போரேட்டு கண்ணாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலிபோர்னியாவிலுள்ள ஒரு பழைய போராக்சு தொழிற்சாலை

போரேட்டு கண்ணாடிகள் (Borate glasses) சிலிக்கேட்டு கண்ணாடிகளை விட அதிக அளவு வன்கார அயனிச் செயல்பாட்டைக் கொண்டுள்ளன. [1] போரேட்டு கண்ணாடிகள் அவற்றின் ஒளியியல் பண்புகளிலும் பெரிய வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. [2]

மின்காப்பு மற்றும் கட்டமைப்புக்கு உதவும் கண்ணாடி இழைகள் உற்பத்தி செய்வதற்குமான போரான் கலந்த கண்ணாடி இழைகள் உருவாக்குவதுதான் உலகில் போரான் சேர்மங்களின் மிகப் பெரிய பயன்பாடாகும். [3] மொத்த உலகளாவிய பயன்பாட்டில் பாதி என இப்பயன்பாடு கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வகைப் பயன்பாடுகளில் போராக்சு அல்லது போரான் ஆக்சைடாக போரான் காணப்படுகிறது. போரோ சிலிக்கேட்டாக கண்ணாடியின் கட்டமைப்பு வலிமையை சேர்க்கிறது. அல்லது தூய சிலிக்காவின் உருகும் வெப்பநிலையைக் குறைக்க உதவும் ஓர் இளக்கியாக போரான் சேர்க்கப்படுகிறது. இவ்வுருவாக்கத்தில் அதிக வெப்பநிலை பராமரிக்கப்படுவதால் இழைகளாக வெளியேறுவதும் , தூய்மையான நிலையில் வேலை செய்வதும் கடினமாகும். .

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 2014-12-01. பார்க்கப்பட்ட நாள் 2013-05-28.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. http://www.hindawi.com/isrn/ceramics/2012/428497/
  3. http://ec.europa.eu/enterprise/sectors/chemicals/files/docs_studies/annex_use_glass_glass_fibre_en.pdf
"https://ta.wikipedia.org/w/index.php?title=போரேட்டு_கண்ணாடி&oldid=3147457" இலிருந்து மீள்விக்கப்பட்டது