போயிங் ஈ-3 சென்ட்ரி
போயிங் ஈ-3 சென்ட்ரி (Boeing E-3 Sentry) என்பது அமெரிக்க வான்படை, நேட்டோ, பிரெஞ்சு வான்படை, சவூதி அரேபிய வான்படை போன்ற பலநாடுகள் பரவலாகப் பயன்படுத்தப்படும் வான்வழி முன்னெச்சரிக்கைக் கட்டுப்பாட்டகம் (AWACS) கண்காணிப்பு வானூர்தியாகும். இது அனைத்து வானிலையிலும் இயங்கக்கூடிய விரிவான கண்காணிப்பு, தகவல் தொடர்பு மற்றும் முன்களக் கட்டுப்பாட்டு நடுவமாகச் செயல்படுகிறது.[1] இதன் தனித்துவமான அடையாளம், வானூர்தியின் பின்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள பிரம்மாண்டமான சுழலும் ரேடார் குவிமாடமே (rotodome) ஆகும்.[2]ஈ-3 சென்ட்ரி பல தசாப்தங்களாகச் சிறந்த சேவையாற்றிய போதிலும், இதன் பயன்பாடு பல ஆண்டுகளாகிவிட்டதால், அமெரிக்க வான்படை இதற்கு மாற்றாக ஈ-7 வெட்ச்சுடெய்ல் (E-7 Wedgetail) வானூர்திகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
வரலாறு
[தொகு]முதல் போயிங் ஈ-3 சென்ட்ரி வானூர்திகள் மார்ச் 1977 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க வான்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டன.[3] பனிப்போரின் காலகட்டத்தில் சோவியத் ஒன்றியத்தின் அச்சுறுத்தல்களைக் கண்காணிக்கவும், நேட்டோ நாடுகளின் வான்வெளியைப் பாதுகாக்கவும் இவை பெரும் பங்காற்றின. 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலைவனப் புயல் நடவடிக்கையின்போது (Operation Desert Storm), ஈ-3 சென்ட்ரி வானூர்திகள் நேச நாட்டுப் படைகளின் தாக்குதல்களை ஒருங்கிணைப்பதிலும், ஈராக் படைகளின் நடமாட்டங்களைக் கண்காணிப்பதிலும் முக்கியப் பங்கு வகித்தன. அந்தப் போரின்போது வீழ்த்தப்பட்ட 40 எதிரி வானூர்திகளில், 38 வானூர்திகளை வீழ்த்துவதற்கு ஈ-3 கட்டுப்பாட்டாளர்களே வழிகாட்டினர்.
வடிவமைப்பு
[தொகு]ஈ-3 சென்ட்ரியின் அடிப்படை வடிவமைப்பு, வெற்றிகரமான போயிங் 707-320பி (Boeing 707-320B) வணிக வானூர்தியின் கட்டமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்டது. பனிப்போரின் உச்சத்தில், அமெரிக்க வான்படையின் வான்வழிப் பாதுகாப்பு, ஒருங்கிணைப்புத் தேவைகளை நிறைவு செய்வதற்காக, இது தனித்துவமான வடிவமைக்கப்பட்டது. இதன் முதன்மை ரேடார் அமைப்பு, தரை மட்டத்திலிருந்து, படைமண்டலம்) வரையுள்ள 400 கிலோமீட்டர்களுக்கும், மேலான சுற்றளவில் உள்ள வான்வழி இலக்குகளைத் துல்லியமாகக் கண்டறியும் திறன் கொண்டது. இந்த வானூர்தியானது வானில் பறந்துகொண்டிருக்கும்போதே எரிபொருள் நிரப்பும் வசதி கொண்டது. பறந்து கொண்டே, நூற்றுக்கணக்கான எதிரி, நட்பு வானூர்திகளை ஒரே நேரத்தில் கண்காணிக்கவும் வழிகாட்டவும் முடிகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Eglin unit helps AWACS with first-time, in-air update". Air Force Materiel Command. Retrieved 2026-03-30.
- ↑
Kozakoff, D. J. (2010). Analysis of Radome-enclosed Antennas. Artech House antennas and propagation library (2 ed.). Norwood, Massachusetts: Artech House. p. 3. ISBN 9781596934429. Retrieved 22 November 2024.
In 1941, the first in-flight radome was a hemispherical nose radome fabricated from Plexiglas. It protected an experimental S-band, Western Electric radar flown in a B018A aircraft.
- ↑ "TINKER HISTORY: Boeing E-3 Sentry". Tinker Air Force Base. Retrieved 2026-03-30.