போலாரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போலாரைட்டுPolarite
பொதுவானாவை
வகைபிளாட்டினக் குழு தனிமங்களுடன் கலப்புலோகம்
வேதி வாய்பாடுPd,(Bi,Pb)
இனங்காணல்
நிறம்மஞ்சள் கலந்த வெண்மை
படிக இயல்புநுண்ணோக்கியால் மட்டும்
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
மோவின் அளவுகோல் வலிமை3.5 - 4
மிளிர்வுஉலோகத்தன்மை
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி12.51
மேற்கோள்கள்[1][2][3][4]

போலாரைட்டு (Polarite) என்பது (Pd,(Bi,Pb)) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். மஞ்சள் கலந்த வெண்மை நிறத்தில் தோற்றமளிக்கும் இக்கனிமம் ஒளிபுகாத் தன்மை கொண்டதாக உள்ளது. இதன் படிகங்கள் செஞ்சாய்சதுர வடிவத்தில் ஆக்கப்பட்டுள்ளன என்பதை நுண்ணோக்கியினால் மட்டுமே காணமுடியும். உலோகம் சார்ந்த ஒளிர்வும் வெண் கீற்றுகளும் இக்கனிமத்தின் இயற்பியல் பண்புகளாகும். மோவின் அளவுகோலில் போலாரைட்டின் கடினத்தன்மை மதிப்பு 3.5 முதல் 4 என கணக்கிடப்பட்டுள்ளது[2][3].

உருசியாவின் யூரல் மலைப்பகுதியிலுள்ள நாரில்சுக் என்ற நகரத்தில் 1969 ஆம் ஆண்டில் முதன்முதலாக போலாரைட்டு கண்டறியப்பட்டது. பின்னர் தென் ஆப்பிரிக்காவின் புசுவெல்ட்டு தீப்பாறை படிவுகளிலும் அலாசுக்காவின் குட்நியூசு பே நகரிலும் கண்டறியப்பட்டது[3].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போலாரைட்டு&oldid=2609781" இலிருந்து மீள்விக்கப்பட்டது