போரோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Phorone
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2,6-டைமெத்தில்-2,5-எப்டாடையீன்-4-ஒன்
வேறு பெயர்கள்
போரோன்
ஈரைசோபுரோப்பைலிடின் அசிட்டோன், டையைசோபுரோப்பைலிடின் அசிட்டோன்
இனங்காட்டிகள்
504-20-1 Y
ChemSpider 10007 N
InChI
  • InChI=1S/C9H14O/c1-7(2)5-9(10)6-8(3)4/h5-6H,1-4H3 N
    Key: MTZWHHIREPJPTG-UHFFFAOYSA-N N
  • InChI=1/C9H14O/c1-7(2)5-9(10)6-8(3)4/h5-6H,1-4H3
    Key: MTZWHHIREPJPTG-UHFFFAOYAY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10438
SMILES
  • O=C(C=C(C)C)C=C(C)C
பண்புகள்
C9H14O
வாய்ப்பாட்டு எடை 138.20 கி/மோல்
அடர்த்தி 0.885 கி/செ.மீ3
உருகுநிலை 28 °C (82 °F; 301 K)
கொதிநிலை 198 முதல் 199 °C (388 முதல் 390 °F; 471 முதல் 472 K)
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
தீப்பற்றும் வெப்பநிலை 79 °C (174 °F; 352 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

போரோன் (Phorone) என்பது C9H14O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை டையைசோபுரோப்பைலிடின் அசிட்டோன் அல்லது ஈரைசோபுரோப்பைலிடின் அசிட்டோன் என்ற பெயர்களாலும் அழைக்கலாம். மஞ்சள் நிற படிகப் பொருளான இச்சேர்மம் தோட்டத்துச் செடி வகையான கெரானியம் மலரின் மணம் கொண்டுள்ளது. மெசிட்டைல் ஆக்சைடு சேர்மத்தில் பொதுவாகக் கலந்திருக்கும் ஒரு மாசுவாகவும் இது காணப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

முதன் முதலில் பிரெஞ்சு வேதியியலாளர் அகசுட்டி லௌரன்டு 1837 ஆம் ஆண்டு ஒரு மாசுப்பொருளாக இதைக் கண்டறிந்தார். இதற்கு காம்போரைல் என்று பெயரிட்டார் [1].

1949 ஆம் ஆண்டில் பிரெஞ்சு வேதியியலாளர் சார்லசு பிரடெரிக் கெர்கார்ட்டும் அவருடைய மாணவர் யீன் பியரி லைசு-போடார்ட்டும் இச்சேர்மத்தை தூய்மையான நிலையில் தயாரித்து போரோன் எனப் பெயரிட்டனர் [2]. இவ்விரு தயாரிப்பு முறைகளிலும் காம்போரிக் அமிலத்தின் கால்சியம் உப்பை வடித்தல் முறையில் கீட்டோனாக்கம் செய்தே இச்சேர்மம் தயாரிக்கப்பட்டது [3][4].

தற்காலத்தில் குறிப்பாக அசிட்டோன் சேர்மத்தை அமில வினையூக்கியின் உதவியால் சுய குறுக்க வினைக்கு உட்படுத்தி மெசிட்டைல் ஆக்சைடு இடைநிலை தயாரிக்கப்பட்டு பின்னர் இச்சேர்மம் தனித்துப் பிரித்தெடுக்கப்படுகிறது.

அசுத்த நிலையிலுள்ள போரோனை எத்தனால் அல்லது ஈதர் பயன்படுத்தி கரைத்து மறுபடிகமாக்கல் செய்து தூய்மையாக்கலாம்.

வினைகள்[தொகு]

அமோனியாவுடன் போரோனைச் சேர்த்து குறுக்க வினைக்கு உட்படுத்தினால் டிரையசிட்டோன் அமீன் உருவாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Laurent, Auguste (1837). "Sur les acides pinique et sylvique, et sur le camphoryle" (in French). Annales de Chimie et de Physique. 2nd series 65: 324–332. https://babel.hathitrust.org/cgi/pt?id=hvd.hx3dx3;view=1up;seq=328.  ; see "Camphoryle", pp. 329–330.
  2. See:
  3. Watts, Henry, A Dicitonary of Chemistry and the Allied Branches of Other Sciences (London, England: Longmans, Green, and Co., 1863), vol. 1, "Camphorone", p. 733.
  4. Kekulé, August (1866) (in German). Lehrbuch der organischen Chemie. 2nd vol.. Erlangen, (Germany): Ferdinand Enke. பக். 463. https://books.google.com/books?id=XJlPAAAAYAAJ&pg=PA463#v=onepage&q&f=false. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=போரோன்&oldid=2676153" இலிருந்து மீள்விக்கப்பட்டது