போ. வ. நா. மாதவ்
போ. வ. நா. மாதவ் | |
|---|---|
| ஆந்திரப்பிரதேச பாரதிய சனதா தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 1 சூலை 2025 | |
| முன்னையவர் | தகுபதி புரந்தேசுவரி |
| ஆந்திரப்பிரதேச மாநிலங்களவை உறுப்பினர் | |
| பதவியில் 30 மார்ச்சு 2017 – 29 மார்ச்சு 2023 | |
| முன்னையவர் | எம்.வி.எசு. சர்மா |
| பின்னவர் | வி. சிரஞ்சீவி ராவ் |
| தொகுதி | சிறீகாகுளம்-விசாகப்பட்டினம்-விழியநகரம் பட்டதாரி தொகுதி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | போகலா வம்சி நாகேந்திர மாதவ் 10 ஆகத்து 1973 மத்திலபாலெம், விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம் (1956–2014) |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| பெற்றோர் |
|
| கல்வி | இளங்கலை வணிகவியல், முதுகலை வணிக மேலாண்மை, செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் (இந்தியா) |
| முன்னாள் மாணவர் | முனைவர். வி.எசு கிருசுணா அரசு பட்டம் & முதுகலைப் பட்டக் கல்லூரி]] ஆந்திரப் பல்கலைக்கழகம் இந்திய உற்பத்திச் செலவு மற்றும் மேலாண்மைக் கணக்கியல் நிறுவனம் |
| தொழில் | அரசியல்வாதி |
| மூலம்: [1] | |
போ. வ. நா. மாதவ் (P. V. N. Madhav) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். போகலா வம்சி நாகேந்திர மாதவ் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறார். பாரதிய சனதா கட்சியின் உறுப்பினராக ஆந்திரப் பிரதேச அரசியலில் இயங்கினார். ஆந்திரப் பிரதேசத்தில் பாரதிய சனதா கட்சியின் மாநிலத் தலைவராகவும் இருந்தார்.[1][2]
2017 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாரதிய சனதா கட்சியின் வேட்பாளராக பட்டதாரிகள் தொகுதியில் இருந்து மாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறு வயதிலிருந்தே அகில பாரத வித்தியார்த்தி பரிசத்து, பாரதிய சனதா யுவ மோர்ச்சா ஆகிய அமைப்புகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். தொழில் ரீதியாக செலவு கணக்காளராகப் பணிபுரிந்தார். இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து அமைப்பான தேசியத் தொண்டர் அணியுடன் தொடர்பு கொண்டிருந்தார். கட்சியின் அடிமட்ட வளர்ச்சியில் தீவிர பங்காற்றியுள்ளார். இவரது தந்தை பி.வி. சலபதி ராவ், பிரிக்கப்படாத ஆந்திராவின் முதல் பாரதிய சனதா கட்சியின் மாநிலத் தலைவராகவும், மாநிலத்தில் கட்சியின் நிறுவன உறுப்பினராகவும் இருந்தார்.[3][4][5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "P.V.N. Madhav takes charge as BJP A.P. unit president, promises to strengthen NDA" (in en-IN). The Hindu. 2 July 2025 இம் மூலத்தில் இருந்து 2 July 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250702151102/https://www.thehindu.com/news/national/andhra-pradesh/pvn-madhav-takes-charge-as-bjp-ap-unit-president-promises-to-strengthen-nda/article69760179.ece. பார்த்த நாள்: 2 July 2025.
- ↑ "Party loyalist with RSS background, PVN Madhav is Andhra's new BJP chief, like his father 40 yrs ago". ThePrint. 2 July 2025 இம் மூலத்தில் இருந்து 2 July 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250702151110/https://theprint.in/politics/party-loyalist-with-rss-background-pvn-madhav-is-andhras-new-bjp-chief-like-his-father-40-yrs-ago/2676964/. பார்த்த நாள்: 2 July 2025.
- ↑ My Neta
- ↑ Probe financial profligacy of Naidu govt.: BJP MLC
- ↑ MLC PVN Madhav bats for retention of Waltair division
- ↑ Implement EWS quota in Secretariat jobs, BJP urges Stat