பௌபா
பௌபா (Paubha) என்பது நேபாளத்தின் நேவார் மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு பாரம்பரிய மத ஓவியமாகும். பௌபாக்களில் தெய்வங்கள், மண்டலங்கள் அல்லது நினைவுச்சின்னங்கள் சித்தரிக்கப்படுகிறது. மேலும் தியானத்தில் பயிற்சி செய்பவர்களுக்கு பயன்படுகிறது. திபெத்திய தங்கா ஓவியங்களுக்கு இணையாக இது கருதப்படுகிறது.[1] [2]
பெரும்பாலான பௌபாக்கள் பௌத்த கருப்பொருள்களை வெளிபடுத்துகின்றன. ஆனால் ஒரு சில இந்து சமயக் கூறுகளைக் கொண்டுள்ளன. ஓவியம் கலைஞர் மற்றும் புரவலர் இருவருக்கும் மத தகுதியைப் பெறுவதற்காக உருவாக்கப்படுகிறது. பண்டிகைகள் மற்றும் பிற சிறப்பு சந்தர்ப்பங்களில் காட்சிப்படுத்தப்படும் பௌபாக்களை வரைவதற்கு நேவார் பௌத்தர்கள், கலைஞர்களை நியமித்துள்ளனர். பௌபாக்களின் பாரம்பரிய ஓவியர்கள் சித்ரகார் சாதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் நேபால் பாசாவில் புன் (பூன்) என்று அழைக்கப்படுகிறார்கள்.[3]
வரலாறு
[தொகு]லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி அருங்காட்சியகத்தில் உள்ள அமிதாபா புத்தரின் ஒரு பௌபா 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பாணியில் உருவாக்கப்பட்ட ஆரம்பகால மாதிரியாக நம்பப்படுகிறது (நேபாள சம்பத் 485).[4] இது நேவார் கலைஞர்களின் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு. இது இமயமலைப் பகுதி முழுவதும் மற்றும் சீனா வரை இவர்களை கொண்டு சென்றது.[5] நேவார் கலைஞர்களும் வணிகர்களும் பௌபா கலையை திபெத்துக்கு எடுத்துச் சென்றனர். இதிலிருந்து திபெத்திய தங்கா உருவானது.[6]
ஓவியம்
[தொகு]செவ்வக வடிவிலான துணியில் பௌபாக்கள் வரையப்படுகின்றன. எருமையின் பசை மற்றும் வெள்ளை களிமண் கலவையைப் பயன்படுத்தி இது தயாரிக்கப்படுகிறது. பின்னர் மேற்பரப்பு மென்மையான கல்லால் தேய்க்கப்பட்டு மெருகூட்டப்படுகிறது. பாரம்பரியத்தால் வழங்கப்பட்ட விதிகள் மற்றும் பரிமாணங்களின்படி ஓவியம் வரையப்படுகிறது. மேலும் கலைஞர்கள் தங்கள் படைப்பாற்றலைப் இதில் பயன்படுத்த முடியாது.[7]
இந்த வண்ணப்பூச்சு கனிமங்கள் மற்றும் தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. தங்கம் மற்றும் வெள்ளி வண்ணப்பூச்சுகளும் பௌபாக்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஓவியம் வரைந்து முடித்தவுடன் தெய்வத்தின் கண்களுக்கு வர்ணம் பூசப்படுகின்றன. இது "மிகா சாய்கேகு" (கண்களைத் திறப்பது) என்று அழைக்கப்படுகிறது.[8] காட்சிக்கு ஒரு சட்டகத்தை உருவாக்க பௌபாவின் விளிம்பில் அலங்காரமாகத் தைக்கப்படுகிறது.
