உள்ளடக்கத்துக்குச் செல்

போர்க்களத்தில் ஒரு பூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போர்க்களத்தில் ஒரு பூ
இயக்கம்கே. கணேசன்
தயாரிப்புஜே. சி. குருநாத், கே. கணேசன்
இசைஇளையராஜா
நடிப்புபிரியா
சுபாஷ் சந்திர போஸ்
நாகினீடு
ஓட்டம்112 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

போர்க்களத்தில் ஒரு பூ (Porkalathil Oru Poo) என்பது கே. கணேசன் இயக்கிய வெளியாகாத ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இது "லெப்டினன்ட் கர்னல் இசைப் பிரியா" என்றும் அழைக்கப்படும் இசைப்பிரியாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இசைப்பிரியா விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகவியலாளரும் தொலைக்காட்சித் தொகுப்பாளருமாவார். இப்படம் 2015 இல் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் இப்படம் வெளியானால் அது இந்தியா-இலங்கை உறவை பாதிக்கும் என்ற காரணத்தால் தணிக்கை வாரியத்தால் தடை செய்யப்பட்டது.

சர்ச்சை

[தொகு]

திரைப்பட தணிக்கை வாரிய உறுப்பினர் எஸ். வி. சேகரால் மதிப்பாய்வு செய்யப்பட்ட பின்னர், இலங்கையுடனான இந்திய உறவுகளைப் பாதிக்கும் என்ற காரணத்தைக் கூறி, போர்க்களத்தில் ஒரு பூ திரைப்படத்திற்கு இந்திய தணிக்கை வாரியம் அனுமதி மறுத்து தடை விதித்தது. இந்தத் தடையை எதிர்த்துப் போராடத் திட்டமிட்டுள்ளதாக திரைப்படத் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். [1]

அக்டோபர் 8, 2016 அன்று, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி. எஸ். சிவஞானம், திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் படத்திற்கு சான்றிதழ் மறுத்த தீர்ப்பை உறுதி செய்தார். இசைப்பிரியாவின் தாயாரும் சகோதரியும் படத்தை வெளியிடுவதை எதிர்த்தனர். ஏனெனில் அது அவர்களின் தற்போதைய வாழ்க்கையைப் பாதிக்கக்கூடும் என்று அஞ்சினர். [2]

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இசைப்பிரியா பற்றிய கதை படத்துக்கு தடை: பின்னணி காரணம்!". தமிழ். ஆனந்த விகடன். 12 September 2015. Archived from the original on 14 September 2015. Retrieved 13 September 2015.
  2. Naig, Udhav (8 October 2016). "Porkalathil Oru Poo's release prospects wither with censor heat". தி இந்து. Archived from the original on 23 October 2020. Retrieved 9 October 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்க்களத்தில்_ஒரு_பூ&oldid=4350299" இலிருந்து மீள்விக்கப்பட்டது