மகததேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Map of Vedic India.png

மகததேசம் காசிக்கு தெற்கில் யமுனையும், கங்கையும் கூடும் பிரயாகை என்னும் இடத்தில் கிழக்கில் கயா, தெற்கில் சித்திரகூட மலை வரை பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்[தொகு]

இந்த தேசம் நடுவில் உயர்ந்தும்,நான்கு பக்கங்களிலும் சரிவாய் சாய்ந்தும் மிகவும் நல்ல மண் வளத்துடன் இருக்கும் தேசமாகும். இந்த தேசத்தில் எப்போதும் மழை பெய்து கொண்டே இருக்கும்.[2]

மலை, காடு, விலங்குகள்[தொகு]

இந்த தேசத்தின் கிழக்குப்பாகத்தில் சிறு, சிறு குன்றுகளும், சிறு, சிறு காடுகளும் குறைவாயும், செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும். இந்த மலைகளில் சித்ரகூட மலை என்னும் மலை மிகச்சிறந்தவை. இந்த மலைத்தொடருக்கு கமட்டாகிரிஎன்றும் பெயர் உண்டு.

நதிகள்[தொகு]

இந்த மகததேசத்தின் சித்ரகூட மலையின் அருகில் பல்குனீ நதியும், தேவிகாந்தி நதியும் கிரிகாணதீர்த்தம் ஒன்று சேர்ந்து மகத தேசத்தை செழிக்க வைக்கின்றது. அங்கதேசத்திற்கு மேற்கில் கங்கையுடன் சேர்ந்து கிழக்குக் கடலில் வீழ்கிறது.

கருவி நூல்[தொகு]

சான்றடைவு[தொகு]

  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 223 -
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகததேசம்&oldid=2932098" இருந்து மீள்விக்கப்பட்டது