கண்காட்சிகள்
[தொகு]தீபங்கர புத்தர் மற்றும் பௌபாக்களின் சிலைகளின் வருடாந்திர கண்காட்சி குன்லா மாதத்தில் காத்மாண்டு சமவெளியிலுள்ள புனிதத் தளங்களில் நடைபெறுகிறது. இந்த விழா பஹித்யாஹ் புவேகு என்று அழைக்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்துடன் ஒத்திருக்கும் குன்லா, நேவார் பௌத்தர்களுக்கு புனிதமான மாதமாகும். இசைக்குழுக்கள் தலைமையிலான பக்தர்கள் குழுக்கள் காட்சிகளைப் பார்க்க சுற்றுப்பயணம் செய்கின்றன. சமீப காலங்களில், கலைத் திருடர்கள் பற்றிய பயம் காரணமாக பாரம்பரிய கண்காட்சிகள் குறைவாகவும் குறுகியதாகவும் மாறிவிட்டன.[9]
சமகால பௌபா
[தொகு]20 ஆம் நூற்றாண்டின் நேபாள பாரம்பரிய ஓவியங்கள் பௌத்தத் தெய்வங்கள் மற்றும் இந்து கடவுள்களை பாறை வண்ணப்பூச்சுடன் விவரிக்கிறது. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மேற்கத்திய பாணி யதார்த்தமான வெளிப்பாடுகளை உள்ளடக்கிய ஒருவகை ஓவியம் தோன்றியது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பாக எண்ணெய் ஓவியம், துடிப்பான வண்ணங்களுடன் சமகால நகைகளுடன் ஆகியவற்றைச் சித்தரிகின்றன.
மத நடைமுறை வண்ணப்பூச்சு காரணமாக பெரும்பாலான பௌபாவிற்கு பெயர் மற்றும் தேதி இல்லை. ஆனந்தமுனி சக்யா (1903-1944) காத்மாண்டுவின் பழைய சந்தை பகுதியில் உள்ள இட்டும்-பாஹல் என்ற பௌத்த கோவிலுக்கு அருகில் பிறந்தார். அவரது பௌபா சமகாலத் தொடுதலைக் கொண்டுள்ளது. 1964 ஆம் ஆண்டில் காத்மாண்டுவின் மையத்தில் பிறந்த உதய சரண் சிரேசுதா ஆனந்த முனியின் பாணியைப் பின்பற்றுகிறார். ஒரு நேவாரான சிரேசுதாவின் அன்றாட வாழ்வில் சடங்குகள் மற்றும் பொருள்கள் பற்றிய ஆழமான அறிவு, பௌபா ஓவியங்கள், அவரது சூழ்நிலைகளைக் காட்சிப்படுத்துதல் மற்றும் நவீனத்துவத்தின் தனித்துவமான மற்றும் செல்வாக்கு ஆகியவற்றை அவர் ஓவியத்தை உருவாக்கினார்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Shakya, Min Bahadur (2011). "Paubha Paintings". Arts of Nepal. Archived from the original on 21 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 24 September 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Macdonald, A.W. and Stahl, Anne Vergati (1979) Newar Art: Nepalese Art during the Malla Period. New Delhi: Vikas Publishing House.
- ↑ Chitrakar, Madan (2000) Tej Bahadur Chitrakar: Icon of a Transition. Kathmandu: Teba-Chi (TBC) Studies Centre. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 99933-879-7-5. Page 17.
- ↑ Shakya, Min Bahadur (2011). "Paubha Paintings". Arts of Nepal. Archived from the original on 21 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 24 September 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "The Stuart Cary Welch Collection". Sotheby's. பார்க்கப்பட்ட நாள் 24 September 2012.
- ↑ "The Nepalese Legacy in Tibetan Painting". Rubin Museum of Art. Archived from the original on 20 November 2011. பார்க்கப்பட்ட நாள் 25 September 2012.
- ↑ Pradhan, Ujjwal (10 July 2010). "A heritage in peril" இம் மூலத்தில் இருந்து 25 March 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110325063507/http://www.ekantipur.com/the-kathmandu-post/2010/07/09/features/a-heritage-in-peril/210299/. பார்த்த நாள்: 24 September 2012.
- ↑ Gurung (Pradhan), Renuka (2011). "Paubha Painting: The Traditional Art of Nepal". Arts of Nepal. Archived from the original on 21 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 24 September 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Shakya, Min Bahadur (2011). "Paubha Paintings". Arts of Nepal. Archived from the original on 21 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 26 September 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)