போலா தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
போலா
உள்ளூர் பெயர்: ভোলা
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்22°30′N 90°45′E / 22.500°N 90.750°E / 22.500; 90.750ஆள்கூறுகள்: 22°30′N 90°45′E / 22.500°N 90.750°E / 22.500; 90.750
பரப்பளவு1,441 km2 (556 sq mi)
நிர்வாகம்
மக்கள்
Demonymபோலாயா பூர்வகுடி (Bholaya)
மக்கள்தொகை1,675,000
அடர்த்தி1,162.39
மேலதிக தகவல்கள்
அதிகாரபூர்வ இணையதளம்http://www.bhola.gov.bd/

போலா தீவு (Bhola Island) வங்காளதேசத்தின் மிகப்பெரிய கடல் தீவு ஆகும். 1,675,000 மக்கட்தொகையும், 1,441 கிமீ2 (556 சதுர மைல்) பரப்பளவும் கொண்டது. வங்காளதேச நாட்டின் பரிசால் கோட்டத்தில் (Barisal Division) உள்ள போலா மாவட்டத்தின் பெரும்பான்மைப் பகுதியாக இத்தீவு அமைந்துள்ளது.[1] தஹின் ஷபாஷ்பூர் எனவும் அழைக்கப்படுகிறது.

ஆகத்து 2015 ல் போலா தீவின் சுற்றுலா மற்றும் சந்தைத்துறையை மேம்படுத்தும் நோக்கில் வங்காளதேச அரசாங்கத்தின் முயற்சியில் இத்தீவிற்கு ”வங்காளதேசத்து ராணித்தீவு” என்ற புனைப்பெயர் வழங்கப்பட்டது.[2]

புவியியல்[தொகு]

போலா தீவு மேக்னா ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. இத்தீவின் மொத்த நீளம் 130 கிமீ. தாழ்நிலப்பகுதியில் அமைந்துள்ள இத்தீவு கடல் மட்டத்திலிருந்து 6 அடி உயரத்தில் உள்ளது. முன்பு நீள்வட்ட வடிவத்தில் இருந்த இத்தீவு தற்பொழுது மேக்னா நதி அரிப்பின் காரணமாகவும் கடல் மட்ட உயர்வின் காரணமாகவும் அதன் வடிவம் மாறி வருகிறது. மாறி வரும் சுற்றுச்சூழல் போலா தீவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. [3][4]

கல்வி[தொகு]

போலா தீவில் ஆரம்பக்கல்வி முதல் உயர் கல்வி வரைப் பயிற்றுவிக்கும் நிறுவனங்கள் உள்ளன.[5]

கல்வி நிறுவனங்கள் ஆரம்பப்பள்ளிகள் இடைநிலைக்கல்வி நிறுவனங்கள் கல்லூரிகள் மதரஸாக்கள் மருத்துவக்கல்லூரி
எண்ணிக்கை 6 6 3 4 1

போக்குவரத்து[தொகு]

மேக்னா ஆற்றில் படகுப்போக்குவரத்து
ஆற்றுப்பாலத்திலிருந்து மேக்னா நதியின் தோற்றம்

இத்தீவுக்கு நீர்வழிப் போக்குவரத்து மட்டுமே உள்ளது [6]. தரைவழியாகப் போக்குவரத்து இல்லை. வங்காளதேசத்தின் தலைநகர் தாக்கா மற்றும் பரிசால் ஆகிய இடங்களுக்கு பயணிகள் மற்றும் சரக்கு படகு போக்குவரத்து அதிகளவில் உள்ளன.[7]

உணவு[தொகு]

வங்காளதேசத்தின் தனித்துவமான எருமைத் தயிருக்கு (டொய் -பெங்காலி ) போலா தீவு பெயர் பெற்றது. இத்தயிர் தயாரிக்கப்படும் செயல்முறை பழமை மாறாமல் இன்றளவும் அப்படியே உள்ளது. பாரம்பரிய களிமண் தொட்டிகளில் இந்த தயிரானது தயாரிக்கப்படுகிறது. இச்செயல்முறைக்கு 18 மணி நேரம் ஆகிறது. திருமணம், மதம், கலாச்சாரம் மற்றும் வழிபாட்டு நிகழ்வுகளின் போது இந்த எருமைத் தயிர் முக்கிய இடம்பெறுகிறது. [8]

மின்சாரம்[தொகு]

1994 ல் ஷாஹ்பஸ்பூரில் இயற்கை எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும் மின்சார பற்றாக்குறை பெருமளவில் உள்ளது. அரசு 195 மெகா வாட் திறனுடைய மின்நிலையத்தை கட்டி ஆகத்து 2015 இல் முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. வங்காள அரசுக்கு சொந்தமான வங்காளதேச மின் கட்டமைப்பு நிறுவனம் ஒரு உயர் மின்னழுத்த மின்சார கடத்து வழித்தடத்தை போலா தீவிற்கும் போர்ஹனுதின் தீவிற்கும் இடையே கட்டமைத்து வருகிறது.[9][10]

தகவல் தொடர்புகள்[தொகு]

சமூக வானொலிகள்[தொகு]

