போய்கெல்லெய்டு வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
போய்கெல்லெய்டு வினை
பெயர் மூலம் வர்கில் காரல் போய்கெல்லெய்டு
வினையின் வகை மறுசீராக்கல் வினை

போய்கெல்லெய்டு வினை (Boekelheide reaction) என்பது ஒரு மறுசீராக்கல் வினையாகும். இவ்வினையில் α-பிக்கோலின்-என்-ஆக்சைடுகள் மறுசீராக்கல் அடைந்து ஐதராக்சிமெத்தில்பிரிடின்களாக மாறுகின்றன. 1954 ஆம் ஆண்டு வர்கில் போய்கெல்லெய்டு முதன்முதலில் இவ்வினையைக் கண்டுபிடித்தார். இதனால் அவர் பெயரே வினைக்கு சூட்டப்பட்டு போய்கெல்லெய்டு வினை என அழைக்கப்படுகிறது [1]. (~140°செ) வெப்பநிலையில் அசலாக இவ்வினை அசிட்டிக் நீரிலியைக் கொண்டே நிகழ்த்தப்படுகிறது. டிரைபுளோரோ அசிட்டிக் நீரிலியைக் கொண்டும் அறை வெப்பநிலையில் வினையை நிகழ்த்த முடியும் [2]

ஒட்டுமொத்த போய்கெல்லெய்டு வினை

.

வினை வழிமுறை[தொகு]

டிரைபுளோரோ அசிட்டிக் நீரிலியிலிருந்து என்-ஆக்சைடு ஆக்சிசனுக்கு ஓர் அசைல் குழுவை மாற்றும் செயலுடன் போய்கெல்லெய்டு வினையின் வழிமுறை தொடங்குகிறது. பின்னர் டிரைபுளோரோ அசிட்டேட்டு எதிர்மின் அயனியால் α- மெத்தில் கார்பன் புரோட்டான் நீக்கம் செய்யப்படுகின்றது. இதனால் [3.3]-சிக்மாபிணைப்பு நகர்வு மறுசீராக்கல் வினைக்கு உகந்ததாக மூலக்கூறுகள் தயாரிக்கப்பட்டு டிரைபுளோரோ அசிட்டேட்டு மெத்தில்பிரிடின் உருவாகிறது. நீராற்பகுப்பால் டிரைபுளோரோ அசிட்டேட்டு ஐதராக்சி மெத்தில் பிரிடினை வெளியிடுகிறது.

போய்கெல்லெய்டு வினையின் வழிமுறை

மேற்கோள்கள்[தொகு]

  1. Boekelheide, V.; Linn, W. J. (March 1954). "Rearrangements of N-Oxides. A Novel Synthesis of Pyridyl Carbinols and Aldehydes". Journal of the American Chemical Society 76 (5): 1286–1291. doi:10.1021/ja01634a026. 
  2. Fontenas, C.; Bejan, E.; Haddou, H. Aït; Balavoine, G. G. A. (23 September 2006). "The Boekelheide Reaction: Trifluoroacetic Anhydride as a Convenient Acylating Agent". Synthetic Communications 25 (5): 629–633. doi:10.1080/00397919508011399. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=போய்கெல்லெய்டு_வினை&oldid=2750090" இருந்து மீள்விக்கப்பட்டது