போவோன்டொ
போவோன்டொ | |
---|---|
வகை | கோலா |
உற்பத்தி | காளி காற்றுட்டப்பட்ட பானங்கள் நிறுவனம் |
மூல நாடு | ![]() |
அறிமுகம் | 1959 |
சார்பு உற்பத்தி | சோலோ, டிரையோ, புருட்டாங் |
போவோன்டொ, தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள குளிர்பானம் ஆகும். இந்த குளிர்பானம் திராட்சை-கோலா சுவை கொண்டிருக்கும். போவோன்டொவை தமிழ்நாட்டைச் சேர்ந்த காளிமார்க் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்துவருகின்றது. காளிமார்க் நிறுவனம் 1916 ஆம் ஆண்டு திரு. பழனியப்ப செட்டியார் ஆல் விருதுநகர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது.
வரலாறு[தொகு]
1916 ஆம் ஆண்டு விருதுப்பட்டியில் (இன்றைய விருதுநகர்) பழனியப்ப நாடார் காளிமார்க் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கரியமிலவளி ஏற்றப்பட்ட குளிர்பானத்தின் விற்பனையைத் தொடங்கினார். 1948 ஆம் ஆண்டு இதன் முத்திரையையும் சேர்த்து காளிமார்க் நிறுவனத்தின் பெயர் பதிவுசெய்யப்பட்டது.[1] காளிமார்க் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறையினர் 1959 ஆம் ஆண்டு போவோன்டொவை அறிமுகப்படுத்தினர்.
செயற்பாட்டு மற்றும் சந்தைப்படுத்தல்[தொகு]
இங்கிலாந்தின் ஸ்பென்சர் மற்றும் அமெரிக்காவின் பெப்சி மற்றும் கோக் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் குளிர்பான சந்தையில் நுழைந்து இந்திய நிறுவனங்களையும் குளிர்பானச் சந்தையையும் கையகப்படுத்திய போதும் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பு, வலுமிக்க தயாரிப்பு மற்றும் விற்பனைக் கட்டமைப்புகளால் சந்தையில் நிலைநின்று இப்போது ஒரு 100 கோடி ரூபாய் மதிப்புள்ள வணிகப்பொருளாக திகழ்கின்றது.[2][3][4]
வெளி இணைப்புகள்[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ என். ராஜேஸ்வரி (8 பிப்ரவரி 2014). "சுதேசி பானத்தின் தொடரும் வெற்றி". தி இந்து. பார்த்த நாள் 27 நவம்பர் 2016.
- ↑ "சர்வதேச குளிர்பான போட்டிகளுக்கு இடையே நூற்றாண்டை தொட்ட நம்மூர் 'காளிமார்க்'". தினமலர் (24 பிப்ரவரி 2016). பார்த்த நாள் 27 நவம்பர் 2016.
- ↑ No compromises
- ↑ India’s homegrown sodas that survived despite cola wars