இத்தீவில் 14 உள்ளூர் சமூக வானொலி நிலையங்கள் செயல்படுகின்றன.அரசு துறைகள் மற்றும் கிராமப்புற / உள்ளூர் சமூகத்தினரிடையே பயனுள்ள இணைப்பு ஏற்படுதியதன் காரணமாக இச்சமூக வானொலிகள் பேரிடர் அபாயக் குறைப்பில் (Disaster Risk Reduction-DRR) முக்கிய பங்காற்றுகின்றன. [11]

செய்தித்தாள்கள்[தொகு]

செய்தித்தாள்கள் மற்றும் பருவ தினசரிகள் இரண்டும் (தைனிக் அஜ்கர் போலா, தைனிக் பங்ளர் காந்தா), ஒரு வார இதழ் - (திவாபனி) மற்றும் 1 மாத இதழ் போலா தீவிலிருந்து வெளிவருகின்றன.

இயற்கைப் பேரிடர்கள்[தொகு]

வெள்ளம் மற்றும் கடல் மட்ட உயர்வு[தொகு]

போலா தீவில் 1995 இல் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் நீரில் மூழ்கியது. இதனால் 500,000 மக்கள் வீடுகளை இழந்தனர். புவி சூடாதல் நிகழ்வால் பனிப்பாறைகள் உருகி இதுபோன்ற தாழ்நிலப் பகுதிகள் கடல் நீரில் மூழ்கி பாதிப்பை ஏற்படுத்துகின்றன.[12] இதே நிலை தொடர்ந்தால் அடுத்த 40 ஆண்டுகளில் இத்தீவின் பாதி மறைந்து விடும் என கருதப்படுகிறது [13].

2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தினால் அரை மில்லியனுக்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டனர். தொடர்ச்சியான இயற்கைப் பேரிடர்களால் போலோ தீவில் முன்னர் வாழ்ந்த பெரும்பகுதி மக்கள் தற்போது டாக்கா மற்றும் பிற நகரங்களுக்கு இடம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.[14]

புயல்கள்[தொகு]

போலா தீவின் தெற்கு எல்லையாக வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது. இக்கடலில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வானிலை மாற்றங்களால் உண்டாகும் புயல்கள் இத்தீவு மக்களுக்கு பாதிப்புகளை உருவாக்குகிறது.

வரலாற்று மற்றும் சுற்றுலா இடங்கள்[தொகு]

போலா தீவின் வரலாற்று இடங்களும் சுற்றுலாத் தலங்களும்[15]:

 • போலா சிசு பூங்கா (Bhola Shishu Park)
 • ஜர்பேஷன் கல்லூரி (Charfashion college)
 • தாலிகௌர் நகர் உயர்நிலை பள்ளி
 • போலா பேருந்து நிலையம்
 • போர்ஹன்னுதின் ஹாலிபத் (Bhorhanuddin hallypath)
 • மொன்புரா இயற்கை காட்சிவெளி (Monpura Natural Sceenary)

விவசாயம்[தொகு]

இந்தத் தீவில் மீன்பிடித் தொழிலுக்கு அடுத்து 30 சதவீத மக்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு நெல் முக்கியப் பயிராக விளைவிக்கப்படுகிறது. வெள்ளரி, தர்பூசனி, உருளைக்கிழங்கு, பாக்கு, மிளகாய், வெற்றிலை, தேங்காய் மற்றும் காய்கறிகள் பயிர் செய்யப்படுகின்றன.[16]

மேற்கோள்கள்[தொகு]

 1. Md Sakhaowat Hossain (2012). "Bhola District". in Sirajul Islam and Ahmed A. Jamal. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://www.banglapedia.org/HT/B_0560.htm. 
 2. "Bhola is now: Queen Island of Bangladesh". பார்த்த நாள் 23 November 2015.
 3. "Sonar to help slow Bangladesh erosion in Ganges delta". Reuters. பார்த்த நாள் 23 November 2015.
 4. Risks of erosion and disasters on livelihood, Bhola Island, Bangladesh
 5. http://www.bhola.gov.bd/education-institutes
 6. http://www.cseindia.org/userfiles/mizan_rahman.pdf
 7. "About Bhola Island". பார்த்த நாள் 23 November 2015.
 8. "Buffalo Curd: Heritage of Bhola". The Daily Star (19 March 2015). பார்த்த நாள் 23 November 2015.
 9. "Big boost for Bhola". The Daily Star (8 March 2015). பார்த்த நாள் 22 November 2015.
 10. Power Grid Company of Bangladesh
 11. "Community radio as change agent". The Financial Express. பார்த்த நாள் 23 November 2015.
 12. {{"In Flood-Prone Bangladesh, a Future That Floats", Emily Wax, Washington Post, September 27, 2007 | accessdate=23 November 2015}}
 13. http://www.aljazeera.com/video/asia/2014/03/rising-waters-swamp-bangladesh-island-201433152321802434.html
 14. "Bhola Island". Mother Nature Network. பார்த்த நாள் 23 November 2015.
 15. http://www.hellobangladesh.biz/bolba/CAT_AD/Bhola%20Information.html
 16. http://www.cseindia.org/userfiles/mizan_rahman.pdf

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போலா_தீவு&oldid=2756172" இருந்து மீள்விக்கப்பட்டது