போரான் டிரையசைடு
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
டிரையசிடோபோரேன் | |
| வேறு பெயர்கள்
டிரையசிடோபோரேன் | |
| இனங்காட்டிகள் | |
| 21884-15-1 | |
| ChemSpider | 29329370 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 101089385 |
| |
| பண்புகள் | |
| B(N3)3 | |
| வாய்ப்பாட்டு எடை | 136.87 கி/மோல் |
| தோற்றம் | நிறமற்ற படிகங்கள் |
| கரைதிறன் | டை எத்தில் ஈதரில் கரையும் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
போரான் டிரையசைடு (Boron triazide) என்பது B(N3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டிரையசிடோபோரேன் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. போரான் மற்றும் நைட்ரசன் சேர்ந்து உருவாகும் இது வெப்பவியல் ரீதியாக நிலையற்ற சேர்மமாக உள்ளது. சேர்மத்தில் நைட்ரசன் உள்ளடக்கம் 92.1% (நிலையான அணு எடையின்படி) ஆகும். போரான் டிரையசைடு முறையாக, போரேனின் டிரையசிடோ வழிப்பெறுதியாகவும் ஒரு சகப்பிணைப்பு கனிம அசைடாகவும் கருதப்படுகிறது. தன்னிச்சையான வெடிப்பு சிதைவுக்கு உள்ளாகும் தன்மையைக் கொண்ட இந்த உயர் ஆற்றல் சேர்மம், முதன்முதலில் 1954ஆம் ஆண்டில் மியூனிக்கு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஈகோன் வைபெர்க்கு மற்றும் ஓர்சுட்டு மிசோ ஆகியோரால் விவரிக்கப்பட்டது.[1]
தயாரிப்பு
[தொகு]டை எத்தில் ஈதரில் உள்ள ஐதரசோயிக் அமிலக் கரைசலுடன் -20 °செல்சியசு வெப்பநிலை முதல் -10 °செல்சியசு வெப்பநிலை வரையிலான வெப்பநிலையில் டைபோரேனைச் சேர்த்து போரான் டிரையசைடைத் தயாரிப்பது முதல் தயாரிப்பு முறையாகும். இத்தொகுப்பு வினையானது மோனோ அசிடோபோரேன் (BH2N3) மற்றும் டை அசிடோபோரேன் (BH(N3)2) ஆகிய இடைநிலைச் சேர்மங்கள் வழியாக நிகழ்கிறது.[1]
- B2H6 + 6 HN3 → 2 B(N3)3 + 6 H2
அதிக வெற்றிடத்தில் திண்ம வெள்ளி அசைடு மீது போரான் முப்புரோமைடு ஆவியைச் செலுத்துவதன் மூலமும் இச்சேர்மத்தைப் பெறலாம்.[2]
- BBr3 + 3AgN3 → B(N3)3 + 3AgBr
இதே போன்றதொரு வாயு-நிலைத் தொகுப்பு முறையில், போரான் முக்குளோரைடுக்கும் ஐதரசோயிக் அமிலத்திற்கும் இடையிலான தன்னிச்சையான வினை பயன்படுத்தப்படுகிறது.[3][4]
- BCl3 + 3HN3 → B(N3)3 + 3HCl
பண்புகள்
[தொகு]இச்சேர்மம் நிறமற்ற படிகங்களாக உருவாகிறது. இவை குறைந்த வெப்பநிலையில் மட்டுமே நிலைப்புத்தன்மையுடன் இருக்கும். -35 °செல்சியசு வெப்பநிலைக்கு மேற்பட்ட வெப்பநிலையில், இது வெடிப்புடன் சிதைவடையக்கூடும். வாயு நிலையில், உருவாகும் போரான் டிரையசைடு அறை வெப்பநிலையில் 60 நிமிடங்களுக்குள் நைட்ரசன் வாயுவை வெளியேற்றிச் சிதைவடைவதன் மூலம், BN3 மற்றும் BN ஆகிய மூலக்கூறு வாய்ப்பாடுகளைக் கொண்ட போரான் நைட்ரைடுகளை உருவாக்குகிறது. இச்சேர்மம் ஒளியை உறிஞ்சும் வரம்பான சுமார் 230 நானோமீட்டர் அலைநீளத்திலான புற ஊதா கதிர்வீச்சைப் பயன்படுத்துவதன் மூலமும் இவ்வினைகளைத் தொடங்கலாம்.[3][4][5]
- B(N3)3 → BN3 + 3N2
- B(N3)3 → BN + 4N2
நீருடன் தொடர்பு கொள்ளும்போது, இது நீராற்பகுப்புக்கு உட்பட்டு ஐதரோசோயிக்கு அமிலம் மற்றும் போரான் டிரையாக்சைடாக மாறுகிறது.
