போலந்து இறப்பில்லா ஆட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போலந்து இறப்பில்லா ஆட்டம் (Polish Immortal) என்பது கிளிங்சுபெர்க்கு மற்றும் மிகியூல் நச்தோர்ப் இருவருக்கும் இடையில் வார்சாவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியைக் குறிக்கும். கருப்புக் காய்களுடன் விளையாடிய நச்தோர்ப்பு தன்னுடைய நான்கு சிறிய காய்களையும் தியாகம் செய்து வெற்றி பெறுவார். எனவேதான் இந்த ஆட்டம் இறப்பில்லா ஆட்டம் என்று கொண்டாடப்படுகிறது. போட்டி நடைபெற்ற ஆண்டு 1930 அல்லது 1935 ஆக் இருக்கலாமென சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன[1]. அதன் அடிப்படையில்தான் வெள்ளைக் காய்களுடன் விளையாடியவர் பெயர் கிளக்சுபெர்க் எனக் கூறப்படுகிறது. காரி காசுபரோவ் 1928 இல் இந்த ஆட்டம் நடைபெற்றது என்கிறார். அவரேதான் வெள்ளை ஆட்டக்காரரின் பெயர் கிளிங்சுபெர்க்கு என்கிறார். மேலும் இந்த உண்மைகளை நச்தோர்ப்புக்கும் அவருடைய மகளுக்கும் தெரிவிக்கிறார்[2] வார்ப்புரு:AN chess.

ஆட்டம்[தொகு]

வெள்ளை: கிளிங்சுபெர்க்கு
கருப்பு:நச்தோர்ப்பு
திறப்பு: டச்சு தற்காப்பு இ.சி.ஓ ஏ85

1. d4 f5 2. c4 Nf6 3. Nc3

2.c4 மற்றும் 3.Nc3 உடன் டச்சு தற்காப்பு ஆட்டம்.

3... e6 4. Nf3 d5 5. e3

சேவியெல்லி டார்டாகோவர் 5.Bf4. நகர்வைப் பரிந்துரைக்கிறார்.

5... c6 6. Bd3 Bd6 7. 0-0 0-0 8. Ne2

இங்கு 8.Ne5 நகர்வை டார்டாகோவர் பரிந்துரைக்கிறார். தொடர்ந்து 9.f4, சுடோன்வாலை எதிர்த்து மற்றொரு சுடோன்வால்[3]

8... Nbd7 9. Ng5?

வெள்ளையின் இந்த நகர்வு ஒரு தவறான நகர்வாகும். ஒரு சிப்பாய் இழக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் நிலைமை நினைத்ததை விட சிக்கலாகிறது.

9... Bxh2+! 10. Kh1!?

10.Kxh2 Ng4+ 11.Kh1 Qxg5 என்று விளையாடினால் கருப்பு அனுகூலம் அடைகிறார். 10.Kh1 நகர்வுக்குப் பின்னர் Nxe6 என அச்சுறுத்தலாம். ஒரு காயை எடுத்துக் கொள்ளலாம். அல்லது g3 அல்லது f4 என நகர்த்தி கருப்பு மந்திரியை வலையில் சிக்க வைக்கலாம்

10... Ng4! 11. f4

g5 இல் இருக்கும் குதிரையைப் பாதுகாக்கவும் கருப்பு மந்திரி தப்பிச்செல்லும் பாதையை மூடுவதும் வெள்ளையின் திட்டம். எனவே தான் 11. f4 என்று விளையாடுகிறார். ஒருவேளை 11.Nxe6? என்று விளையாடினால் கருப்பு ராணி Qh4! வந்து சிலைமை சிக்கலாகிவிடும்.

11... Qe8 12. g3 Qh5 13. Kg2 (படம்)

abcdefgh
8
a8 black rook
c8 black bishop
f8 black rook
g8 black king
a7 black pawn
b7 black pawn
d7 black knight
g7 black pawn
h7 black pawn
c6 black pawn
e6 black pawn
d5 black pawn
f5 black pawn
g5 white knight
h5 black queen
c4 white pawn
d4 white pawn
f4 white pawn
g4 black knight
d3 white bishop
e3 white pawn
g3 white pawn
a2 white pawn
b2 white pawn
e2 white knight
g2 white king
h2 black bishop
a1 white rook
c1 white bishop
d1 white queen
f1 white rook
8
77
66
55
44
33
22
11
abcdefgh
13.Kg2; நகர்வுக்குப் பின்னர் நிலை. வெள்ளை ராசாவை வேட்டையாட கருப்பு இங்கிருந்துதான் பல தியாகங்களை கொடுக்க ஆரம்பிக்கிறது.

கருப்பு மந்திரியை வெள்ளையின் காய்கள் சூழ்ந்து கொண்டன. தொடர்ந்து Rh1, Nf3, மற்றும் Nxh2 என்று விளையாடி அதை அடிக்கப்போவதற்கான அச்சுறுத்தலும் உள்ளது.

13... Bg1!!

வெள்ளை ராசாவின் மீது தொடர் தாக்குதல் நிகழ்த்த வேண்டி கருப்பு இங்கு தன்னுடைய மந்திரியை தியாகம் செய்கிறார்.

14. Nxg1

14.Kxg1? அடித்தால் Qh2# என ஆட்டம் முடிந்துவிடும் அல்லது 14.Rxg1? அடித்தால் Qh2+ மற்றும் 15...Qf2# என்றும் ஆட்டம் முடிந்துவிடும்.

14... Qh2+ 15. Kf3 e5! 16. dxe5 Ndxe5+ 17. fxe5 Nxe5+ 18. Kf4 Ng6+ 19. Kf3 f4!!

20...Ne5# என்று அச்சுறுத்தல் மற்றும் 20...Bg4+ [4].

20. exf4

ஒருவேளை 20.Bxg6 என்றால் கருப்பு …Bg4+ 21.Kxg4 Qxg3+ 22.Kh5 hxg6+ 23.Kxg6 Rf6+ 24.Kh5 Rh6#

20... Bg4+!! 21. Kxg4 Ne5+! 22. fxe5 h5# 0–1

மேற்கோள்கள்[தொகு]

  1. Chess Notes by Edward Winter – note 3615
  2. Garry Kasparov, My Great Predecessors, Part IV, Gloucester Publishers, 2004, p. 115.
  3. Tartakower, in Horowitz and Battell, p. 93.
  4. Tartakower, in Horowitz and Battell, p. 93.