பௌது
பௌது | |
---|---|
நகரம் | |
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பௌது நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 20°50′N 84°19′E / 20.84°N 84.32°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ஒடிசா |
மாவட்டம் | பௌது மாவட்டம் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 20,424 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | ஒடியா மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 762014 |
வாகனப் பதிவு | OD-27 |
இணையதளம் | https://boudh.odisha.gov.in/ |
பௌது (Boudh), இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் நடுப்பகுதியில் அமைந்த பௌது மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். மகாநதி ஆற்றின் கரையில் அமைந்த பௌது நகரம், மாநிலத் தலைநகரான புவனேசுவரத்திற்கு வடமேற்கே 224.3 கிகிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நகரம் 31 டிசம்பர் 1947 முடிய பௌது சமஸ்தானத்தின் தலைநகரமாக விளங்கியது.[1]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 17 வார்டுகளும், 4,559 குடியிருப்புகளும் கொண்ட பௌது நகரத்தின் மக்கள் தொகை 20,424 ஆகும். அதில் 10,492 ஆண்கள் மற்றும் 9,932 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 10.33 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 947 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 86.80 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 26.91 % மற்றும் 2.43 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 97.51%, இசுலாமியர் 2.13%, கிறித்தவர்கள் 0.27%,மற்றும் பிற சமயத்தினர் 0.08% வீதம் உள்ளனர்.[2]
தொடருந்து நிலையம்
[தொகு]பௌத் மற்றும் ஜர்முண்டா இடையே புதிதாக இருப்புப்பாதை மற்றும் 3 நடைமேடைகள் கொண்ட தொடருந்து நிலையம் அமைக்கும் பணி நவம்பர் 2024ல் முடிவுற்றது.[3][4][5]2025ஆம் ஆண்டிலிருந்து பௌது தொடருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.