போலி இறைவாக்கினர்
Appearance
போலி இறைவாக்கினர் (false prophet) என்பவர் தனக்கு இறைவாக்கு உரைக்கும் வல்லமை அல்லது இறை தூண்டுதல் இருப்பதாகப் பொய்யுரைப்பவர் ஆவார். ஒரே சமயத்தில் ஒரு பிரிவினரால் இறைவாக்கினராக ஏற்கப்படுவோர் பிறரால் போலி இறைவாக்கினராகக் கருதப்படலாம்.
கிறித்தவத்தில்
[தொகு]கிறித்தவத்தில் போலி இறைவாக்கினர் சாத்தானால் தூண்டப்பட்டவர்கள் என்று கருதப்படுகிறார்கள். விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் பல போலி இறைவாக்கினர்களைக் குறித்த குறிப்பு உள்ளது. புதிய ஏற்பாட்டின் பல இடங்களில் இறுதி நாட்களில் போலி இறைவாக்கினர் பலர் தோன்றுவர் என இயேசு எச்சரித்ததாக சொல்லப்பட்டுள்ளது.[1]
இசுலாமிய சமயத்தில்
[தொகு]இசுலாமிய சமயத்தினரைப் பொறுத்த வரை முகம்மது நபியே இறுதி இறைத்தூதர் ஆவார். எனவே அவருக்குப் பின்னர், இறைத்தூதர் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் எவரும் போலிகளே ஆவர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ மத்தேயு 7:15–23