உள்ளடக்கத்துக்குச் செல்

போரிஸ் பொடோல்ஸ்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இயற்பியலாளரான போரிஸ் பொடோல்ஸ்கி 1896 ஆம் ஆண்டில், ரஷ்யாவில் உள்ள, தாகன்ராக் என்னும் இடத்தைச் சேர்ந்த யூதக் குடும்பமொன்றில் பிறந்தார். இவர், அல்பர்ட் ஐன்ஸ்டீன், நேதன் ரோசென் ஆகியோருடன் இணைந்து ஈபிஆர் முரண்தருகுழப்பம் எனப் பரவலாக அறியப்படும் கருத்தை முன்வைத்தார். இது, குவாண்டம் விசையியலின் விளக்கம் தொடர்பான விவாதத்துக்குத் தூண்டுகோலாக அமைந்தது. 1933 ஆம் ஆண்டில் பொடோல்ஸ்கியும், லெவ் லாண்டோ என்பாரும், சிறப்புச் சார்புக் கோட்பாட்டில் தொடங்கி, சோதனைசார்ந்த விதிகளையன்றிக் கோட்பாட்டு முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மின்காந்தவியல் தொடர்பான பாடநூல் ஒன்றை எழுத எண்ணினர். பொடோல்ஸ்கி சோவியத் ஒன்றியத்தில் இருந்து இடம்பெயர்ந்ததால் இந்த எண்ணம் கைகூடவில்லை. எனினும் அவர்கள் இதற்கெனத் தயாரித்த சுருக்க வரைவை அடிப்படையாகக் கொண்டு லெவ் தாவிதோவிச் ஈ. லிவ்சிட்ஸ் என்பவருடன் சேர்ந்து புலங்கள் பற்றிய மரபுக் கோட்பாடு (1951) என்னும் நூலை ஆக்கினர். பொடோல்ஸ்கி கே. குன்ஸ் என்பாருடன் இணைந்து மின்னியக்கவியலின் அடிப்படைகள் (1969) என்னும் நூலை வெளியிட்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=போரிஸ்_பொடோல்ஸ்கி&oldid=2211265" இலிருந்து மீள்விக்கப்பட்டது