பௌர்ணமி பூஜை

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search

பௌர்ணமி பூஜை என்பது இந்து சமய கோயில்களிலும், இந்து சமயத்தினர் வீடுகளிலும் கடைபிடிக்கப்படும் விழாவாகும். [1] இப்பூசையைச் செய்தால் மாங்கல்ய பாக்கியமும் (திருமணம்), மாங்கல்யம் நிலைக்கும் (கணவன் உயிருடனுடம் நலமுடனும் இருப்பான்) எனவும் நம்பப்படுகிறது. இந்து சமயத்தில் இன்றும் நிலவுகின்ற இயற்கை வழிபாடுகளில் இந்த பௌர்ணமி பூசையும் ஒன்றாகும். இந்நாளில் சந்திரனிலிருந்து அதிகப்படியான வெளிச்சம் பூமிக்கு கிடைக்கிறது. இந்த காரணத்தினால் பௌர்ணமி நாட்களில் இரவுகளை மக்கள் கொண்டாடியுள்ளார்கள். அருகிலிருக்கும் நீர்நிலைகளின் கரைகளில் சென்று பொழுதினை கூடி ஒன்றாக கழிப்பதிலும், வீடுகளிலிருந்து வெளிவந்து மக்கள் கூடி கொண்டாடவும் இந்த வெளிச்சம் பயன்பட்டுள்ளது. பண்டைய வழிபாட்டின் நீட்சியாக இன்றும் இந்து சமயத்தினர் இந்த விழாவினை கொண்டாடுகிறார்கள்.

பௌர்ணமி விரதம்[edit]

பௌர்ணமி நாளில் காலையில் எழுந்ததிலிருந்து உண்ணா நோம்பிருந்து, பௌர்ணமியை பூசையை முடித்த பின்பு உண்ணுதலை பௌர்ணமி விரதம் என்கிறார்கள். வருடத்திற்கு 12 நாட்கள் இவ்வாறு பௌர்ணமி விரதம் இருக்க நேரிடும்.

தமிழ்மாதங்களும் பௌர்ணமியும்[edit]

தமிழ்மாதங்கள் ஒவ்வொன்றில் பௌர்ணமி வருகையில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. பொதுவாக தமிழ்மாதங்களில் வருகின்ற பௌர்ணமி சில நட்சத்திர நாட்களில் வருமென கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணிப்பு சில நேரங்களில் தவறுகிறது.

 • சித்திரை மாதம் - சித்திரை நட்சத்திரம்
 • வைகாசி மாதம் - விசாக நட்சத்திரம்
 • ஆனி மாதம் - மூல நட்சத்திரம்
 • ஆடி மாதம் - உத்திராட நட்சத்திரம்
 • ஆவனி மாதம் - அவிட்ட நட்சத்திரம்
 • புரட்டாசி மாதம் - பூரட்டாதி நட்சத்திரம்
 • ஐப்பசி மாதம் - அசுவினி நட்சத்திரம்
 • கார்த்திகை மாதம் - கிருத்திகை நட்சத்திரம்
 • மார்கழி மாதம் - மிருகசீரிஷம்/ திருவாதிரை நட்சத்திரம்
 • தை மாதம் - பூச நட்சத்திரம்
 • மாசி மாதம் - மக நட்சத்திரம்
 • பங்குனி மாதம் - உத்திரம் நட்சத்திரம்

திருவிழாக்கள்[edit]

ஆதாரங்கள்[edit]

 1. "Dinakaran - பூரண வளம் தரும் பௌர்ணமி பூஜை".