உள்ளடக்கத்துக்குச் செல்

போவெலைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போவெலைட்டு
Powellite
பொதுவானாவை
வகைமாலிப்டேட்டு கனிமங்கள்
வேதி வாய்பாடுCaMoO4
இனங்காணல்
மோலார் நிறை200.02 கி/மோல்
நிறம்வைக்கோல் மஞ்சள், பசும் மஞ்சள், மஞ்சள் பழுப்பு, பழுப்பு, நிறமற்றது, நீலம் முதல் கருப்பு மண்டலங்களை வெளீப்படுத்தும்
படிக இயல்புதட்டையான மெல்லிய படிகங்கள் - {001} இல் மெல்லியது, பெருந் திரட்டு
படிக அமைப்புநாற்கோணகம்
பிளப்புதனித்துவம் {011}, {112} மற்றும் {001}
முறிவுசங்குருவம்
மோவின் அளவுகோல் வலிமை3.5-4
மிளிர்வுவிடாப்பிடியானது
கீற்றுவண்ணம்இள மஞ்சள்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி4.25
ஒளியியல் பண்புகள்ஒற்றை அச்சு (+)
ஒளிவிலகல் எண்nω = 1.974 nε = 1.984
இரட்டை ஒளிவிலகல்δ = 0.010
பலதிசை வண்ணப்படிகமைO = நீலம்; E = பச்சை
புறவூதா ஒளிர்தல்குறுகிய அலை புற ஊதா ஒளியின் கீழ் பிரகாசமான மஞ்சள் நிறத்தில் ஒளிரும், நீண்ட அலையின் கீழ் மங்கலானது
மேற்கோள்கள்[1][2][3][4]

போவெலைட்டு (Powellite) என்பது CaMoO4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். கால்சியம் மாலிப்டேட்டு வகை கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. நாற்கோணக இரட்டை கூர்கோபுர படிக வடிவில் இது படிகமாகிறது. விடாப்பிடியான நீலம், பச்சை-பழுப்பு, மஞ்சள்-சாம்பல் நிறத்தில் பொதுவாக ஒளிபுகும் தன்மை கொண்ட வடிவமற்ற வடிவங்களாக காணப்படுகிறது. போவெலைட்டு கனிமம் தனித்துவமான பிளவுகளைக் காட்டுகிறது. உடையக்கூடிய தன்மை முதல் சங்குருவ முறிவையும், 3.5 முதல் 4 வரையான மோவின் அளவுகோல் கடினத்தன்மையையும் 4.25 என்ற ஒப்படர்த்தியையும் கொண்டுள்ளது. இது சுகீலைட்டுடன் (கால்சியம் டங்சுடேட்டு, CaWO4 சேர்ந்து ஒரு திண்ம கரைசல் தொடரை உருவாக்குகிறது. மேலும் இது nω=1.974 மற்றும் nε=1.984 என்ற ஒளிவிலகல் குறியீட்டு மதிப்புகளைக் கொண்டுள்ளது.[2]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் போவெலைட்டு கனிமத்தை Pwl[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

1891 ஆம் ஆண்டு இடாகோ மாநிலத்தின் ஆடம்சு மாகாணத்தில் உள்ள பீகாக்கு சுரங்கத்தில் முதன் முதலில் போவெலைட்டு கண்டறியப்பட்டு விவரிக்கப்பட்டது. வில்லியம் ஆர்லோ மெல்வில்லே என்பவர் இதைக் கண்டறிந்தார். அமெரிக்க ஆய்வாளர் மற்றும் புவியியலாளர் இயான் வெசுலி போவெலின் (1834–1902) நினைவாகப் கனிமத்திற்கு போவெலைட்டு எனப் பெயரிடப்பட்டது.[2]

மேற்பரப்புக்கு அருகில் உள்ள ஆக்சிசனேற்ற மண்டலங்களுக்குள் உள்ள மாலிப்டினத்தின் நீர்வெப்ப தாது படிவுகளில் போவெலைட்டு தோன்றுகிறது. பெக்மாடைட்டு, டேக்டைட்டு மற்றும் பாசால்ட்டு ஆகியவற்றில் ஓர் அரிய கனிம கட்டமாகவும் தோன்றுகிறது. மாலிப்டினைட்டு, பெரிமாலிப்டைட்டு, சிடில்பைட்டு, லாமோன்டைட்டு மற்றும் அப்போபிலைட்டு ஆகியவற்றுடன் கலந்து போவெலைட்டு கனிமம் காணப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mineralienatlas
  2. 2.0 2.1 2.2 Powellite mineral information on Mindat.org
  3. Powellite mineral data on Webmineral
  4. 4.0 4.1 Mineral Data Publishing PDF
  5. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=போவெலைட்டு&oldid=4199164" இலிருந்து மீள்விக்கப்பட்டது