உள்ளடக்கத்துக்குச் செல்

மகதைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகதைட்டு
Magadiite
மகதைட்டு கனிமம், 1990 ஆம் ஆண்டில் கென்யாவின் கச்சியாடோ மாகாணத்திலுள்ள மகதி ஏரியிலிருந்து சேகரிக்கப்பட்டது.
பொதுவானாவை
வகைபைலோசிலிக்கேட்டு கனிமம்
வேதி வாய்பாடுNaSi7O13(OH)3•4(H2O)
இனங்காணல்
நிறம்வெண்மை
படிக இயல்புநுண் தட்டை படிகங்கள்; தூள்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
அறியப்படாத இடக்குழு
விகுவுத் தன்மைபுட்டி போன்றது
மோவின் அளவுகோல் வலிமை2
மிளிர்வுபளபளப்பு - மங்கல்
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளி கசியும், ஒளி புகாது
ஒப்படர்த்தி2.25 கணக்கிடப்பட்டது
ஒளியியல் பண்புகள்ஈரச்சு
ஒளிவிலகல் எண்nα = 1.470
புறவூதா ஒளிர்தல்மஞ்சள் -வெண்மை-நீளம் மற்றும் குறுகிய அலைநீளத்தில்
மேற்கோள்கள்[1][2][3][4][5]

மகதைட்டு (Magadiite) என்பது NaSi7O13(OH)3•4(H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். நீரிய சோடியம் சிலிக்கேட்டு கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. கார உப்புநீரில் இருந்து ஆவியாகும் கட்டமாக வீழ்படிவாகிறது. மோவின் அளவுகோலில் 2 என்ற மென்மையும் வெள்ளை தூளாகவும் காணப்படுகிறது. ஒற்றைச்சரிவச்சு படிக நிறைகளாக உருவாகிறது.[2][3] கனிமம் நிலையற்றது மற்றும் டையேஜெனீசிஸின் போது சிதைவடைந்து ஒரு தனித்துவமான வகை செர்ட்டை (மாகடி-வகை செர்ட்) விட்டுச்செல்கிறது.[6]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் மகதைட்டு கனிமத்தை Mgd[7]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

கென்யாவின் மகதி ஏரியில் மகதைட்டு கனிமம் காணப்பட்டதாக 1967 ஆம் ஆண்டு ஆன்சு பி. யூக்சுடரால் முதன்முதலில் விவரிக்கப்பட்டது. தான்சானியாவின் ஓல்டுவாய் பள்ளத்தாக்கிலும் காணப்படுகிறது. கனடாவின் மோண்ட்டு செயிண்ட்டு-இலாயரில் உள்ளதைப் போலவே கார ஊடுருவும் சைனைட்டுகளிலிருந்தும் இக்கனிமத்தின் இருப்பு பதிவாகியுள்ளது.[3][6]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகதைட்டு&oldid=4577906" இலிருந்து மீள்விக்கப்பட்டது