போலி மதச்சார்பின்மை
இந்தியாவில், போலி மதச்சார்பின்மை (Pseudo-secularism) என்ற சொல் இந்து எதிர்ப்பு மற்றும் சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதாகக் கருதப்படும் கொள்கைகளை குறிக்கிறது.[1] இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மை மத சமூகமாக உள்ளனர். "போலி மதச்சார்பின்மை" என்ற சொல் மதச்சார்பற்றவர்கள் என்று கூறுபவர்கள் உண்மையில் அப்படி இல்லாமல், இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்லது சிறுபான்மையினருக்கு ஆதரவானவர்கள் என்பதை குறிக்கிறது.[2] பொதுவாக, தமிழக அரசியலில், இந்துமத எதிர்ப்பு கொள்கையை கொண்ட இந்திய தேசிய காங்கிரசு, இந்தியப் பொதுவுடமை கட்சி மற்றும் திமுகவை குற்றம் சாட்ட இது பயன்படுகிறது.[3]
பின்னணி
[தொகு]"போலி-மதச்சார்பின்மை" என்ற வார்த்தையின் முதல் பதிவு 1951ஆம் ஆண்டு அந்தோணி எலெஞ்சிமிட்டம் எழுதிய ஹிந்த் ஸ்வராஜுக்கான ஆர்எஸ்எஸ் தத்துவம் மற்றும் செயல் புத்தகத்தில் இருந்தது. இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர்கள் மதச்சார்பின்மையை நிலைநிறுத்துவதாக பாசாங்கு செய்வதாக எலெஞ்சிமிட்டம் தனது புத்தகத்தில் குற்றம் சாட்டினார்.[4]
தமிழ்நாட்டை மையமாகக் கொண்ட தன்னை நாத்திகம் சார்ந்த[5] கட்சி என்று கூறிக்கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழகம் பல்வேறு பிரச்சனைகளில் முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக நிலைப்பாடுகள் காரணமாக அடிக்கடி போலி மதச்சார்பின்மை என்று குற்றம் சாட்டப்படுகிறது.[6][7]
2020-ல் ஒரு முறை, ஒரு கிறிஸ்தவ மிஷனரி நிகழ்வில், கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்து மதம் என்ற ஒன்று இல்லை என்று கூறியுள்ளார்.[8] கட்சியின் கருத்தியல் தலைவர் ஈ.வி.ராமசாமி 1948-ல், "கிறிஸ்தவமும் இஸ்லாமும் தங்கள் கடவுளை ஒரு நல்லொழுக்கமாக சித்தரிக்கின்றன, இவை நமக்குத் தேவையான கடவுள்கள்" என்று எழுதி உள்ளார்.[9] தமிழ்நாட்டின் ஐந்து முறை முதலமைச்சர் மு. கருணாநிதி உட்பட கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் இந்து கடவுள்கள், நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தை பற்றி இழிவாக பேசியுள்ளனர்.[10][11] இவை அனைத்தும் போலி மதச்சார்பின்மை என பாஜக மற்றும் அதிமுக போன்ற எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்படுகின்றன.[12]
எடுத்துக்காட்டுகள்
[தொகு]சிவில் மற்றும் கல்வி நிறுவனங்களில் மதம் சார்ந்த இட ஒதுக்கீடுகளும் போலி மதச்சார்பின்மைக்கு சான்றாகக் கருதப்படுகின்றன.[13] 1998ஆம் ஆண்டில், ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம், 370வது பிரிவு, ராமர் கோவில் மற்றும் இந்தியாவின் சீரான குடிமையில் சட்டப் பிரச்சினைகளில் சமரசத்திற்காக போலி மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து அரசியல் செய்வதாக பாரதிய ஜனதா கட்சியின் மீது குற்றம் சாட்டியது.[14]
வெளி இணைப்புகள்
[தொகு]- ஹசன் சுரூர் (30 ஏப்ரல் 2014) மதச்சார்பின்மை என்ற பெயரில் பாவங்கள் - தி இந்து
- டாக்டர் எஸ்.கே.ஸ்ரீவாஸ்தவா (16 டிசம்பர் 2014) மதச்சார்பின்மையை முறியடித்தாரா? - ஐபிஎன் லைவ்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ John Anderson (2006). Religion, Democracy And Democratization. Routledge. p. 134. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-35537-7. பார்க்கப்பட்ட நாள் 16 April 2013.
- ↑ Mani Shankar Aiyar. Confessions of a Secular Fundamentalist. Penguin Books India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-306205-9.
- ↑ Religious Identity and Political Destiny: Hindutva in the Culture of Ethnicism. Rowman Altamira. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7591-0686-4. பார்க்கப்பட்ட நாள் 16 April 2013.
- ↑ Elenjimittam, Anthony (1951). Philosophy and Action of the R. S. S. for the Hind Swaraj. Laxmi Publications. pp. 188–189.
- ↑ "Effort to portray DMK as anti-Hindu will fail: M K Stalin". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2021-10-14.
- ↑ vikram. ""DMK won because of Christian prayers"- DMK Minister punctures Stalin's efforts to appear pro-Hindu" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-14.
- ↑ Worldview, Saffron (2021-07-15). "MK Stalin Govt Appoints Pro-Maoist Evangelist As Member Of TNPSC & Demolishes 100 Yr Old Hindu Temples In Coimbatore". Kreately (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-14.
- ↑ "'There is no religion called Hinduism': Furore over Tamil preacher's comments in presence of DMK chief Stalin". www.timesnownews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-14.
- ↑ "Periyar: Southern Bharat's biggest Anti-Hindu creature!". Kreately (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-10-16. பார்க்கப்பட்ட நாள் 2021-10-14.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ "Atheist who befriended religious leaders, worshipped Tamil". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-10-14.
- ↑ 'DMK is anti-Hindu, we must defeat it' — BJP Yuva Morcha chief Tejasvi Surya says, பார்க்கப்பட்ட நாள் 2021-10-16
- ↑ Shabnum Tejani (2008). Indian secularism: a social and intellectual history, 1890-1950. Indiana University Press. p. 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-253-22044-8. பார்க்கப்பட்ட நாள் 16 April 2013.
- ↑ M. G. Chitkara (2003). Hindutva Parivar. APH Publishing. p. 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7648-461-9.