ப. ஐயம்பெருமாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ப. ஐயம்பெருமாள் (பிறப்பு: பிப்ரவரி 12, 1957) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். உற்பத்திப் பிரிவில் முதுநிலைப் பொறியியல் பட்டமும், இயந்திரவியலில் முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையச் செயல் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். பல ஆண்டுகளாக அறிவியல் தொழில்நுட்பக் கருத்துக்களைப் பரப்பி வருகிறார். இவர் ஆர். சாமுவேல் செல்வராஜ் என்பவருடன் சேர்ந்து எழுதிய "விந்தைமிகு பேரண்டம்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._ஐயம்பெருமாள்&oldid=3614057" இருந்து மீள்விக்கப்பட்டது