உள்ளடக்கத்துக்குச் செல்

மகத்தான மனிதநேயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருத்தந்தை 14-ஆம் லியோ-இன்

திருத்தூது மடல்
Coat of arms of Pope 14-ஆம் லியோ
ஒப்ப நாள் 15 மே 2026 (2026-05-15)
தலைப்புசெயற்கை நுண்ணறிவுக் காலத்தில் மனிதரைப் பாதுகாத்தல்
இலக்கம்திருத்தந்தையின் ஆட்சியில் 1 of 1
உரை

மகத்தான மனிதநேயம் (இலத்தீன்: Magnifica humanitas) என்பது திருத்தந்தை பதினான்காம் லியோவின் முதலாவது திருத்தூது மடல் ஆகும். இது "செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மனிதனைப் பாதுகாத்தல்" பற்றியது. இச்சுற்றுமடல் 2026 மே 25 அன்று வெளியிடப்பட்டது.[1][2]

இவ்வாறான பணிகளை கர்தினால்களுக்கு ஒப்படைத்த ஏனைய திருத்தந்தைகளைப் போலல்லாமல், 14-ஆம் லியோ இந்தச் சுற்றுமடலை வத்திக்கானில் தனிப்பட்ட முறையில் சமர்ப்பிக்கத் தேர்ந்தெடுத்தார்.[3] இந்த நிகழ்வில், ஆந்திரோப்பிக் இணை நிறுவனர் கிறிஸ் ஓலா உட்பட செயற்கை நுண்ணறிவு வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.[3]

பின்னணியும் வெளியீடும்

[தொகு]

தனது திருத்தந்தைப் பதவியின் தொடக்கத்திலிருந்தே, திருத்தந்தை பதினான்காம் லியோ, செயற்கை நுண்ணறிவின் எழுச்சி, மனித மாண்பு, அதன் பன்முகத்தன்மை ஆகியவற்றின் நெருக்கடிகள் ஆகியவை முக்கிய கவலைகள் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். இந்தச் சுற்றுமடல், அவரது பெயரைக் கொண்ட திருத்தந்தை பதின்மூன்றாம் லியோவின் ரேரும் நோவாரும் (புதிய விடயங்கள்)[4] என்ற தொழில்மயமாதல் தொடர்பான ஒரு முக்கிய திருத்தூது மடலின் 135-ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி, அதே நாளில் வெளியிடப்பட்டது.[4][5]

மே 2026 தொடக்கத்தில், திருத்தந்தை செயற்கை நுண்ணறிவுக்கான ஒரு பல்துறை ஆணையத்திற்கு ஒப்புதல் அளித்தார். இந்த ஆணையம், திருப்பீடத்தின் நிர்வாக நிறுவனக்களை உள்ளடக்கிய ரோமன் கூரியாவின் பின்வரும் ஏழு துறைகளின் பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும்:

  • முழுமையான மனித வளர்ச்சியை ஊக்குவிக்கும் துறை,
  • விசுவாசக் கோட்பாட்டிற்கான துறை,
  • கலாச்சாரம், கல்விக்கான துறை,
  • தகவல்தொடர்புக்கான துறை,
  • வாழ்விற்கான திருத்தந்தை கல்வியகம்,
  • அறிவியல்களுக்கான திருத்தந்தை கல்வியகம்
  • சமூக அறிவியல்களுக்கான திருத்தந்தை கல்வியகம்

இந்த ஆணையம், "திருப்பீடத்திற்குள் அதன் பயன்பாடு குறித்த கொள்கைகள் உட்பட, செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயல்பாடுகள், திட்டங்கள் ஆகியவை குறித்து குழு உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பு, தகவல் பரிமாற்றம் ஆகியவற்றை எளிதாக்கும், அதே நேரத்தில் உரையாடல், ஒற்றுமை மற்றும் பங்கேற்பை ஊக்குவிக்கும்".[6]

உள்ளடக்கம்

[தொகு]

இந்தத் திருத்தூது மடல் "செயற்கை நுண்ணறிவு யுகத்தில் மனிதனைப் பாதுகாத்தல்" குறித்து அக்கறை கொண்டுள்ளது.[7] நாகரிகத்தைத் தொழில்நுட்பம் "மனிதத்தன்மை குறைந்ததாக" மாற்றி, மனிதக் கண்ணியத்தையும், நோக்கத்தையும் நிறைவையும் கண்டறிவதற்கு உள்ளார்ந்ததாக மனித உழைப்பின் மதிப்பையும் குறைக்கும் என்று லியோ கூறுகிறார்.[8][9] ஆயுதங்கள் மீதான மனிதக் கட்டுப்பாடு குறைவது போர்களைத் தொடங்குவதை எளிதாக்குகிறது என்று கூறி, போரில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதை இந்தத் திருத்தூது மடல் குறிப்பாகக் கண்டிக்கிறது.[3] இதன் விளைவாக, நியாயமான கத்தோலிக்கப் போர்க் கோட்பாடு ("எந்த வகையான போரையும் நியாயப்படுத்த அடிக்கடி பயன்படுத்தப்பட்டது"), காலாவதியாகிவிட்டது" என லியோ கூறுகிறார்.[10] இந்த திருத்தூது மடல் ஒரு செயற்கை நுண்ணறிவுடனான ஆயுதப் போட்டியை ஊக்கப்படுத்துவதில்லை, அத்துடன் அரசியலில் ஆள்மாறாட்ட, போலிப்பதிவுகளை விமர்சிக்கிறது.[3] தொழில்நுட்பம் ஒருபோதும் நடுநிலையானது அல்ல என்று மகத்தான மனிதநேயம் வலியுறுத்துகிறது. மனிதகுலம் "பாபேலைக் கட்டுவதற்கும் எருசலேமை மீண்டும் கட்டுவதற்கும்" இடையிலும்; தொலைதூர, பெருமைமிக்க சக்திக்கும் மனிதனை மையமாகக் கொண்ட சமூகத்திற்கும் இடையிலும் ஒரு தேர்வை எதிர்கொள்கிறது என்று வாதிடுகிறது.[11][12]

