ப. வெ. நந்திதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ப. வெ. நந்திதா
2016இல் ப. வெ. நந்திதா
பிறப்புஏப்ரல் 10, 1996 (1996-04-10) (அகவை 27)
சங்ககிரி, தமிழ் நாடு, இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்கிண்டி பொறியியல் கல்லூரி, சென்னை, இந்தியா
பணிஇந்திய சதுரங்க வீராங்கனை
நாடுஇந்தியா
பட்டம்பெண் கிராண்ட்மாஸ்டர் (2019)
பிடே தரவுகோள்2365 (ஜூன் 2021)
உச்சத் தரவுகோள்2365 (ஜூன் 2021)
பதக்கத் தகவல்கள்
சர்வதேச போட்டிகள்
உலக ஜூனியர் சதுரங்க சாம்பியன்ஷிப்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2016 புவனேசுவரம் (இந்தியா) U-20(G)
உலக யூத் சதுரங்க சாம்பியன்ஷிப்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2010 சால்கிடிக்கி (கிரேக்கம்) U-14(G)
ஆசிய போட்டிகள்
ஆசிய தேசிய (Regions) இணைய சதுரங்க சாம்பியன்ஷிப் - Team
தங்கப் பதக்கம் – முதலிடம் 2020 (இணையம்) Women Category
Asian Youth Chess Championship
தங்கப் பதக்கம் – முதலிடம் 2011 சுபிக் (பிலிப்பைன்ஸ்) U-16(G)
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2012 இக்கடுவை (இலங்கை) U-16(G)
Asian School Chess Championship
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2011 புது டில்லி (இந்தியா) U-16(G)
Asian Junior Chess Championship
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2016 புது டில்லி (இந்தியா) U-20(G)
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2015 பிசுக்கெக் (கிர்கிசுத்தான்) U-20(G)
தேசிய போட்டிகள்
தேசிய அளவு சதுரங்க சாம்பியன்ஷிப்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2013 திப்ருகார் (இந்தியா) U-17(G)
தங்கப் பதக்கம் – முதலிடம் 2010 புது டில்லி (இந்தியா) U-15(G)
தங்கப் பதக்கம் – முதலிடம் 2007 கோழிக்கோடு (இந்தியா) U-11(G)
இந்திய தேசிய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு
தங்கப் பதக்கம் – முதலிடம் 2011-12 ஜபல்பூர் (இந்தியா) U-19(G)
தங்கப் பதக்கம் – முதலிடம் 2009-10 சிந்துதுர்க் (இந்தியா) U-17(G)

பள்ளத்தூர் வெங்கடாசலம் நந்திதா (பிறப்பு ஏப்ரல் 10, 1996) ஒரு இந்திய சதுரங்க வீரர் ஆவார். அவர் பிடேயின் பெண் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தைப் பெற்றுள்ளார். அவர் இந்தியாவின் 17 வது பெண் கிராண்ட்மாஸ்டர் ஆவார். இந்திய பெண் சதுரங்க வீராங்கனைகள் தரவரிசையில் 7 வது இடத்தில் உள்ளார்.

இளமை மற்றும் கல்வி[தொகு]

நந்திதா 10 ஏப்ரல் 1996 இல் தமிழ்நாட்டில் உள்ள சங்ககிரியில் பிறந்தார். அவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரியில் பொறியியலில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.(2014-17).[1] விளையாட்டு ஒதுக்கீட்டுப் பிரிவில் முதலிடம் பெற்று தனது பொறியியல் இடத்தைப் பெற்றார்.

சதுரங்க வாழ்க்கை[தொகு]

2016 ஆம் ஆண்டில் ஒடிசாவின் புவனேஸ்வரில் நடைபெற்ற U-20 உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப்பில் நந்திதா வெள்ளிப் பதக்கம் வென்றார்.[2] 2010 இல் கிரீஸின் ஹல்கிடிகியில் நடைபெற்ற U-14 உலக இளைஞர் சதுரங்கப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[3] அக்டோபர் 2020 இல், அவர் இந்தியன் பெண்கள் சதுரங்க அணியில் வைசாலி Rameshbabu, பத்மினி, பக்தி குல்கர்னி, மேரி ஆன் கோமசு ஆகியோருடன் இடம் பெற்றார். இந்த அணி பிடே நடத்திய ஆசிய நாடுகள் (பகுதிகள்) இணைய சதுரங்க சாம்பியன்ஷிப் 2020ஐ வென்றது. இந்த போட்டியில் 31 ஆசிய நாடுகள் கலந்து கொண்டன.[4]

ஜூன் 2021 நிலவரப்படி,அவருடைய எலோ மதிப்பீடு 2365 ஆகும். இது அவரது தற்போதைய உச்ச மதிப்பீடாகும்.[5] மேலும் இந்திய பெண் சதுரங்க வீரர்களின் தரவரிசையில் 7 வது இடத்தில் உள்ளார்.

ஆண்டு உச்ச மதிப்பீடு தேசிய தரவரிசை (பெண்கள்) சாதனைகள்  
2021 2365 7 மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடமிருந்து "ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரர்" விருதை 09 பிப்ரவரி 2021 அன்று சென்னை தமிழ்நாடு செயலகத்தில் பெற்றார். [6]
2020 2365 7 ஆசிய ஆன்லைன் நாடுகள் கோப்பையில் தங்கம் வென்றது [4]
2019 2348 10 இந்தியாவின் 17 வது பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனார் [7]
2016 2251 14 34 வது உலக ஜூனியர் பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப்- வெள்ளிப் பதக்கம்
2015 2205 தரவு கிடைக்கவில்லை பெண் சர்வதேச மாஸ்டர் பட்டம்

படங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Anna University (Men & Women) Teams - Inter University Achievements 2016-17". 2018-05-04. https://www.annauniv.edu/sports/downloads/News/Annual%2520Award%2520Booklet%25202016%2520-%252017%2520%26%25202017-%252018.pdf&ved=2ahUKEwjfx-uY_ZftAhWh7HMBHY0gDYAQFjAIegQIHxAB&usg=AOvVaw1a0cVHQ3ZvZ1K8btYsPNwm. 
  2. chess federation, all india (2016-08-21). "34th World Junior (U-20) Girls Chess Championship 2016". chess-results.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-20.
  3. "World Youth Chess Championships 2010 Open Under 18". wycc2010.chessdom.com. பார்க்கப்பட்ட நாள் 21 November 2010.
  4. 4.0 4.1 "Asian online team chess: India women triumph, men take silver". sportstar.thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 25 October 2020.[தொடர்பிழந்த இணைப்பு]"Asian online team chess: India women triumph, men take silver"[தொடர்பிழந்த இணைப்பு]. sportstar.thehindu.com.
  5. "Standard Top 100 Women November 2020". ratings.fide.com. பார்க்கப்பட்ட நாள் 20 November 2020.
  6. "Adhiban, Sethuraman, Gukesh, Laxman and Nandhidhaa receive Outstanding Sportsperson award by Tamil Nadu government". Chessbase India. 11 February 2021. பார்க்கப்பட்ட நாள் 11 February 2021.
  7. "India's latest WGM". Chessbase India. 23 March 2015. பார்க்கப்பட்ட நாள் 12 August 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._வெ._நந்திதா&oldid=3633150" இலிருந்து மீள்விக்கப்பட்டது