போரோடின் வினை
அன்சுடைக்கெர் வினை | |
---|---|
பெயர் மூலம் | எயின்சு அன்சுடைக்கெர் கிளேர் அன்சுடைக்கெர் |
வினையின் வகை | பதிலீட்டு வினை |
}} அன்சுடைக்கெர் வினை (Hunsdiecker reaction) அலெக்சாண்டர் போரோடின் கண்டறிந்த காரணத்தால் போரோடின் வினை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இக்கரிம வேதியியல் வினையில் வெள்ளி உப்புகளின் கார்பாக்சிலிக் அமிலங்கள் ஆலசன்களுடன் வினைபுரிந்து கரிம ஆலைடுகள் உருவாகின்றன [1][2][3][4]. ஆலசனேற்ற வினைக்கு இவ்வினை ஓர் உதாரணமாகும். எயின்சு அன்சுடைக்கரும் கிளேர் அன்சுடைக்கரும் சேர்ந்து இவ்வினையைக் கண்டறிந்தனர். ஆனால் முதலில் போரோடின் இக்கண்டுபிடிப்பை வெளியிட்டார். 1861 இல் வெள்ளி அசிட்டேட்டில் இருந்து மெத்தில் புரோமைடைத் இவர் தயாரித்தார் [5].
இவ்வினையைக் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன [6][7].
பாதர ஆக்சைடும் இவ்வினை மாற்றத்தை பாதிக்கிறது [8][9].
வினைவழிமுறை
[தொகு]அன்சுடைக்கர் வினையின் வினைவழிமுறையில் கரிம இயங்குறுப்பு இடைநிலைகள் பங்கேற்கின்றன என்று நம்பப்படுகிறது. கார்பாக்சிலிக் அமிலத்தின் வெள்ளி உப்பு 1 விரைவாக புரோமினுடன் வினைபுரிந்து அசைல் ஐப்போகாலைட்டு இடைநிலையாக உருவாகிறது 2. ஈரியங்குறுப்பு இணை உருவாக்கம் 3 இயங்குறுப்பு கார்பாக்சிலேற்ற நீக்கத்தை அனுமதித்து ஈரியங்குறுப்பு இணையாக உருவாகிறது 4 . இது விரைவில் மீண்டும் இணைந்து தேவையான ஆலைடாக உருவாகிறது 5. வினையில் உருவாகும் ஆலைடு வகையின் முன்னுரிமை முதல்நிலை> ஈரிணைய> மூவிணைய என்ற போக்கில் உருவாகிறது.
வேறுபாடுகள்
[தொகு]கார்பாக்சிலிக் அமிலங்களின் வெள்ளி உப்புகள் அயோடினுடன் சேர்ந்து புரியும் வினையை சிமோனினி வினை என்கின்றனர். இவ்வினையை வியன்னா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அடோல்ப் இலைபென்னின் மாணவர் ஏஞ்சலோ சிமோனினி கண்டுபிடித்த காரணத்தால் இப்பெயர் பெற்றது. வினைபொருட்களின் விகிதங்கள் இவ்வினையில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. 1:1 விகிதத்தில் உப்பு மற்றும் அயோடின் பயன்படுத்தப்பட்டால் ஆல்கைல் அயோடைடு உருவாகிறது. 2:1 விகிதமெனில் RCOOR சேர்மமும், 3:2 விகிதமெனில் இரண்டு விளைபொருட்களும் உருவாகின்றன [6][10][11]
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cläre Hunsdiecker, et al. U.S. Patent # 2,176,181.
- ↑ Heinz Hunsdiecker; Cläre Hunsdiecker (1942). "Über den Abbau der Salze aliphatischer Säuren durch Brom". Ber. 75 (3): 291–297. doi:10.1002/cber.19420750309.
- ↑ Borodin, A. (1861). "Ueber Bromvaleriansäure und Brombuttersäure". Ann. 119: 121–123. doi:10.1002/jlac.18611190113.
- ↑ Allen, C. F. H.; Wilson, C. V. (1955). "Methyl 5-bromovalerate". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv3p0578.; Collective Volume, vol. 3, p. 578
- ↑ Jack Jie Li (2003). Name Reactions: A Collection of Detailed Mechanisms and Synthetic ... Springer Science & Business Media. p. 328.
- ↑ 6.0 6.1 Johnson, R. G.; Ingham, R. K. (1956). "The Degradation of Carboxylic Acid Salts by Means of Halogen - the Hunsdiecker Reaction". Chem. Rev. 56 (2): 219–269. doi:10.1021/cr50008a002.
- ↑ Wilson, C. V. Org. React. 1957, 9, 341. (Review)
- ↑ Meek, J. S.; Osuga, D. T. (1973). "Bromocyclopropane". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv5p0126.; Collective Volume, vol. 5, p. 126
- ↑ Lampman, G. M.; Aumiller, J. C. (1988). "Mercury(II) oxide-modified Hunsdiecker reaction: 1-Bromo-3-chlorocyclobutane". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv6p0179.; Collective Volume, vol. 6, p. 179
- ↑ Simonini, A. (1892). "Über den Abbau der fetten Säuren zu kohlenstoffärmeren Alkoholen". Monatshefte für Chemie 13 (1): 320–325. doi:10.1007/BF01523646.
- ↑ Simonini, A. (1893). "Über den Abbau der fetten Säuren zu kohlenstoffärmeren Alkoholen". Monatshefte für Chemie 14 (1): 81–92. doi:10.1007/BF01517859.