மொழிகள்

[தொகு]

இந்தத் திருத்தூது மடல் முதலில் அரபு, ஆங்கிலம், பிரான்சியம், இடாய்ச்சு, இத்தாலியம், போலந்து, போர்த்துகீசியம், எசுப்பானியம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது. முதல் முறையாக, இலத்தீன் மொழிபெயர்ப்பு எதுவும் இந்த தொடக்க மொழிபெயர்ப்புகளுடன் வழங்கப்படவில்லை. 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைமுறைக்கு வந்த ரோமன் கூரியாவின் பொது விதிமுறைகளில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக இது சாத்தியமானது. அதிகாரப்பூர்வ ஆவணங்கள் "இஒலத்தீன் அல்லது மற்றொரு மொழியில்" தயாரிக்கப்படலாம் என்று கூறியது. திருத்தந்தை பிரான்சிசின் கீழ் வலுப்பெற்றிருந்த ஆங்கிலம், இத்தாலியம் போன்ற நவீன மொழிகளில் பணிபுரியும் போக்கை இது முறைப்படுத்தியது. இதனால் இலத்தீனின் பாரம்பரிய முதன்மை, உறுதியானதாக இருப்பதற்குப் பதிலாக சடங்கு மற்றும் குறியீட்டு ரீதியாகக் குறைக்கப்பட்டது.[13]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pope Leo XIV's first encyclical Magnifica humanitas to be published May 25". Vatican News. 18 May 2026. https://www.vaticannews.va/en/pope/news/2026-05/pope-leo-xiv-first-encyclical-magnifica-humanitas.html.
  2. "Information for journalists". Holy See Press Office. 18 May 2026. https://press.vatican.va/content/salastampa/en/comunicazioni/2026/05/18/260518a.html.
  3. 1 2 3 4 Maqbool, Aleem; Wyatt, Catherine (25 May 2026). "Pope Leo says AI must be 'disarmed' in first major teaching". பிபிசி. Retrieved 25 May 2026.
  4. 1 2 "Pope Leo and the 'Babel Syndrome'". Commonweal. 27 May 2026.
  5. Pope Leo XIV (25 May 2026). "Magnifica humanitas".
  6. "Pope approves creation of Interdicasterial Commission on Artificial Intelligence - Vatican News". www.vaticannews.va (in ஆங்கிலம்). 2026-05-16. Retrieved 2026-05-26.
  7. Rich, Motoko; Povoledo, Elisabetta; Dias, Elizabeth (2026-05-25). "Pope Leo Warns of Risks From A.I. in 42,300-Word Encyclical". த நியூயார்க் டைம்ஸ் (US). https://www.nytimes.com/2026/05/25/world/europe/pope-leo-encyclical.html.
  8. Livesay, Chris (2026-05-25). "Pope Leo calls for "disarming" of AI in technology-focused encyclical". CBS News (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2026-05-30.
  9. Noah, Timothy (27 May 2026). "Pope Leo’s Vital Message About Work in the Age of AI". The New Republic. https://newrepublic.com/article/210919/pope-leo-encyclical-dignity-work-ai.
  10. McElwee, Joshua (25 May 2026). "Pope, urging AI regulation, warns some weapons now beyond human control". ராய்ட்டர்ஸ். https://www.reuters.com/business/media-telecom/pope-leo-urges-world-slow-down-ai-fervent-first-manifesto-2026-05-25/.
  11. Brockhaus, Hannah (2026-05-25). "'Magnifica Humanitas': Pope Leo Invokes Justice to Combat 'Anti-Human Vision' in AI". National Catholic Reporter (in ஆங்கிலம்). Retrieved 2026-05-25.
  12. Schechner, Sam; Stancati, Margherita (2026-05-25). "Pope Leo Compares AI Threat to Biblical 'Tower of Babel'". The Wall Street Journal (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2026-05-25.
  13. "The first encyclical without a Latin version reveals a profound transformation in the Vatican", Infovaticana, 26 May 2026

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகத்தான_மனிதநேயம்&oldid=4558875" இலிருந்து மீள்விக்கப்பட்டது