பௌத்த தமிழ் இலக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பெளத்த தமிழ் இலக்கியம் என்பது பெளத்த சமயம் பற்றிய தமிழ் இலக்கியங்களை முதன்மையாகக் குறிக்கிறது. பெளத்தர்களால் எழுதப்பட்ட பிற தமிழ் இலக்கியங்களையும் இது சுட்டுவதுண்டு. சங்க காலம் தொடக்கம் தற்காலம் வரை பெளத்த தமிழ் இலக்கியங்கள் உண்டு. குண்டலகேசி, மணிமேகலை போன்ற பெரும் காப்பியங்கள் பெளத்த காப்பியங்கள் ஆகும். பெளத்தர்கள் அறம், நீதி, மெய்யியல், மொழியியல், மருத்துவம் போன்ற பல துறைகளில் தமிழில் ஆக்கங்கள் தந்துள்ளார்கள். இன்று தமிழரின் விழுமியங்கள் பல இந்த இலக்கியத்தின், சமூக பண்பாட்டின் தாக்கத்தினால் செதுக்கப்பட்டுள்ளன. இன்று தமிழ் தலித் ஆய்வாளர்கள் பெளத்த தமிழ் இலக்கியங்கள் மீது சிறப்பு அக்கறை காட்டுகிறார்கள்.

வரலாறு[தொகு]

தமிழ் மறுமலர்ச்சி (18,19 ம் நூற்றாண்டுகள்)[தொகு]

தமிழ் மறுமலர்ச்சியில், சங்க கால தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்ததில் பெளத்த தமிழ் இலக்கியவாதிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. பெரும்பாலும் ஆதிதிராவிட, அல்லது தலித் சமூகத்தைத் சேர்ந்த இவர்களிடமே பல ஏடுகள் இருந்தன. இவர்கள் இந்த இலக்கியங்களைப் பதிப்புக் கொண்டு வருவதற்கு சைவ வைணவ அமைப்பாரிடம் இருந்து பல விதமான தடைகளை சந்திக்க வேண்டி இருந்தது.

இவற்றையும் பார்க்க[தொகு]