- 2B(N3)3 + 3H2O → 6HN3 + B2O3
சோடியம் அசைடு அல்லது இலித்தியம் அசைடு போன்ற பிற அசைடுகளுடனான வினையானது, அதற்கேற்ற டெட்ரா அசிடோபோரேட்டு கூட்டுப்பொருட்களைத் தருகிறது.[1][6]
- B(N3)3 + NaN3 → Na[B(N3)4]}}
- B(N3)3 + LiN3 → Li[B(N3)4]}}
மூலச் சேர்மமான டெட்ரா அசிடோபோரிக் அமிலத்தை (H[B(N3)4]), −60 °செல்சியசுக்கும் குறைவான வெப்பநிலைகளில் பெறலாம்.[1]
பயன்கள்
[தொகு]குறைந்த நிலைத்தன்மை காரணமாக, இந்த சேர்மம் அதிக ஆற்றல் கொண்ட பொருளாகப் பயன்படுத்தப்படுவதில்லை. இருப்பினும், டெட்ரா அசிடோபோரேட்டு வழிப்பெறுதிகள் மற்றும் குயினோலின், பைரசின் அல்லது 2,2,6,6-டெட்ராமெத்தில்பிப்பெரிடின் போன்ற காரங்களுடன் கூடிய கூட்டுச்சேர்மங்கள் இந்த பயன்பாட்டிற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளன.[7] இந்த சேர்மத்தின் வாயு-நிலை சிதைவு, போரான் நைட்ரைடுடன் மேற்பரப்புகளைப் பூசுவதற்கான ஒரு முறையாகவும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 Wiberg, Egon; Michaud, Horst (1954-07-01). "Notizen: Zur Kenntnis eines Bortriazids B(N3)3". Zeitschrift für Naturforschung B 9 (7): 497–499. doi:10.1515/znb-1954-0715. பன்னாட்டுத் தர தொடர் எண்:1865-7117.
- ↑ Liu, Fengyi; Zeng, Xiaoqing; Zhang, Jianping; Meng, Lingpeng; Zheng, Shijun; Ge, Maofa; Wang, Dianxun; Kam Wah Mok, Daniel et al. (2006). "A simple method to generate B(N3)3" (in en). Chemical Physics Letters 419 (1–3): 213–216. doi:10.1016/j.cplett.2005.11.082. Bibcode: 2006CPL...419..213L. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0009261405018129.
- 1 2 3 Mulinax, R. L.; Okin, G. S.; Coombe, R. D. (1995). "Gas Phase Synthesis, Structure, and Dissociation of Boron Triazide" (in en). The Journal of Physical Chemistry 99 (17): 6294–6300. doi:10.1021/j100017a007. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3654. https://pubs.acs.org/doi/abs/10.1021/j100017a007.
- 1 2 Al-Jihad, Ismail A.; Liu, Bing; Linnen, Christopher J.; Gilbert, Julanna V. (1998). "Generation of NNBN via Photolysis of B(N 3) 3 in Low-Temperature Argon Matrices: IR Spectra and ab Initio Calculations" (in en). The Journal of Physical Chemistry A 102 (31): 6220–6226. doi:10.1021/jp9812684. பன்னாட்டுத் தர தொடர் எண்:1089-5639. Bibcode: 1998JPCA..102.6220A. https://pubs.acs.org/doi/10.1021/jp9812684.
- ↑ Travers, Michael J.; Gilbert, Julanna V. (2000). "UV Absorption Spectra of Intermediates Generated via Photolysis of B(N 3) 3, BCl(N 3) 2, and BCl 2 (N 3) in Low-Temperature Argon Matrices †" (in en). The Journal of Physical Chemistry A 104 (16): 3780–3785. doi:10.1021/jp993939j. பன்னாட்டுத் தர தொடர் எண்:1089-5639. Bibcode: 2000JPCA..104.3780T. https://pubs.acs.org/doi/10.1021/jp993939j.
- ↑ Wiberg, Egon; Michaud, Horst (1954-07-01). "Notizen: Zur Kenntnis eines ätherlöslichen Lithiumborazids LiB(N3)4". Zeitschrift für Naturforschung B 9 (7): 499. doi:10.1515/znb-1954-0716. பன்னாட்டுத் தர தொடர் எண்:1865-7117.
- ↑ Fraenk, Wolfgang; Habereder, Tassilo; Hammerl, Anton; Klapötke, Thomas M.; Krumm, Burkhard; Mayer, Peter; Nöth, Heinrich; Warchhold, Marcus (2001). "Highly Energetic Tetraazidoborate Anion and Boron Triazide Adducts †" (in en). Inorganic Chemistry 40 (6): 1334–1340. doi:10.1021/ic001119b. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:11300838. https://pubs.acs.org/doi/10.1021/ic001119b.
மேலும் வாசிக்க
[தொகு]- Fraenk, W.; Klapötke, T. M. (2002). "Recent Developments in the Chemistry of Covalent Main Group Azides.". In Meyer, G.; Naumann, D.; Wesemann, L. (eds.). Inorganic Chemistry Highlights. Wiley-VCH Verlag. pp. 259–265. ISBN 3-527-30265-4.