பௌலா ரிச்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பௌலா ரிச்மன் (ஆங்கிலம்: Paula Richman), ஐக்கிய அமெரிக்க நாட்டின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள லோரெய்ன் கவுண்டியில் உள்ள ஓபர்லின் (ஆங்கிலம்: Oberlin) நகரில் அமைந்துள்ள ஓபர்லின் கல்லூரியில் மதத் துறையின் எமரிட்டா வில்லியம் எச்.டான்ஃபோர்த் பேராசிரியர் ஆவார். தமிழ் மொழி மற்றும் இலக்கியங்களைக் கற்பதிலும் ஆர்வம் கொண்ட இவர் இந்து இதிகாசமான இராமாயணத்தின் மூலம் மீதான ஆர்வம் காரணமாக கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக ஆய்வு செய்து வருகிறார். இவருடைய இராமாயண ஆய்வுகளுக்காக இந்தியாவில் மிகவும் பரவலாக அறியப்பட்டவர் ஆவார்.

வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

பௌலா ரிச்மன் மதங்களின் வரலாற்றில் தனது முதுகலை பட்டத்தை பெற்ற பிறகு, சிகாகோ பல்கலைக்கழகத்தில் பௌத்த காவியமான மணிமேகலையை தன் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்[1]. அவர் தமிழ், சமஸ்கிருதம் உட்பட பல மொழிகளைப் படித்துள்ளார். இவரது பேராசிரியர் பணியில் [தெளிவுபடுத்துக] பல விருதுகளை வென்றுள்ளார்.[2][சான்று தேவை]

சிகாகோ பல்கலைக் கழகத்தில் மைக்கேல் எச். பிஷரை சந்தித்துள்ளார். இவர்கள் திருமணத்திற்குப் பின்னர் கணவர் மைக்கேல் எச். பிஷர் ஓபர்லினில் உள்ள ஓபர்லின் கல்லூரியில் வரலாற்றுத் துறையின் எமரிட்டஸ், ராபர்ட் எஸ். டான்ஃபோர்த் பேராசிரியராக உள்ளார். இவரும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றார்[3]. இந்த இணை மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியா முழுவதும் பயணம் செய்துள்ளனர். மைசூர், ஒரிசா மற்றும் ஐதராபாத் ஆகிய இடங்கள் இதில் இடம்பெற்றுள்ளன[4]. பௌலா ரிச்மன் கேரளாவில் நடைபெறும் கேரள இலக்கிய திருவிழாவில் இவர் முனைப்புடன் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார். இந்தத் திருவிழா கேரளா அரசு, கேரளா சுற்றுலா துறை, மற்றும் டி.சி.கிழக்கேமுரி ஆகியோரால் ஒருங்கிணைப்பட்டு கேரளாவின் அரபிக் கடற்கரை நகரங்களில் நடத்தப்படுகிறது.

இராமாயண ஆய்வுகள்[தொகு]

இவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்றார். தமிழ் மொழியை நன்கு கற்றுக்கொள்வதற்காக இரண்டு வருடங்கள் கோவையிலும் மதுரையிலும் இருந்துள்ளார். [5]தன் கல்லூரி நாட்களில் இராமாயணம் குறித்துக் கேள்விப்பட்டுள்ளார். ஆர்.கே.நாராயணனின் இராமாயணம் (ஆங்கில பதிப்பு) படித்து வியந்துள்ளார். வால்மீகி மற்றும் துளசிதாசர் இராமாயணம் மட்டுமின்றி தமிழில் கம்பராமாயணமும் மலையாளத்தில் எழுத்தச்சன் இராமாயணம் மற்றும் மாப்பிள்ள இராமாயணமும் இவரைக் கவர்ந்தன. [6]

