உள்ளடக்கத்துக்குச் செல்

மகதி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகதி மொழி
मगही
Magahi
தேவநாகரி எழுத்து முறையில் எழுதப்பட்ட மகதி எனும் சொல்
நாடு(கள்)இந்தியாவின் பீகார்-நேபாளம் எல்லைபகுதிகள்
பிராந்தியம்மகத பிரதேசம் (தெற்கு பீகார், வடக்கு சார்க்கண்டு மற்றும் வடமேற்கு மேற்கு வங்காளம்)[1][2][3]மற்றும் கிழக்கு நேபாளத்தின் தெராய் சமவெளிகள்
இனம்மகதி மக்கள்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
12.7 மில்லியன்  (2011)[4][5]
இந்தி மொழியை கூடுதல் மொழியாக பேசுவர்
ஆரம்ப வடிவம்
பேச்சு வழக்கு
தெற்கு மகதி மொழி
வடக்கு மகதி மொழி
மத்திய மகதி மொழி
தேவநாகரி (அலுவல்)
கைதி மொழி (முன்னர்)
அலுவலக நிலை
அங்கீகரிக்கப்பட்ட சிறுபான்மை
மொழி
 இந்தியா
மொழிக் குறியீடுகள்
ISO 639-2mag
ISO 639-3mag
மொழிக் குறிப்புmaga1260[8]
{{{mapalt}}}
மகதி மொழி பேசப்படும் பிரதேசம்

மகதி மொழி, வட இந்தியாவின் பீகார் மாநிலத்தில், குறிப்பாக மகதப் பிரதேசத்தில் வட்டார வழக்கு மொழியாகப் பேசப்படுகிறது. இது பீகாரி மொழிகளில் ஒன்றாகும். இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மகதி மொழியை பீகார் மட்டுமின்றி சார்க்கண்டு மற்றும் வடமேற்கு மேற்கு வங்காள மாநிலங்களில் சில பகுதிகளில் பேச்சு மொழியாக உள்ளது.[9][10]மேலும் மகதி மொழியை நேபாளத்தின் தெராய் சமவெளிப் பகுதிகளிலும் பேச்சு மொழியாக பேசப்படுகிறது.[11]மகதி மொழியின் முன்னோடியே மாகதிப் பிராகிருதம் ஆகும்.[12]மகதி மொழிக்கு தேவநாகரி எழுத்துமுறையே பயன்படுத்தப்படுகிறது. 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மகதி மொழி, 12.7 மில்லியன் மக்களின் வட்டார வழக்கு மொழியாக உள்ளது.

வரலாறு

[தொகு]

மகதி மொழியின் முன்னோடி மொழியே மாகதிப் பிராகிருதம் ஆகும். மகதி மொழி[13] தற்கால பீகார் மாநிலத்தில் இருந்த மகத இராச்சியத்தில் பேசப்பட்டது. மகதி பிராகிருதத்திலிருந்து தற்போதைய வடிவமான மகதி மொழி எப்போது மாற்றமடைந்தது என்பது குறித்து அறியப்படவில்லை. கிபி 8 முதல் 11வது நூற்றாண்டில் மகதி பிராகிருதத்திலிருந்து மகதி மொழி, அசாமிய மொழி, வங்காள மொழி, போஜ்புரி மொழி, மைதிலி மொழி மற்றும் ஒடியா மொழிகள் தோன்றியிருக்க வேண்டும் என மொழியியல் அறிஞர்கள் கருதுகிறார்கள்.

12ஆம் நூற்றாண்டின் முடிவில் மத்தியகால இந்தோ-ஆரிய மொழியான அபபிரம்சம் மொழி, குஜராத்தி மொழி, மராத்தி மொழி, வங்காள மொழி, போஜ்புரி மொழி, அசாமி, ஒடியா, மைதிலி மொமிகள் மீது தாக்கம் செலுத்தியது.

மகதி மொழியின் பழைய எழுத்து முறையை கைதி மொழிக்கு பயன்படுத்தப்பட்டது. தற்காலத்தில் மகதி மொழியின் எழுத்து முறைக்கு தேவநாகரி பயன்பாட்டில் உள்ளது. 1881களில் இந்தி மொழி பீகார் மாநிலத்தில் பரவிய போது, பொதுமக்கள் உருது மொழியை அலுவல் மொழி பயன்பாட்டிலிருந்து நீக்கினர். 1950ஆம் ஆண்டிலிருந்து இந்தி மொழி பீகார் மாநிலத்தின் அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டது[14]. இதனால் மகதி மொழியின் எழுத்து முறை பயன்பாட்டிலிருந்து தானாகவே நீங்கியது.

