போளுவம்பட்டி தொல்லியல் களம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

போளுவம்பட்டி தொல்லியல் களம், இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தின், தொண்டாமுத்தூர் வருவாய் வட்டத்தில், உள்ள தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த இக்கரை போளுவாம்பட்டி கிராமத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோட்டைக்காடு எனுமிடத்தில் அமைந்துள்ளது.[1]

போளுவம்பட்டி தொல்லியல் களம், நொய்யல் ஆற்றின் மேற்கு கரையில் உள்ளது. இங்கு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் 1979 – 1980 & 1980 – 1981 ஆகிய இரண்டு ஆண்டுகளில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அகழ்வாராய்ச்சிகளில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கல் மணிகள், சுடுமண்னால் செய்யப்பட்ட காது மடல்கள், மூடிகளுடன் கூடிய கிண்ணங்கள், இரும்புப் பொருட்கள் மற்றும் சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டது.[2]

வில் மற்றும் அமர்ந்த நிலையில் ஒரு புலியின் உருவம் பொறித்த ஒரு சுடுமண் அரச முத்திரையில், கிபி எழாம் நூற்றாண்டின் தமிழ் எழுத்துகளுடன் கூடிய ஒரு சிறப்புமிக்க தொல்பொருள் கண்டெடுக்கப்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kottaikadu
  2. Boluvampatti