ப. சரவணன் (தமிழறிஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ப. சரவணன் (பி. 31.07.1973) ஒரு தமிழறிஞர். சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், திறனாய்வு, சுவடியியல், பதிப்பியல் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர். தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பான ஆவணப்படுத்தலில் குறிப்பிடத்தக்க அளவில் பங்களித்து வருகிறார். சென்னை மாநகராட்சிப் பள்ளி ஒன்றில் முதுநிலைத் தமிழாசிரியராகப் பணியாற்றுகின்றார். திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, தமிழ்ப் பரிதி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார். அவரது நூல்கள்:

எழுத்துகள்[தொகு]

ஆய்வு நூல்கள்[தொகு]

படிமம்:அருட்பா X மருட்பா.jpg
அருட்பா X மருட்பா
  1. அருட்பா X மருட்பா (2001)
  2. கானல் வரி ஒரு கேள்விக்குறி (2004)
  3. வாழையடி வாழையென (2009)
  4. நவீன நோக்கில் வள்ளலார் (2010)
  5. அருட்பா X மருட்பா கண்டனத்திரட்டு (2010)

பதிப்புகள்[தொகு]

படிமம்:தொகுதிகள்.jpg
உ.வே.சா.தொகுதிகள்
  1. ஔவையார் கவிதைக் களஞ்சியம் (2001)
  2. மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் கட்டுரைகள் (ஆறு தொகுதிகள், 2001)
  3. நாலடியார் 1892 (2004)
  4. மநு முறைகண்ட வாசகம் 1854 (2005)
  5. வேங்கடம் முதல் குமரி வரை (2009)
  6. அருட்பா மருட்பா கண்டனத் திரட்டு (2010)
  7. கமலாம்பாள் சரித்திரம் (2011)
  8. சாமிநாதம்: உ.வே.சா.முன்னுரைகள் (2014)
  9. உ.வே.சா. கட்டுரைகள் -5 தொகுதிகள் (2016)
  10. தாமோதரம்: சி.வை.தா. பதிப்புகள் (2017)
  11. உ.வே.சா.வின் என் சரித்திரம் (2017)

உரைகள்[தொகு]

  1. வேமன நீதி வெண்பா (2008)
  2. சிலப்பதிகாரம் (2008)
  3. கலிங்கத்துப் பரணி - ஆய்வுப்பதிப்பு (2013)
  4. தமிழ்விடுதூது (2016)

விருதுகள்[தொகு]

  1. ஐந்தாம் ஜார்ஜ் நினைவுப் பரிசு - முதுகலைப்படிப்பு - சென்னைப் பல்கலைக் கழகம் (1998)
  2. திருப்பூர் தமிழ்ச்சங்க விருது - சிறந்த நூல் - அருட்பா X மருட்பா (2002)
  3. தமிழ்ப்பரிதி விருது (2005)
  4. சுந்தரராமசாமி விருது (2013)
  5. தமிழ்நிதி விருது - சென்னைக் கம்பன் கழகம் (2014)
  6. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை விருது - சென்னைக் கம்பன் கழகம் (2016)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._சரவணன்_(தமிழறிஞர்)&oldid=2740931" இருந்து மீள்விக்கப்பட்டது