போர்பந்தர் பறவைகள் சரணாலயம்
போர்பந்தர் பறவைகள் சரணாலயம் (Porbandar Bird Sanctuary) இந்தியாவின் குசராத்து மாநிலத்திலுள்ள போர்பந்தர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. [1]
நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது என்ற சிறப்போடு மனிதன் இயற்கையோடு இயைந்து வாழ்வதற்கு ஒரு எடுத்துக்காட்டாகா உள்ள ஒரே சரணாலயம் போர்பந்தர் பறவைகள் சரணாலயமாகும். இதேபோல கூடு கட்டும் பல்வேறு வகையான பறவைகளுக்கும் சட்டப்பூர்வ பாதுகாப்பு அளிக்கும் சரணாலயமும் இது மட்டுமேயாகும். போர்பந்தர் பறவைகள் சரணாலயம் 1 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள மிகச்சிறிய பறவைகள் சரணாலயம் ஆகும். இந்த சரணாலயத்தில் புலம்பெயர்ந்த பறவைகள் மற்றும் அனாசு வகை வாத்துகள், அரியவகை கோழிகள், பூநாரைகள், அரிவாள் மூக்கன்கள், கோட்டான்கள் போன்ற பறவைகளை ஈர்க்கும் வகையில் ஒரு ஏரி இச்சரணாலயத்தில் உள்ளது