பௌஷ் திருவிழா
பௌஷ் மேளா ( Poush Mela ) என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் உள்ள பிர்பூம் மாவட்டத்தில் உள்ள சாந்திநிகேதனில் அறுவடை காலத்தைக் குறிக்கும் வருடாந்திர கண்காட்சியும், திருவிழாவும் ஆகும். பௌஷ் மாதத்தின் 7வது நாளில் தொடங்கும் (கிரெகொரியின் நாட்காட்டியின் திசம்பர் முதல் சனவரி) இந்த கண்காட்சி அதிகாரப்பூர்வமாக மூன்று நாட்களுக்கு நீடிக்கும். விற்பனையாளர்கள் மாத இறுதி வரை தங்கலாம். 2017 முதல், கண்காட்சி ஆறு நாட்கள் நீடித்தது. பெங்காலி நாட்டுப்புற இசையின் நேரடி நிகழ்ச்சிகளான பவுல், [1] கீர்த்தனைகளும், கோபி கானம் போன்றவையும் இந்த கண்காட்சியின் முக்கிய அம்சமாகும்.
பின்னணி
[தொகு]தேபேந்திரநாத் தாகூர் இருபது சீடர்களுடன் இராம் சந்திர வித்யாபகிசிடமிருந்து 21 திசம்பர் 1843 அன்று பிரம்ம சமாஜத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் (வங்காள நாட்காட்டியின்படி 7 பௌஷ் 1250). சாந்திநிகேதனில் பௌஷ் உத்சவம் நடைபெற இதுவே அடிப்படையாக இருந்தது.[2]
21 திசம்பர் 1891 அன்று சாந்திநிகேதனில் ஒரு பிரம்ம மந்திர் நிறுவப்பட்டது. 1894 ஆம் ஆண்டு பிரம்ம மந்திரின் நிறுவன ஆண்டு விழாவையொட்டி, மந்திருக்கு எதிரே உள்ள மைதானத்தில் ஒரு சிறிய கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. சிறிய பௌஷ் மேளாவாக ஆரம்க்கப்பட்ட இது, இப்போது பிர்பூம் மாவட்ட மக்கள் மட்டுமின்றி, சுற்றியுள்ள சுற்றுலாப் பயணிகளின் கவனத்தையும் ஈர்க்கிறது. [3]
1894 முதல், ஒவ்வொரு ஆண்டும் பௌஷ் மேளா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் 1943 ஆம் ஆண்டு வங்காளப் பஞ்சம், 1946 ஆம் ஆண்டு நேரடி நடவடிக்கை நாள் , கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக இது மூன்று முறை நிறுத்தப்பட்டது. [4]
இதனையும் பார்க்கவும்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "Poush Mela". West Bengal Tourism. Archived from the original on 22 February 2001. பார்க்கப்பட்ட நாள் 2009-02-14.
- ↑ Basak, Tapan Kumar, Rabindranath-Santiniketan-Sriniketan (An Introduction), p. 36, B.B.Publication
- ↑ Ghosh, Swapan Kumar, Santiniketan-Visva Bharati – Birbhumer Srestha Tirtha, Paschim Banga, February 2006, (in Bengali), Birbhum special issue, p. 250, Information and Culture department, Govt. of West Bengal
- ↑ Patrika, Anandabazar (Nov 9, 2020). "Poush Mela of Santiniketan will not be organized".
வெளி இணைப்புகள்
[தொகு]- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Santiniketan