போர்டு நியூக்ளியான்
போர்டு நியூக்ளியான் (Ford Nucleon) என்பது 1958 ஆம் ஆண்டில் ஃபோர்டு மோட்டார் நிறுவனம் உருவாக்கிய அணுசக்தியால் இயங்கும் சீருந்து எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதைக்காட்டும் மாதிரி வடிவமைப்புக் கார் ஆகும். இந்த வடிவமைப்பில் உள்-எரி இயந்திரம் இல்லை; மாறாக, வாகனத்தின் பின்புறத்தில் ஒரு சிறிய அணு உலை வைக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் ஆற்றலால் வாகனம் இயக்கப்பட வேண்டும், என்றாவது ஒரு நாள் அளவுகளின் அளவைக் குறைப்பதன் மூலம் இந்த சிந்தனை சாத்தியமாகும் என்ற கருத்து இங்கு அடிப்படையாக உள்ளது. அணு நீர்மூழ்கிக் கப்பல்களில் காணப்படும் யுரேனியம் பிணைப்பு மூலம் இயங்கும் நீராவி இயந்திரத்தை இக்காரில் பயன்படுத்தலாம் [1].
ஃபோர்டு நியூக்ளியான் மாதிரி வடிவமைப்புக் காரை மிச்சிகனில் உள்ள என்றி ஃபோர்டு அருங்காட்சியகத்தில் காணலாம் [2]. நிகழ்பட விளையாட்டுகளில் பயன்படும் அணுக்கரு கார்களுக்கான தூண்டுதலாக நியூக்ளியான் உள்ளது. அணு வி8 இயந்திரத்தைக் கொண்டிருப்பதாக இவ்விளையாட்டுகள் உள்ளன. ஆட்டத்தின் சித்திரக் காட்சி மிகவும் நையாண்டித்தனமானது, இங்கு பொருத்தமாகத் தோன்றாத காளான் மேகத்திற்குள் காரை வெடிக்கச் செய்யும்போது கதிர்வீச்சு வெளிப்படுகிறது [3][4].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bellows, Alan (27 Aug 2006). "The Atomic Automobile". Damn Interesting. பார்க்கப்பட்ட நாள் 8 Jan 2011.
- ↑ "The Henry Ford, America's Greatest History Attraction". பார்க்கப்பட்ட நாள் 20 Mar 2012.
- ↑ Kapell, Matthew Wilhelm; Elliott, Andrew B.R. Playing with the Past: Digital Games and the Simulation of History. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781623567286.
- ↑ "Fallout 3 vehicles". The Vault, the Fallout Wiki. பார்க்கப்பட்ட நாள் 7 Mar 2011.