மகதி மொழி பேசப்படும் பகுதிகள்

[தொகு]

தற்கால இந்தியாவின் பீகார் மாநிலத்தின் பட்னா மாவட்டம், நாலந்தா மாவட்டம், கயா மாவட்டம், ஜகானாபாத் மாவட்டம், அர்வல் மாவட்டம், அவுரங்காபாத் மாவட்டம், லக்கிசராய் மாவட்டம், ஷேக்புரா மாவட்டம் மற்றும் நவாதா மாவட்டங்களில் மகதி மொழி வட்டார வழக்கு மொழியாக பேசப்படுகிறது.

மகதி மொழி பேசும் மக்கள்

[தொகு]

2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மகதி மொழியை 12.7 மில்லியன் மக்கள் வட்டார வழக்கு மொழியாகப் பேசுகின்றனர்.[4][5]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Grierson, G.A. (1927). "Magahi or Magadhi". Internet Archive.
  2. "Magahi". Omniglot.
  3. Atreya, Lata. "Magahi and Magadh: Language and the People" (PDF). Global Journal of Interdisciplinary Social Sciences.
  4. 4.0 4.1 "Magahi". ethnologue.
  5. 5.0 5.1 "Abstract of Speakers' Strength of Languages and Mother Tongues - 2011" (PDF). Office of the Registrar General & Census Commissioner, India. 2011. p. 6. Retrieved 22 September 2024.
  6. Khortha language
  7. "झारखंड : रघुवर कैबिनेट से मगही, भोजपुरी, मैथिली व अंगिका को द्वितीय भाषा का दर्जा". Prabhat Khabar (in இந்தி). 21 March 2018. Retrieved 17 November 2018.
  8. Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Magahi". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
  9. Prasad, Saryoo (2008). Magahī Phonology: A Descriptive Study. Concept Publishing Company. p. 6. ISBN 9788180695254. Retrieved 4 November 2018.
  10. Brass, Paul R. (2005). Language, Religion and Politics in North India. iUniverse. p. 93. ISBN 9780595343942. Retrieved 4 November 2018.
  11. Eberhard, David M.; Simons, Gary F.; Fennig, Charles D., eds. (2021). "Magahi". Ethnologue: Languages of the World (Twenty-fourth ed.). Dallas, Texas: SIL International. Retrieved 2 January 2025.
  12. "How a Bihari lost his mother tongue to Hindi". 22 September 2017. It is considered as a dialect of Hindi continuum.
  13. Jain Dhanesh, Cardona George, The Indo-Aryan Languages, pp449
  14. Brass Paul R., The Politics of India Since Independence, Cambridge University Press, pp. 183

மேலும் படிக்க

[தொகு]
  • Munishwar Jha. "Magadhi And Its Formation," Calcutta Sanskrit College Research Series, 1967, 256 pp
  • Saryu Prasad - "A Descriptive Study of Magahi Phonology", PhD thesis submitted to Patna University.
  • A.C. Sinha (1966) - "Phonology and Morphology of a Magahi Dialect", PhD awarded by the University of Poona.(now Pune)
  • G.A. Grierson. Essays on Bihari Declension and Conjugation, Journal of the Asiatic Society of Bengal, vol. iii, pp. 119–159
  • Hoernle, A.F. Rudolf & Grierson, G.A. A Comparative Dictionary of the Bihari Language.
  • Prasad, Swarnlata (1959). Juncture and Aitch in Magahi. Indian Linguistics, Turner Jubilee Volume, 1959 pp. 118–124.
  • Sweta Sinha (2014) - "The Prosody of Stress and Rhythm in Magahi", PhD thesis submitted to Jawaharlal Nehru University, New Delhi.
  • Sweta Sinha (2018)- "Magahi Prosody", Bahri Publications: New Delhi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-83469-14-7.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகதி_மொழி&oldid=4239321" இலிருந்து மீள்விக்கப்பட்டது