போலென்ஸ்கி மதிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

போலென்ஸ்கி மதிப்பு[தொகு]

போலென்ஸ்கி மதிப்பு (போலென்ஸ்கி எண்)[தொகு]

போலென்ஸ்கி மதிப்பு (போலென்ஸ்கி எண் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது கொழுப்பை பரிசோதிக்கும் போது தீர்மானிக்கப்படும் ஒரு மதிப்பு ஆகும். போலென்ஸ்கி மதிப்பு என்பது கொழுப்பை சவர்க்காரமாக்கல்(saponification) மூலம் ஆவியாகக்கூடிய கொழுப்பு அமிலத்தை எவ்வளவு பிரித்தெடுக்க முடியும் என்பதற்கான ஒரு குறிகாட்டி ஆகும். இது கொடுக்கப்பட்ட 5 கிராம் சவர்க்காரமாக்கப்பட்ட கொழுப்பை வாலைவடித்தல் மற்றும் வடிகட்டுதல் மூலமாக கிடைக்கும் நீரில்-கரையா மற்றும் ஆவியாகக்கூடிய கொழுப்பு அமிலத்தை நடுநிலையாக்கத் தேவையான 0.1 ஹைட்ராக்சைடின் நேர்கரைசலின்(0.1 normal hydroxide solution) மில்லிலிட்டரின் எண்ணிக்கைக்கு சமமாகும். (அத்தகைய தரம்பார்த்தலில் அல்லது டைட்டரேஷனில் (titration) பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சைடை, சோடியம் ஹைட்ராக்சைடு, பொட்டாசியம் ஹைட்ராக்சைடு அல்லது பேரியம் ஹைட்ராக்சைடு ஆகியவற்றிலிருந்து பெறப்படுகிறது.)[1]

இம்மதிப்பு, அதை உருவாக்கிய வேதியியலாளர் எட்வார்ட் போலென்ஸ்கி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.[2] ரெய்கெர்ட் மதிப்பு மற்றும் கிர்சினரின் மதிப்பு ஆகியவை ஒரேமாதிரி சோதனைகளின் அடிப்படையில் தொடர்புடைய எண்கள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

http://www2.merriam-webster.com/cgi-bin/mwmednlm?book=Medical&va=polenske+value

https://en.wikipedia.org/wiki/Food_and_Agriculture_Organization

வார்ப்புரு:Organic-chem-stub

"https://ta.wikipedia.org/w/index.php?title=போலென்ஸ்கி_மதிப்பு&oldid=2371549" இருந்து மீள்விக்கப்பட்டது