ப. வி. ச. டேவிதார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ப.வி.ச.டேவிதார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ப. வி. ச. டேவிதார் (P.W.C. Davidar) இந்திய ஆட்சிப் பணி அதிகாரி. இவர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் வணிகவியலில் இளநிலைப் பட்டமும், அதன் பின்பு அதே கல்லூரியில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் அரசியல் அறிவியல் பாடத்திற்கான விரிவுரையாளர் பணியிலிருந்த இவர் 1986 ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி தேர்வில் வெற்றி பெற்று தனது அரசுப் பணிகளைத் தொடங்கினார்.

அரசுப் பணி[தொகு]

தமிழ்நாடு அரசுப் பணியில் இவர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலராகவும், தமிழ்நாடு மின்னணுவியல் கழகத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். இதற்கு முன்பு கீழ்காணும் பணிகளில் இருந்து சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார்.

  • துணை ஆட்சியர், அறந்தாங்கி
  • ஆணையாளர், சென்னை மாநகராட்சி[1]
  • மாவட்ட ஆட்சித் தலைவர், வேலூர் மாவட்டம்
  • இயக்குனர், கைத்தறி மற்றும் நூற்பாலைகள்
  • திட்ட இயக்குனர், தமிழ்நாடு சுகாதார மேம்பாட்டுத் திட்டம் மற்றும் சிறப்புச் செயலாளர் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை

தமிழ் இணைய மாநாடு ஒருங்கிணைப்பாளர்[தொகு]

தமிழ்நாடு அரசின் சார்பில் கோயம்புத்தூரில் 2010 ஆம் ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரை நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் இணைந்து நடைபெற்ற ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்டு செயல்பட்டுள்ளார்[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.thehindu.com/news/cities/chennai/article3301181.ece
  2. "உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு இணையத்தளம்". Archived from the original on 2010-01-27. பார்க்கப்பட்ட நாள் 2010-03-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._வி._ச._டேவிதார்&oldid=3711196" இலிருந்து மீள்விக்கப்பட்டது