போராசு கணவாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போராசு கணவாய்
Borasu Pass
Borasupass22.jpg
போராசு கணவாய் முன்பக்கம்
ஏற்றம்5,450 மீ (17,881 அடி)[1]
அமைவிடம்இமாச்சல் பிரதேசம், கின்னவூர்மா வட்டம்
மலைத் தொடர்மேற்கத்திய கார்வால்-இமாச்சல் இமயமலை தொடர்
ஆள்கூறுகள்31°14′00″N 78°29′00″E / 31.23333°N 78.48333°E / 31.23333; 78.48333ஆள்கூறுகள்: 31°14′00″N 78°29′00″E / 31.23333°N 78.48333°E / 31.23333; 78.48333
இலாம்யூங்காவில் இருந்து போஆசு கணவாயின் தோற்றம்
இரத்தாதோ முகாமிலிருந்து போராசு கணவாய்

போராசு கணவாய் (Borasu Pass) இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் இமயமலையில் கடல் மட்டத்திலிருந்து 5450 மீட்டர் உயரத்தில் இருக்கும் ஒரு கணவாயாகும்[1]. பாரா-சூ கணவாய் என்ற பெயராலும் இக்கணவாய் அழைக்கப்படுகிறது. திபெத் எல்லைக்கு அருகில் , உத்தரகாண்டம் இமாச்சலப் பிரதேசம் மாநிலங்களுக்கு இடையில் போராசு கணவாய் அமைந்துள்ளது. அர் கி தூன் சமவெளியையும் கின்னவுர் சமவெளியையும் இணைக்கும் பண்டைய வர்த்தகப் பாதையாக இக்கணவாய் இருந்துள்ளது.

உத்தரகாண்டத்தை இமாச்சலப் பிரதேசத்திலிருந்து போராசு கணவாய் பிரிக்கிறது. திபெத் எல்லைக்கு சிலகிலோமீட்டர் தொலைவிலேயே இக்கணவாய் அமைந்துள்ளது. போராசு கணவாயின் கிழக்குப் பகுதி டோன்சு சமவெளியில் இருந்து வெளிவருவது போன்றும், வடமேற்குப் பகுதி பாசுபா சமவெளியுடன் இணைந்தும் காணப்படுகிறது[2]. வடமேற்குத் தொடர் யூகியா பனியாற்றிலிருந்து கீழிறங்கியும் வருகிறது. இக்கணவாய்க்கு அருகில் இமாச்சல் பகுதியில் 20.3 கிலோமீட்டர் தொலைவில் சிட்குல் என்ற கிராமமும், உத்தரகாண்டம் பகுதியில் ஒசுலா கிராமமும் அருகிலுள்ள கிராமங்களாக உள்ளன.

புல்வெளிகள் வழியாக இக்கணவாய் பகுதியை அணுகமுடியும். பந்தர் புஞ்சு, கலா-நாக் அல்லது கருப்பு உச்சி, சுவர்க்கரோகிணி, அர் கி தூன் மலைப்பகுதிகளை இக்கணவாயிலிருந்து பார்க்கமுடியும்.

காலநிலை[தொகு]

கோடை காலத்தில் இக்கணவாய்ப் பகுதியில் 0 ° செ வெப்பநிலைக்கும் கீழ் செல்கிறது. நவம்பர் மாதத்திற்கு பின்னர் இவ்வெப்பநிலை மேலும் பல பாகைகள் கடுமையாகக் குறைகிறது. பனிப்படிவு பாசுபா சமவெளியில் சற்று குறைவான அளவில் உள்ளது. டோன்சு சம்வெளியுடன் ஒப்பிடுகையில் மழைப்பொழிவு பெரும்பால்லும் பொதுவானது ஆகும். பொதுவாக அக்டோபர் மாதத்திற்குப் பின் பனிப்பொழிவு ஆரம்பமாகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போராசு_கணவாய்&oldid=2177068" இருந்து மீள்விக்கப்பட்டது