2]
ஆரம்பகால வாழ்க்கை.
[தொகு]மகன் சிங் மொக்யால் பிராமணர்களின் பாலி குலத்தைச் சேர்ந்த ஒரு பஞ்சாபி இந்து குடும்பத்தில் பிறந்தார். இவர் குசராத்து நகரின் முசுலீம் காகர் தலைவரான சுல்தான் முகராப் கானின் ரகசிய ஊழியராக இருந்த தாதா ராம் பாலியின் மகன் ஆவார்.[1][3]
இராணுவப் பணி
[தொகு]லாகூரில் வேலை தேடி வந்தபோது, மகாராசா ரஞ்சித் சிங் வேட்டையாடும் பணியில் பங்கேற்றார், அதில் இவர் தனது வாளால் ஒரு சிறுத்தையை தனியாகக் கொன்று மகாராசாவின் கவனத்தை ஈர்த்தார்.[4] வீரத்தால் ஈர்க்கப்பட்ட மகாராசா இவரை அரி சிங் நல்வாவின் கீழ் இராணுவத்தில் சேர்த்தார்.[4]
பெசாவர் மற்றும் காசுமீர் போர்களிலும், 1818 ஆம் ஆண்டில் நிகழ்ந்த முல்தான் முற்றுகையிலும் மகன் சிங் பணியாற்றினார். அங்கு இவர் இரண்டு முறை காயமடைந்தார். 1837 ஆம் ஆண்டு ஏப்ரலில், ஆப்கானியர்களின் படையெடுப்புக்கு எதிராக போராடிய இயம்ரூத்து கோட்டையின் முக்கிய பாதுகாவலராக இருந்தார். இயம்ரூத்து போரில் அரி சிங் நல்வா கொல்லப்பட்டார். ஆனால் லாகூரிலிருந்து வலுவூட்டல்கள் வரும் வரை மகன் சிங் செய்தியை ரகசியமாக வைத்திருந்தார்.[4]
மரணம்.
[தொகு]அரி சிங்கிற்குப் பிறகு அசாரா திவானாக இருந்த மகன் சிங், 1844 ஆம் ஆண்டில் கிளர்ச்சி வெடித்தபோது தனது சொந்த வீரர்களால் கொல்லப்பட்டார்.[4]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Saggar, Balraj (1993). Who's who in the History of Punjab, 1800–1849 (in ஆங்கிலம்). National Book Organisation. p. 240. ISBN 978-81-85135-60-1.
- ↑ "District Profile - Mansehra" (PDF). Earthquake Reconstruction and Rehabilitation Authority. Kamran Printers, Blue Area, Islamabad. July 2007 – via Humanitarian Library.
- ↑ Griffin, Lepel. H (1890). The Punjab Chiefs. Vol. II. Civil And Military Gazette Press Lahore. pp. 265–266.
- ↑ 4.0 4.1 4.2 4.3 Bhatia, S. S. (2011). "Mahan Singh (d. 1844)". The Encyclopedia Of Sikhism (Third) III M–R. Punjabi University Patiala. 13–14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-1-7380-349-9.