ப. விமலா
ப. விமலா | |
|---|---|
| பிறப்பு | 9 மே 1987 குலசேகரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு |
| பணி | உதவிப்பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர் |
| விருதுகள் | சாகித்திய அகாதமி விருது (2024) |
ப. விமலா (P. Vimala)(பிறப்பு 09 மே 1987) என்பவர் இந்தியாவில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் புனித சவேரியார் கல்லூரியில் பணியாற்றி வரும் தமிழ் உதவிப் பேராசிரியரும் மொழிப்பெயர்ப்பிற்காக 2025ஆம் ஆண்டு சாகித்திய அகதாமி விருதுபெற்ற விருதாளரும் ஆவார்.[1]
கல்வி
[தொகு]கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தினைச் சேர்ந்த விமலா தனது இளங்கலை இலக்கியம், முதுகலைத் தமிழ் பட்டங்களை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முறையே 2008 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் முடித்தப் பின்னர், புது தில்லி ஜவர்கலால்நேரு பல்கலைக்கழகத்தில் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் ஆய்விய நிறைஞர் பட்டத்தினை 2015-இல் பெற்றார். இதனைத் தொடர்ந்து இதே பல்கலைக்கழகத்தில் தொல்காப்பியம் குறித்த மலையாள மொழிப்பெயர்ப்புகளில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டார்.
முனைவர் பட்ட ஆய்விற்குப் பின்னர் 2019ஆம் ஆண்டு பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் கல்லூரியில் தமிழ்த் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.[2]
நூல் வெளியீடு
[தொகு]- தமிழ் – மலையாள இலக்கிய மொழிபெயர்ப்புக்கள். காவ்யா வெளியீடு, சென்னை. 2017
- விவேகானந்தம் (மலையாளப் புதினத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு), காவ்யா வெளியீடு, சென்னை. 2021
- எனது ஆண்கள் (மலையாளத்தில் ஜவர்கலால்நேரு பல்கலைக்கழகத்தில் எழுதி 2018 ஆம் ஆண்டு வெளியான என்டே ஆணுங்கள் நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு), காலச்சுவடு வெளியீடு, நாகர்கோவில். 2022[3]
விருதுகள்
[தொகு]- தமிழ் இலக்கியப் படைப்புகளில் சிறந்து விளங்கும் படைப்பாளர்களுக்கான ஜி. நாகராஜன் நினைவு இலக்கிய விருது, தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை, தேனி (தமிழ்நாடு). 24 சனவரி 2021
- மொழிப்பெயர்ப்பிற்கான சாகித்திய அகாதமி விருது, 2025 (எனது ஆண்கள்-நளினி ஜமீலா எழுதி 2018இல் வெளிவந்த ‘என்டே ஆணுங்கள்’ நூலின் தமிழ் மொழிப்பெயர்ப்பு)[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு நெல்லை பேராசிரியை தேர்வு". Hindu Tamil Thisai. 2025-03-09. Retrieved 2025-03-09.
- ↑ http://stxavierstn.edu.in/dept/Tamil/faculty/Shift%20II/pdf/CV%20-%20Dr.P.%20Vimala%20-%20Tamil.pdf
- ↑ https://www.dailythanthi.com/news/tamilnadu/sahitya-akademi-award-for-professor-nellai-chief-minister-mk-stalin-congratulates-1147191