இராமாயணம் குறித்து பல நூல்களை எழுதியுள்ளார். "பல ராமாயணங்கள்" (Many Ramayana) என்ற நூல் இராமாயணத்தை எழுதிய ஆசிரியர்களைப் பற்றியது. இந்த நூல் இந்து சமய ஆர்வலர்களிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொண்டது. இந்நூலின் மிகவும் சர்ச்சைக்குரிய பகுதி வரலாற்றாசிரியர் அ.கி.இராமானுசன் இயற்றிய முன்னூறுு இராமாயணங்கள் என்ற கட்டுரையாகும். அவரது இரண்டாவது புத்தகமான "இராமாயணம் குறித்த கேள்வி" (Questioning Ramayana) என்ற நூல் வாசகர் மனதிலும் எழும் சந்தேகங்களைப் பற்றியது. மூன்றாவது புத்தகம் "நவீன தென்னிந்தியாவில் இராமாயணக் கதைகள்" ஆகும்[7]. இராமாயணம் தொடர்புடைய தோல்பாவைக் கூத்துக் கலையிலும் இவர் ஆர்வம் காட்டி வருகிறார்.

எழுதிய நூல்கள்[தொகு]

Books
 • 1. Many Ramayanas: The Diversity of a Narrative Tradition in South Asia. by Paula Richman (Editor) Publisher: Oxford Universit Press, 1997
 • 2. Ramayana Stories in Modern South India Ramayana Stories in Modern South India: An Anthology an Anthology. by Paula Richman. Published by Indiana Univ Pr, 2008
 • 3. Questioning Ramayanas: A South Asian Tradition. by Paula Richman (Editor) Published by University of California, Berkeley, 2001
 • 4. Women, branch stories, and religious rhetoric in a Tamil Buddhist text (Foreign and comparative studies. South Asian series). by Paula Richman
 • 5. Extraordinary Child: Poems from a South Indian Devotional Genre. by Paula Richman. Published by Univ of Hawaii Pr, 1997
 • 6. Performing the Ramayana Traditions: Enactment, Interpretation, and Argument. by Paula Richman (Editor), Rustom Bharucha (Editor)
 • 7. The Crisis of Secularism in India. by Anuradha Dingwaney Needham (Editor), Rajeswari Sunder Rajan (Editor), Shabnum Tejani (Contributor), Paula Richman (Contributor)
 • 8. Gender and Religion: On the Complexity of Symbols. Bynum, Caroline Walker & Harrell,Stevan & Richman, Paula (editor). Published by Beacon Press, Boston MA, 1986

மேற்கோள்கள்[தொகு]

 1. Nanisetti, Serish. "Collector of stories". The Hindu (January 18, 2010). https://www.thehindu.com/features/friday-review/art/Collector-of-stories/article16838145.ece. பார்த்த நாள்: 12 April 2022. 
 2. "Our Tour Scholars: Michael H. Fisher and Paula Richman". Far Horizons. Far Horizons Archaeological & Cultural Trips, Inc. பார்க்கப்பட்ட நாள் 12 April 2022.
 3. "Our Tour Scholars: Michael H. Fisher and Paula Richman". Far Horizons. Far Horizons Archaeological & Cultural Trips, Inc. பார்க்கப்பட்ட நாள் 12 April 2022.
 4. "Paula Richman and her ‘Ramayana’ journey". The New Indian Express (16th May 2012). https://www.newindianexpress.com/states/kerala/2010/jan/25/paula-richman-and-her-ramayana-journey-164101.html. பார்த்த நாள்: 12 April 2022. 
 5. Vishnoi, Anubhuti; Thackernew, Teena. "Different cultures have derived different morals from Ramayana". The Indian Express (January 20, 2015). https://indianexpress.com/article/india/india-others/different-cultures-have-derived-different-morals-from-ramayana/. பார்த்த நாள்: 12 April 2022. 
 6. Venkat, Lalitha. "Paula Richman: Ramayana is a global text and global piece of theatre. Interview on December 14, 2008". Narthaki. பார்க்கப்பட்ட நாள் 12 April 2022.
 7. Sathaye, Adheesh. "Sathaye on Richman, 'Ramayana Stories in Modern South India: An Anthology". H-Net: Humanities & Social Sciences Online. பார்க்கப்பட்ட நாள் 12 April 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பௌலா_ரிச்மன்&oldid=3416282" இலிருந்து மீள்விக்கப்பட்டது